பயனர்:Sakthiprabhu.t/மணல்தொட்டி

கே.பி.ரோஹித்கணேஷ் (19.09.1980) இவர் ஒரு சொற்பொழிவாளர் மற்றும் கட்டுரையாளர் ஆவர்.

== #

  1. இளமை ==

கே.பி.ரோஹித்கணேஷ் 1980 செப்டம்பர் மாதம் 19ஆம் தேதியன்று இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உறையூர் என்ற ஊரில் சாதாரண பால் வியாபாரிக்கு மகனாகப் பிறந்தார். இவரது இயற்பெயர் கணேஷ். விநாயகர் சதுர்த்தி நாளன்று பிறந்ததனால் இவருக்கு பெற்றோர்கள் அந்த விநாயகரின் பெயரையே வைத்து கணேஷ் என்று அழைத்தார்கள் == #

  1. கல்வி ==

இவர் உறையூர் ஆல் செயிண்ட்ஸ் ஆரம்பப் பள்ளியில் ஐந்தாம் வகுப்புவரை படித்தார். அது கிறிஸ்தவ பள்ளியாதலால், இவருக்கு இயேசு கிறிஸ்துவின் போதனைகளும் இயேசு கிறிஸ்துவின் பாடல்களும் ஆசிரியர் ரோஸி கற்றுக்கொடுத்தார். இதனால் இயேசு கிறிஸ்துவின் மீது தனது குழந்தைப் பருவத்திலேயே அளவற்ற ஈடுபாடு கொண்டிருந்தார். இந்த பள்ளியில் இவருக்கு திலக் அஹமது , நசீர் அஹமது என்ற இருவரும் நல்ல நண்பர்களாக கிடைத்தனர். இவர்கள் மூவரும் தான் பள்ளியில் மாறி மாறி முதல் மதிப்பெண் பெறுபவர்களாகவும், ஆசிரியர்களிடத்தில் ஒழுக்கமான மாணவர்களாகவும் திகழ்ந்தார்கள். இந்த பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் போது, ஆசிரியர் நல்லமணியம்மாள் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது ஆசிரியர் மீது ஒரு மரப்பல்லி விழப்போவதைக் கண்டு, முதல் பெஞ்சில் அமர்ந்திருந்த இவர் ஏறி குதித்து, தனது சிலேட்டல் (எழுது பலகை) வெளியே தட்டிவிட்டு இவர் அருகிலிருந்த மேசையில் மோதிக்கொண்டார். ரத்தம் பொல பொல வென கொட்ட ஆரம்பித்தது. ஆசிரியர் நல்லமணி தனது புடவையால் ரத்தத்தை ஒத்தி எடுத்தார். பீறிட்ட ரத்தம் நிறக்கவில்லை. உடனே அருகிலிருந்த நகராட்சி மருத்துவமனை க்கு அழைத்து சென்று அங்கு ஆறு தையல்கள் போடப்பட்டது. இது தான் அவரது வலது நெற்றியில் இன்றும் வீரத் தழும்பாக உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sakthiprabhu.t/மணல்தொட்டி&oldid=2471865" இலிருந்து மீள்விக்கப்பட்டது