பயனர்:RekhasaroCHN/மணல்தொட்டி

பசவண்ணர் தொகு

  கர்நாடக மாநிலம்  பீஜப்பூர் மாவட்டம் இங்குவேஸ்வர் பாகேவாடி என்னும் சிற்றூரில் வேதாந்த பண்டித ர் மாதிராஜா, மாதளாம்னிகை ஆகியோர்க்கு மகனாக கி.பி 1134-இல் பிறந்தவர் பசவேசர் என்கிற பசவண்ணர் ஆவார்.

இளமை காலம்:

          ”கல்யாண்” என்ற புகழ்மிக்க தலைநகரில் ஆட்சி செய்த ஜைன அரசன் பிஜ்ஜனன் ஆட்சியில்  கருவூல அதிகாரியாகப் பணியற்றினார். இளமையில் அவர் புரட்சிச் சிந்தனையாளராக விளங்கினார். வீடுகளில் நாய்களும், பூனைகளும்,குருவிகளும், கக்கைகளும் அவ்விதத் தடையும் இல்லாமல் விளையாடித் திரியும்போது மனிதர்களில் சிலரை வீட்டுக்காக உழைப்பவர்களை வெளியே நிறுத்துவது என்ன நியாயம்? என்று என தனது இளமை வயதிலே கேட்டவர்   

அவரது சிறப்புகள்:

                 தாழ்த்தப் பட்ட மக்கள் மீது அன்பு செலுத்தினர்.அவர்கள் வீடுகளுக்குச் சென்று வேண்டிய உதவிகளைச் செய்தார். ”எந்த தொழிலும் மற்ற தொழிலை விட உயர்ந்ததும் அல்ல;தாழ்ந்ததும் அல்ல” என்ற கொள்கையில் அனைத்துத் தொழில் புரிவோரையும் சமத்துவத்தில் ஒன்றாக இணையச் செய்தார்!அவரவர் ஆன்மீகம் பற்றி விவாதிக்க வழிவகுத்தார்.


மேற்கோள் நூல்கள்


இந்தியப் பெருமையின் முன்னோடிகள்-ஆசிரியர் தென்மொழி ஞானபண்டிதன்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:RekhasaroCHN/மணல்தொட்டி&oldid=2353037" இலிருந்து மீள்விக்கப்பட்டது