பயனர்:Sankarpmk/மணல்தொட்டி

பரமக்குடி

தொகு

வணக்கம் . நான் பரமக்குடி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கணினி ஆசியராகப் பணிபுயும் ஆ.சங்கரலிங்கம் எழுதுவது. நான் எனது ஊரான பரமக்குடியை உங்களிடம் பகிர்ந்து கொள்ளப்போகிறேன். வைகை நதி ஓடுவதற்கு வலப்புறம் அமையப்பெற்ற நகரம். இந்நகரின் முக்கிய இடங்கள் பேருந்துநிலையம், புகை வண்டி நிலையம், முத்தாலம்மன் கோவில், மீனாட்சியம்மன் கோவில், பெருமாள் கோவில், ஈசுவரன் கோவில், ஆஞ்சநேயர் கோவில், திரௌபதி அம்மன் கோவில், மாதா கோவில், கீழப்பள்ளிவாசல், மேலப்பள்ளிவாசல், பொிய கடைவீதி, சின்னக்கடை வீதி, நகைக்கடை வீதி, ஐந்துமுனை சாலை, ஓட்டப்பாலம், , பொன்னையாபுரம், காட்டு்ப்பரமக்குடி, மஞ்சள்பட்டினம், மணிநகர், கிருஷ்ணா தியேட்டர், போன்ற முக்கிய இடங்களை கொண்டது. இந்நகரம் பரமக்குடி (தனிக்தொகுதி) சட்டமன்ற தொகுதியாக உள்ளது. இதன் உறுப்பினர் மருத்துவர் ஆா்.சுந்தரராஜன் ஆவார். இந்நகரம் பல்வேறு சிறப்புகளை பெற்றது. காந்தி மகான் சிறப்புரையாற்றிய இடம். பட்டு நெசவுத்தொழில் சிறப்புற நடைபெற்ற இடம். நகரைச்சுற்றி விவசாயங்கள் செழிந்த இடம். நடிகர் கமல்ஹாசன் பிறந்த இடம். என பல்வேறு சிறப்புகள். பலதரப்பட்ட மக்கள். சகோதர உணர்வோடும், பாசத்தோடும் பழகி வந்த நாட்கள் மலையேறிப்போய்விட்டன. இன்று பரமக்குடி கலவர புமியாய் காட்சியளிக்கிறது. காரணம் இங்குள்ள சிலர். மனிதனை மனிதனாகப்பார்ப்பதில்லை. மாறாக ஆடு மாடுகளின் மந்தையாகப்பார்க்கப்படுவது தான். தன் மகனுக்கு பகுத்தறிவை புகட்டுவதுற்குப்பதில் சாதிவெறியை புகட்டுகிறார்கள். இங்குள்ள மக்கள் கல்வியை விட முதலிடம் சாதிக்குத்தான். இங்கு தரமான கல்வி நிலையங்கள் போதவில்லை. தொழிற்சாலைகள் போதவில்லை. மக்கள் பல நேரம் வேலையின்றி இருப்பதால் மக்களின் சிந்தனை மத்த்தைப்பற்றியும், சாதியைப்பற்றியும் சிந்திக்கிறான். அவனுக்கு அவனின் விலை மதிப்பற்ற நேரத்தை இதில் செலவழிக்க ஆசைப்படுகிறான். அதன் மூலம் பிரபலமடைய ஆசைப்படுகிறான். மனித்த்தை மறக்கிறான். மிருகமாக மாறுகிறான். எம் நகர் முழுவதும் மனிதர்களைப்பார்க்கும் நாள் எந்நாளோ அந்நாளை நோக்கி ! மீண்டும் சந்திப்பேன்… ஆ.சங்கரலிங்கம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sankarpmk/மணல்தொட்டி&oldid=3880269" இலிருந்து மீள்விக்கப்பட்டது