பயனர்:Rp roshan/மணல்தொட்டி
ஈச்சமொட்டை
அறிமுகம்
யாழ் பெருநகரிலே அமைந்துள்ள ஊர்களில் ஈச்சமொட்டை எனும் ஊரும் காணப்படுகின்றது. இவ்வூரானது யாழ் நகரிலிருந்து ஏறத்தாள 5 கிலோமீற்றர்கள் தொலைவில் அமைந்து காணப்படுகின்றது. இவ்வூரானது யாழ் நகரை அண்மித்துக் காணப்படுவதனாலும் இதனைச் சூழவுள்ள பிரதேசங்கள் அபிவிருத்தி அடைந்ததன் காரணமாகவும் இவ்வூரும் பிரதேச ரீதியில் அபிவிருத்தி அடைந்து காணப்படுகின்றது. சுண்டிக்குளி, கொய்யாத்தோட்டம், கொழும்புத்துறை, பாசையூர் போன்ற ஊர்களுக்கு மத்தியில் இவ்வூரானது அமைந்து காணப்படுவது இன்னொரு சிறப்பம்சமாகும். ஒரு பிரதேசத்தை நோக்கும் போது அதன் பௌதீக,பண்பாட்டு சிறப்பம்சங்களை ஆராய்வது பொருத்தமானதாகும் அந்த வகையில் அதனை ஆராய்வதன் மூலம் ஈச்சமொட்டைப் பிரதேசத்தின் தன்மைகளை இலகுவாக விளங்கிக்கொள்ளலாம்
பௌதீக அம்சங்கள்
தொகுதரைத்தோற்றம்
தொகுஇப்பிரதேசத்தின் தரைத்தோற்றத்தை அவதானிக்கும் போது இப்பிரதேசத்தின் மேற்கு பகுதியில் ஏறத்தாள 1.5 கிலோமீற்றர்கள் தொலைவில் கடல் காணப்படுவதால் இப்பிரதேசத்தின் தரைத்தோற்றம் மணல் நிறைந்த பிரதேசங்களாகக் காணப்படுவதுடன் ஆங்காங்கே வண்டல் நிறைந்த களிமண்ணைக்கொண்ட பிரதேசமாகவும் காணப்படுகின்றது. இலங்கையில் காணப்படும் 3 பிரதான தரைத்தோற்ற வேறுபாடுகளில் ஒன்றான கரையோரச் சமவெளியிலே இப்பிரதேசம் அமைந்து காணப்படுவது இப்பிரதேச தரைத்தோற்றத்தை இலகுவாக பிரதிபலிக்கின்றது.
நீர் வளம்
தொகுஒரு பிரதேசத்தின் அபிவிருத்தியை தீர்மானிக்கும் முக்கியமானதொரு வளமாக நீர் வளம் காணப்படுகிறது. அந்த வகையில் இப்பிரதேசத்தின் நீர் வளத்தை எடுத்து நோக்குமானால் இப்பிரதேசம் கடற்கரையை அண்மித்த பிரதேசமாகக் காணப்படுவதால் உவர் தன்மை கொண்ட நீர் இப்பிரதேசம் முழுவதும் காணப்படுகிறது. இப்பிரதேச வாழ் மக்கள் தங்கள் குடிநீர்த் தேவைக்காக இப்பிரதேசத்தில் பொருத்தப்பட்டுள்ள குடிநீர்குளாய்களைப் பயன்படுத்துகின்றனர், ஏனைய தேவைகளுக்காக தங்கள் வீடுகளின் கிணற்றிலுள்ள உள்ள உவர் நீரைப் பயன்படுத்துகின்றனர். வருடம் முழுவதும் இப்பிரதேசத்திலுள்ள கிணறுகளில் நீர் மட்டம் குறையாத தன்மை காணப்படுகிறது, இதற்குக் காரணம் இப்பிதேசத்திற்கு அண்மையில் கடற்கரை காணப்படுவதேயாகும். மண் வளம் இப்பிரதேசமானது கடற்கரையை அண்மித்த பிரதேசமாகக்காணப்படுவதனால் இப்பிரதேசம் மணல் சூழ்ந்த பகுதியாகக் காணப்படுகிறது. ஆனால் இப்பிரதேசம் முழுவதும் மணலால் சூழப்பட்டதாகக் காணப்படாமல் ஆங்காங்கே சில பகுதிகளில் வளமான மண்ணைக் கொண்ட பகுதியாகவும் காணப்படுகிறது. இம்மண்ணானது இயற்கையாகவோ அல்லது மனித செயற்பாடுகளின் விளைவாகவோ இப்பகுதியில் உருவாகியிருக்கலாம்.
