பயனர்:Sahanamahati/மணல்தொட்டி

சிங்கப்பூர் நாடாளுமன்ற மாளிகை தொகு

சிங்கப்பூர் நாடாளுமன்ற அமைப்பைக் கொண்ட நாடாகும். சிங்கப்பூர் நாடாளுமன்றத்திற்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் மூலம் மக்களால் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

சிங்கப்பூர் 1965 ஆம் ஆண்டு ஆக‌ஸ்டு மாதம் 9 ஆம் தேரி மலேசியாவிடமிருந்து பிரிந்து தனி நாடாகச் சுதந்திரம் பெற்ற பிறகு சிங்கப்பூர் சட்டப் பேரவை என்று அழைக்கப்பட்டது.  அதன்பிறகு அது சிங்கப்பூர் பாராளுமன்றம் என்று அழைக்கப்பட்டது.

சிங்கப்பூர் குடியரசான பிறகு அதற்கென அதிபர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பாராளுமன்றத்தின் தலைவர் சபாநாயகர் ஆவார். அவருக்குப் பின் நாட்டின் பிரதம மந்திரியும் பிற மந்திரிகளும் உள்ளனர்.  நாடாளுமன்ற உறுப்பினர்களும் இலாக்காக்களின் செயலக அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் செயல்பாடுகள் சட்டம், ஒழுங்கு, தேசிய நிதி மேம்பாடு துறை சார்ந்த அமைச்சர்களின் பொறுப்பாகும்.

சிங்கப்பூரில் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறும். தேர்தல் முடிந்தவுடன் வெற்றி பெற்ற அணியைச் சார்ந்தவர்கள் பிரதம மந்திரியாகவும் அமைச்சர்களாகவும் பொறுப்பேற்பார்கள்.  ஐந்தாண்டு முடிந்தவுடன் 3 மாதங்களுக்குள் மறு தேர்தல் நடத்தப்பட்டு புதிய அமைச்சரவை பதவியேற்கும். முன்பாகவே திட்டமிட்டபடி பாராளுமன்றக் கூட்டம் நடைபெறும். 

பாராளுமன்றக் கூட்டத்தொடரின் போது முக்கிய முடிவுகள் முன்மொழியப்பட்டு, பலருடைய ஒப்புதலுக்குப் பிறகு சட்டமாக்கப்படும். சிங்கப்பூரின் தற்போதைய சபாநாயகர் திருமதி ஹலிமா யாக்கூப் ஆவார். இவர் 2013 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். சபாநாயகர்  ஒரு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருக்க வேண்டும். 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sahanamahati/மணல்தொட்டி&oldid=2250644" இலிருந்து மீள்விக்கப்பட்டது