பயனர்:Rakshandakrish/மணல்தொட்டி
==M.R.ஸ்ரீனிவாசன்==
பெயர் : M.R.ஸ்ரீனிவாசன். பிறப்பு : ஜனவரி 5, 1930. பெங்களூர் ,கர்நாடகா. தேசியம் : இந்தியன். தொழில் : பொறியாளர். விருதுகள் : பத்ம விபூஷன் (2015), பத்ம ஸ்ரீ (1984).
ஸ்ரீனிவாசன் ,இவரது முழு பெயர் மல்லூர் ராமசாமி ஸ்ரீனிவாசன். இவர் ஜனவரி 5, 1930 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் ஓர் இந்திய அணு விஞ்ஞானி மற்றும் ஓர் பொறியாளர் ஆவார். அவர் இந்தியாவின் அணு மின் திட்டம் மற்றும் கனநீர் உயர் அழுத்த அணு உலை வளர்ச்சியில் ஒரு முக்கிய பங்கு வகித்துள்ளார். அவர் பத்ம விபூஷன் விருதை பெற்றார்
.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தொகுஸ்ரீனிவாசன் அவர்கள் எட்டு உடன் பிறப்புகளுள் மூன்றாவது பிள்ளை ஆவார். இவர் 1930 ஆம் ஆண்டு பெங்ளூரில் பிறந்தார். இவர் அவரது பள்ளிப்படிப்பை மைசூரில் உள்ள இடைநிலைக் கல்லூரியில்,அறிவியல் பிரிவில் ,சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தை மொழிப்பாடமாக தேர்ந்தெடுத்து தனது பள்ளிப்படிப்பை முடித்தார். அவர் இயற்பியலில் உள்ள பற்றால் M.விஸ்வேஸ்வராய அவர்களால் புதியதாக தொடங்கப்பட்ட பொறியியல் கல்லூரியில் 1950 ஆம் ஆண்டு இயந்திரப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். பின்னர் 1952 ஆம் ஆண்டு முதுகலைப் பட்டம் பெற்றார். தொடர்ந்து 1954 ஆம் ஆண்டு கனடாவில் உள்ள மெக்கில் பழ்கலைக்கழகத்தில் தத்துவ மருத்துவர் பட்டம் பெற்றார்.
தொழில் மற்றும் பிறபொறுப்புகள்
தொகு1955 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் டாக்டர்.ஸ்ரீனிவாசன் அவர்கள் அணுசக்தித் துறையில் சேர்ந்தார். அவர் டாக்டர்.ஹொமி பாபா வோடு முதல் அணு உலை 'அப்சரா' கட்டும் பணியில் இடுபட்டிருந்தார். டாக்டர்.ஸ்ரீனிவாசன் அவர்கள் 1959 ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் அணு மின் நிலையம் கட்டுமான அமைப்பில் முக்கியத் திட்டப் பொறியாளராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து சென்னை அணு மின் நிலையத்தில் 1967 ஆம் ஆண்டு தலைமைத் திட்டப் பொறியாளராக நியமிக்கப்பட்டார். பின்னர் 1974 ஆம் ஆண்டு அணுசக்தித் துறையில் இயக்குனராகவும் 1984 ஆம் ஆண்டு தலைவராகவும் நியமிக்கப்பட்டார். இந்த கொள்ளவில் நாட்டின் அனைத்து அணுசக்தி திட்டங்களில் அவர் திட்டமிடுதல்,செயல் படுத்துதல், என பல பொறுப்புகளில் அவர் இருந்தார். 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அணுமின் கழகம் உருவாக்கப்ப்ட்டது ,இதற்கு டாக்டர்.ஸ்ரீனிவாசன் நிறுவனத் தலைவராக நியமிக்கப்பட்டார். 18 அணுமின் அலகுகள் அவர் பொறுப்புகளில் இருந்தது.
சர்வதேச அணு சக்தி முகமையில், டாக்டர்.ஸ்ரீனிவாசன் அவர்கள் 1990 முதல் 1992 வரை சிரேஷ்ட ஆலோசகராக இருந்தார். இந்திய அரசாங்கத்தில் திட்டக்கமிஷனில், 1996 முதல் 1998 வரை உறுப்பினராக இருந்தார்.
விருதுகள் மற்றும் மரியாதைகள்
தொகு- பத்ம பூஷன், 1990.
- பத்ம ஸ்ரீ, 1984.
- நீர்ப்பாசனம் மற்றும் மின் மத்திய வாரியத்தின் வைர விழா விருது.
- அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான சஞ்சய் காந்தி விருது.
- பொறியாளர்கள் நிறுவனத்தின் சிறந்த வடிவமைப்பாளர்கான விருது.
- அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்திற்கான ஓம் பிரகாஷ் பாசின் விருது.
- இந்திய அறிவியல் மாநாட்டில் இருந்து ஹோமி பாபா விருது.
- பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வராய கல்லூரியின் மூலம் புகழ் பெற்ற முன்னாள் மாணவர் விருது.
- இந்திய அணுசக்தி சமூகத்தின் ஹோமி பாபா வாழ்க்கை முறை விர
குறிப்பரை
தொகு- "Advani, Amitabh Bachchan, Dilip Kumar get Padma Vibhushan". . Bharti Jain. The Times of India. 25 January 2015. Retrieved 26 January 2015.
- "Life Time Contribution Award In Engineering Fact sheet" Association of Separation Scientists and Technologists. Retrieved 25 Jan 2015
- "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Retrieved July 21, 2015.
வெளி இணைப்புகள்
தொகு- http://www.asset.org.in/Archtechts%20of%20Indian%20Nuclear%20Programme.pdf
- http://dae.nic.in/?q=node/394
- http://www.asianscientist.com/features/m-r-srinivasan-former-chairman-indian-atomic-energy-comission-nehru-centre/
- http://www.dianuke.org/understand-liability-srinivasan/
- http://www.business-standard.com/article/opinion/m-r-srinivasan-why-kudankulam-nuke-plant-is-viable-111100900019_1.html