பயனர்:Ranjithkumar athulya/மணல்தொட்டி

பழையார் தமிழ்நாட்டில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஊர் சீர்காழி ஆகும். இவ்வூருக்கு பதின்மூன்று பெயர்கள் உள்ளன, அவை: காழி, சீகாழி, வேணுபுரம், புகலி, வெங்குரு, பிரமபுரம், சண்பை ஆகியன ஆகும். சைவ சமய நால்வர்களில் ஒருவரான திருஞானசம்பந்தர் அவதரித்த திருத்தலம் இதுவாகும். தமிழிசை மூவர்களன முத்துதாண்டவர், அருணாசல கவிராயர், மாரிமுத்தாப்பிள்ளை ஆகியோர் பிறந்த ஊர் இதுவாகும். மேலும் திரையிசை பாடகர் சீர்காழி கோவிந்தராஜன் பிறந்ததும் இவ்வூராகும். இவ்வூரிலிருந்து இருபது கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள அழகிய கடற்கரை கிராமம் பழையார் ஆகும். இவ்வூர் கொள்ளிடம் ஒன்றியம் புதுப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்டு அமைந்துள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் இரண்டாவது பெரிய மீன்பிடி துறைமுகம் இதுவாகும். இங்கிருந்து பல்வேறு நாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் பல்வேறு வகை மீன்களும், இறால், நண்டு போன்ற கடல் வாழ் உயிரனங்களும் தினந்தோறும் ஏற்றுமதி செய்யப்படுகின்றது. இங்கு அலையாத்திக்காடுகள் காணப்படுகின்றது. 2004ம் ஆண்டு சுனாமி பாதிப்புக்குள்ளான இக்கிராமம் பாதிப்பிலிருந்து மீண்டு தற்போது புது எழுச்சி பெற்றுள்ளது. பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இங்கு செயல்பட்டு வருகின்றன, அவற்றில் சீனிவாசா சேவை அறக்கட்டளை நிறுவனம் சிறப்பாக பல சேவைகளை புரிந்து வருகிறது.

இங்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஒன்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 160க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகிறர்கள். இங்கிருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் கொடியம்பாளையம் எனும் தீவு அமைந்துள்ளது. இங்கிருந்து படகின் மூலம் இத்தீவிற்கு செல்லலாம்.