பயனர்:Sebastin yesuraj 1127/மணல்தொட்டி

ஆபிரகாம்

யூதர்களின் முன்னோடி ஆவார்.கிறிஸ்தவர்களின் தந்தை எனவும் அழைக்கப்படுகிறார்

இவருக்கு சாரா என்ற மனைவி இருந்தார்.யாவே கடவுளை வணங்கினார்.

இன்றளவும் கிறிஸ்தவர்கள் இவரை பெரிதும் மதிக்கின்றனர்.விவிலியத்தின் தொடக்க நூலின் படி ஆபிரகாம் ‎ என பெயரிடப்பட்ட ஆபிராம் இஸ்ரயேல் மக்களின் முதுபெரும் தந்தை ஆவார். ஆபிரகாம் என்றப் பெயருக்கு எண்ணற்ற மக்களின் தந்தை என்பது பொருள். இவர் கிறிஸ்தவம்,யூத மதங்களில் முக்கிய நபராக கருதப்படுகிறார். மேலும் இஸ்லாம் சமயத்தில் முக்கிய தீர்க்கதரிசியாகவும் கொள்ளப்படுகிறார். இவரது வாழ்கைப் பற்றிய குறிப்புகள் விவிலியத்தின் தொடக்க நூல் 11:26-25:18[1] மற்றும் திருக்குர்ஆன் என்பவற்றில் காணப்படுகிறது.

யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம், பஹாய் சமயங்களின் புனித நூல்களில் அபிரகாமுக்கு கொடுக்கப்ப்ட்டுள்ள முக்கியத்துவத்தினால், இவை ஆபிரகாமிய சமயங்கள் என அழைக்கப்படுகின்றன.[2] பழைய ஏற்பாட்டிலும் திருக்குர்ஆனிலும் கூறப்பட்டுள்ளபடி, அபிரகாம் கடவுளால் தெரிந்துகொள்ளப்பட்டு, ஆசீர்வதிக்கப்பட்டவராவார். இவருக்கு கடவுள் மகத்தானவற்றை கொடுப்பதாக வாக்குறுதியளித்தார். கிறிஸ்தவர்கள் ஆபிரகாமை விசுவாசத்தின் தந்தை என அழைகிறார்கள். ஆபிராமுக்கு கேத்துராள் என்ற மனைவி மூலம் தோன்றிய வம்சத்தில் வந்த ஒருவரே பஹாய் சமயத்தை உருவாக்கியவர் என்பது அதன் நம்பிக்கை ஆகும்.