பயனர்:SELVARAJPK/மணல்தொட்டி
கௌசிகா நதி
"கௌசிகா நதி" குருடி மலையில் ஆரம்பிகிறது.இம்மலை கோவை
மாவட்டம் ,தமிழ்நாடு,இந்தியா பகுதியில் உள்ளது.சைலன்ட் வேலிக்கு அருகில் இம்மலை உள்ளது.இந்த பகுதிகள் கவனகன் என்ற மன்னனால் ஆளப்பட்ட பகுதியாக கூறப்படுகிறது.இம்மலைக்கு குரு ரிஷி மலை என்ற பெயரும் உண்டு .
"கௌசிகா நதி "ரவத்துகொல்லன்னுர்,தெற்குபாளையம் பகுதியில்
ஆரம்பிக்கிறது .இதில் எல்லப்பள்ளம் ஓடை,தன்னசிப்பள்ளம் ஓடை , தாளமடல் பள்ளம் ஓடை ஆகியவற்றை உள்ளடக்கியது.இன் நதிக்கு வன்னத்தன்கரை என்ற பெயரும் உண்டு.
கௌசிகா நதி பயணம் பின்னர் நரசிம்மநாய்க்கன்பாளையம்,
இடிகரை அத்திப்பாளையம்,கோட்டைபாளையம் வழியாக கோவில் பாளையம் வந்தடைகிறது.கோவில்பாளயத்தில் வரலாற்று சிறப்புமிக்க சிவன் மற்றும் காளி கோவில்கள் உள்ளது.இந்த சிவன் கோவில் லிங்கம் ஆற்றின் நுரையால் எமனால் உருவாக்கப்படதாக சொல்லப்படுகிறது. கவைகாளிஅம்மன் கோவில் பழைய அரசர்களால் வழிபட்டது ஆகும் .
பழைய ஆரை நாடு என்ற பகுதிகளில் இந்த கௌசிக நதி செல்கிறது.
அடுத்து கள்ளிப்பாளையம்,மோலபாளையம்,பச்சாபாளையம் ,வடுகபாளையம் சாலையுரை அடைகிறது.இப்பகுதியில் கிடைத்த மட்பாண்ட ஓடுகள் சுமார் 2100 ஆண்டுகள் முற்பட்டது என்று அண்ணாமலை பல்கலை தொல்லியல் துறை பேராசிரியர் திரு .சிவராமகிருஷ்ணன் ஆய்வு செய்து தெரிவித்து உள்ளார்.
பின்னர் இந்நதி சுண்டமேடு,வகராயம்பாளய்ம்,பாப்பம்பட்டி,
கிட்டாம்பாளையம்,திம்மனயம்பாளையம்,புதுனல்லூர்,தெக்கலூர் , ஏரிப்பாளையம் ,கோதபாளையம் ,வ்ஞ்சிபாளையம் வழியாக திருப்பூர் மாவட்டம் சுல்தான்பேட்டை அருகில் நொய்யல் நதியில் சேர்க்கிறது.இந்த நதியை பாதுகாக்க இப்பகுதி மக்களால் "அத்திக்கடவு கௌசிகா நதி மேம்பாட்டு சங்கம்" ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.
இதன் வழி நெடுக்க பழைய கோவில்கள் உள்ளது கௌசிக நதியின்
தொன்மையை உணர்த்துகிறது.