என்னை பார்த்து கவிதை எழுத சொன்னார்கள் சரி, நானோ தமிழ் என்னும் பேரரசி வரவுக்காக கையினிலே கோல் பிடித்து காத்திருந்த நேரம் அது, மக்கள் எல்லாம் மாக்கள் ஆனார்கள் எதனாலே, இரண்டாலே ஒன்று விலைவாசி மற்றொன்று கைப்பேசி. கைப்பேசி அதற்கு மேதினியில் மேன்மை தரும் சிறப்பு அதுவே இதன் தலைப்பு, கைப்பைசி என்னிடம் பேசிய கதையை என் கவிதையில் சொல்கிறேன். எல்லா திசைகளும் எனக்குள்ளடக்கம் எல்லோர்க்கும் என்மீது இன்றைய மயக்கம், வடிவத்தில் சிறியவன் நான், வாமன ஆவதரம் நான், அடியெடுத்து நான் அளந்தால் அண்டமெல்லாம் சிறிதாகும், கையளவு இதையத்தை கடலளவு ஆசைகளை கடல்கடந்து இருந்தாலும் கட்சிதாமாக எடுத்துரைப்பேன். முக்தியிலே சிறியவன் நான் மும்மடங்கு பொழிகின்ற கீர்த்தியிலே உயர்ந்தவன் நான், கேள்வி ஞானம் உடையவன் நான். சாதி மதம் பேதம் இன்றி சமத்துவமாய் எல்லோரின் காதோரம் பேசிகின்றேன், கைக்குள்ளே வாழ்கிறேன். கன்னியர்க்கும் காளையர்க்கும் கைப்பேசி இல்லையென்றில் , அன்னையற்ற பிள்ளையன்று அனாதையாக திருந்திடுவாய், தானாக பேசினாலோ தானியாக சிரித்தப்படி போனாலே பைத்தியம் பார் போகுது என்று சொல்வார் அந்நாளில், வீதியிலே இன்றைக்கோ வாகன நெரிசலிலும் பாதிப்பேர் சிரித்தப்படி, பாதிப்பேர் உளர்கின்றான். காரணம் தான் தெரிகின்றதா, காரணம் தான் தெரிகின்றதா, கைப்பைசி என்னிடம் தான் ஊர் கதை அளக்கின்றார், உலகினையே மறக்கின்றார். மன்னனுக்கும் புலவனுக்கும் மதிகாண நட்பு அன்று, கன்னியர்க்கும் காளையர்க்கும் கைப்பேசி காதல் இன்று. பொத்தானை மறந்தாலும் போற்று இருக்கும் சட்டையில் பொத்தானை மறந்தாலும், புசித்திடவே மறந்தாலும் பெற்றோர்களை மறந்தாலும் அத்தனையும் மறந்தாலும், மனிதன் விவேக கைப்பேசி எண்ணை வித்தகனா மறப்பதில்லை. காதலனும் நோக்கியா காதலியும் நோக்கியா , காதலனும் நோக்கியா காதலியும் நோக்கியா , இதை பேதையான பெற்றோரும் பின்னோரு நாள் நோக்கியா, எல்லாமே மனிதருக்கு நோக்கியாவின் பக்கம் தான் ஏக்கம் எல்லாம் நோக்கியாவின் எண் வரிசை கைப்பேசி தான், சோற்றிற்க்கே வழி இல்லை சோணியேரிக்ஷன் உனக்கு அவசியமா, ஏரோட்டும் பிழைப்பிற்கு உனக்கு எதிர்த்தாபில் ஏர்செல் கடை எதற்கு, நோய் இல்ல வாழ்வு போதும் நோக்கியா தேவையில்லை. என்று நான் சொன்னாலும் என் கேள்விக்கு பதில் இல்லை, கைப்பேசி திரையினிலே காந்தி படம் இருப்பதில்லை, கைப்பேசி திரையினிலே காந்தி படம் இருப்பதில்லை, மைப்பூசும் நடிகையரின் மார்பழகு படம் இருக்கும் . இருக்கும் இடம் தெரியாமல் பித்தனைப்போல் பிதற்றுவோனுக்கு கைப்பேசி நஞ்சாகும் கல்லறைக்கு வழியாகும். அஞ்தற்கு அஞ்சாமல் அறிவிளிகள் போல் நடந்து கொண்டால் கைப்பேசி கொலைக்கருவி, கல்லறைக்கு வழிகாட்டி. கனத்தினிலே கைப்பேசி காதலினாலே பினமானோர் எண்ணிக்கை நான் எழுத தான் அடக்கிடுமா, கைப்பேசி காத்திருக்க கவனம் எல்லாம் அதிலிருக்க மெய் பெசி சென்றவனேன் மேல் மோதியதோ பேருந்து, இரு சக்கர வாகனத்தில் விரைவாக செல்கையிலும் பெருமை பல பேசுகின்றார் பெரும் விபத்தில் சாகுகின்றார் . மூன்று எழுத்தில் மூச்சிருக்கும் முளை எல்லாம் பேச்சிருக்கும் வானளக்கும் எஸ்.எம்.எஸ் வன்கொடுமை என்றுரைப்பேன். ஊர் உலகே உறவாடும் என்னோடு என்னையேன் தேர்தலிலே இன்று வரை சின்னமாக வைக்கவில்லை, இருந்தாலும் கைப்பேசியின் ஏற்றத்தை சொல்லிவிட்டேன், வரும் நாளில் சின்னம் என வைக்கட்டும் தேர்தலிலே, இத்தோடு இதுவரை கைப்பேசி என்னிடம் பேசி முடித்துக்கொண்டது. நானோ கவிஞன் இல்லை இங்கு சொல்லியிருக்கும் கருத்துக்களோ சுருக்கம், என் கவிதை மீது ஏற்ப்பட்டதா உங்களுக்கு சிறிது மயக்கம், என் விரல்கள் வருடிய வரிகளுக்கு கேட்கின்றேன் நன்றி வணக்கம் ....