பண்பாட்டு அம்சங்கள்
தொகுவீதிகள்
தொகுஒரு பிரதேசத்தை எடுத்துக்கொணடடால் அப்பிரதேசத்தின் அபிவிருத்திற்கு போக்குவரத்து என்பது மிகவும் அவசியமானதொன்றாகும் அந்த வகையில் ஈச்சமொட்டைப் பிரதேசத்தை நோக்ககும் போது இப்பிரதேசம் போக்குவரத்தில் நல்லதொரு அபிவிருத்தியினைக் கண்டுள்ளது எனலாம். இப்பிரதேசமானது ஒரேயொரு பிரதான வீதியை மட்டும் கொண்டுள்ளதோடு ஏனைய வீதிகள் அனைத்தும் அதிலிருந்து உட்செல்லும் சிறு வீதிகளாகக் காணப்படுகின்றன. இவ்வீதியானது பழைய பூங்கா வீதி, பூங்கன்குளம் வீதி என்பவற்றிக்கிடையில் அமைந்துள்ளதால் இப்பிரதேசத்திலுள்ள மக்களும் இப்பிரதேசத்தைச் சூழவுள்ள மக்களும் இப்பிரதேச பிரதான வீதியூடாகவே தமது போக்குவரத்தை மேற்கொள்கின்றனர். 2011ம் ஆண்டுக்கு முற்பட்ட காலப்பகுதியில் தார் வீதியாகக் காணப்பட்ட இவ்வீதி அதற்கு பிற்பட்ட காலத்தில் காபெட் இடப்பட்ட வீதியாக மாற்றப்பட்டதன் காரணமாக இவ்வீதியின் பயன்னாடு பேலும் அதிகரித்துள்ளமை இவ்வீதியின் முக்கியத்துவத்தை மேலும் உணர வைக்கின்றது.
குடியிருப்புக்கள்
தொகுஈச்சமொட்டைப் பிரதேசமானது யாழ் நகருக்கு அண்மையில் அமைந்துள்ளதனால் இப்பிரதேசத்தில் அதிகமான மக்கள் வாழ்கின்றமை பிரதான காரணமாக விளங்குகிறது. இப்பிரதேசத்திலும் இதனைச்சூழவுள்ள பிரதேசத்திலும் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய அனைத்து வசதிகளும் காணப்படுவதால் இப்பகுதியில் மக்கள் அதிகம் செறிந்து வாழ்கின்றனர். இப்பிரதேசத்திலுள்ள பிரதான வீதியின் இருமருங்கிலும் அதிகமான குடியிருப்புக்கள் காணப்படுகின்றன. யாழ்பெரு நகரில் மருத்துவசுகாதார.போக்குவரத்து,தொடர்பாடல் போன்ற அடிப்படை வசதிகள் விருத்தியுற்ற நிலையில் காணப்படுவதினால் மக்கள் தமது வாழிடத்தை அதற்கு அண்மித்த பிரதேசமாகிய இப்பிரதேசத்தைத் தெரிவு செய்து வாழ்ந்து வருகின்றனர். இப்பிரதேசத்தை அண்மித்த பிரதேசமான சுண்டிக்குளியில் யாழ் நகரின் பிரதான பாடசாலைகளான புனித பரியோவான் கல்லூரி, யாழ் சுண்டிக்குளி பெண்கள் கல்லூரி போன்றன காணப்படுவதனால் இப்பிரதேசத்திலுள்ள அதிகமான மாணவர்கள் இப்பாடசாலைகளிலே கல்வி கற்கின்றனர். மேலும் யாழ் மாவட்ட செயலகம், இலங்கை மின்சார சபை,யாழ்ப்பாணம் போன்ற நிர்வாக நிலையங்கள் அமைந்துள்ளதனால் தமது தேவைகளை இலகுவில் பூர்த்தி செய்யக்கூடிய தன்மை காணப்படுவதனால் இப்பிரதேசத்தை மக்கள் அதிகம் விரும்புகின்றனர், இதனால் அதிகமான குடியிருப்புக்களைக் கொண்ட பிரதேசமாக அப்பிரதேசம் காணப்படுகின்றது