பயனர்:Selvan2211/மணல்தொட்டி
2008ஆம் ஆண்டில் ஏற்பட்ட சரிவுக்குப் பிறகு முதல் முறையாக இப்படி ஒரு நம்பிக்கை துளிர் விட்டுள்ளது.
நிலைமையை கூர்ந்து கவனித்தால், ஒன்று தெளிவாகும். அமெரிக்கா மற்றும் வளர்ந்த நாடுகளைப் பொருத்தவரைதான் இது உண்மை. பல பொருளாதார விமர்சகர்களுக்கு வளர்ந்த நாடுகள் என்பவை அமெரிக்கா, ஓரளவு ஐரோப்பா மற்றும் ஜப்பான் என்பதோடு முடிந்து விடுகிறது. அதேபோல், அண்மைக் காலமாக, வளரும் நாடு என்றால் சீனா மட்டுமே அவர்கள் சிந்தனையில் மேலோங்கி நிற்கிறது. இந்தியா பற்றிய சிந்தனை குறைந்துள்ளது. இதற்குக் காரணம், சில ஆண்டுகள் முன்பு வரை, சராசரியாக 8 சதவீத வளர்ச்சி கண்ட இந்தியா, தற்போது 4.8 சதவீதமாக சிறுத்து விட்டதுதான். சீனாவும் இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்திலிருந்து இப்போது 7.8 சதவீதமாக குறைந்துள்ளது. இரண்டாவது இடத்தில் இருந்த இந்தியா மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இரண்டாவது இடத்தை இந்தோனேஷியா பிடித்துவிட்டது. அதன் வளர்ச்சி விகிதம் 5.6 ஆகும். பிரேஸில் 2.2 சதவீதம் வளர்ச்சியும், ரஷ்யா 1.2 சதவீத வளர்ச்சியும் கண்டுள்ளன. "பிரிக்ஸ்' (ஆதஐஇந) அமைப்பைச் சேர்ந்த இன்னொரு நாடான தென் ஆப்ரிக்கா 1.8 சதவீத வளர்ச்சி கண்டுள்ளது. சீனாவைத் தவிர மற்ற பிரிக்ஸ் நாடுகளுடன் ஒப்பிட்டால், இந்தியாவின் 4.8 சதவீத வளர்ச்சி மிக மோசம் அல்ல என்றாலும், சரிவு "பளிச்'சென்று தெரிகிறது. பொருளாதார சீர்திருத்தங்கள் ஆக்கபூர்வமாக, வளர்ச்சிக்கு ஏதுவாக, முன் எடுத்துச் செல்லப்பட வேண்டும். குறிப்பாக, மக்கள் நல வாழ்வு, கல்வி, பொதுச் சுகாதாரம் உள்ளிட்ட சமூக நல குறியீடுகளை போர்கால அடிப்படையில் மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தில் நாடு இருக்கிறது. அதன் மூலம்தான் இந்தியாவின் வளர்ச்சி, குறைந்த பட்சம் முந்தைய நிலைக்காவது திரும்ப முடியும். எவ்வித வளர்ச்சியும் இல்லாமல், ஐரோப்பிய நாடுகள் தங்கள் நிலையை தக்கவைத்துக் கொண்டு உள்ளது என்றால் (நிபுணர்கள் கருத்தில்) அதற்குக் காரணம், சிதறிப் போகும் நிலையில் இருந்த ஐரோப்பா, சிதறாமல் ஒற்றுமையை காப்பாற்றிக் கொண்டுள்ளது என்பது மட்டும்தான். ஆனால், யதார்த்த நிலை என்னவென்றால், நமது தொழில்கூடங்களின் உற்பத்தி 2.1 சதவீதம் சரிந்துள்ளது. சென்ற ஆறுமாதங்களில் மிகக்குறைந்த உற்பத்தி விகிதம் இது. இந்த சரிவை உடனடியாக சரி செய்ய முடியாது என்று தொழில்கள் கூட்டமைப்பு ஃபிக்கி (ஊஐஇஇஐ) தலைவர் சித்தார்த் பிர்லா கருத்து தெரிவித்துள்ளார். ரிசர்வ் வங்கி தனது நிதி மற்றும் கடன் கொள்கையை ஜனவரி 28ஆம் தேதி அறிவிக்க உள்ளது. அப்போது வங்கிக் கடனுக்கான வட்டி விகிதம் குறைக்கப்பட்டால், ஒருவேளை தொழில்கூடங்களின் உற்பத்தி அதிகரிக்கத் தொடங்குவதற்கு வாய்ப்பு உண்டு. தொழில்கூட உற்பத்தி குறைவால் இரண்டு மோசமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன. முதலாவது, ஏற்றுமதி சரிவடைந்தது; இரண்டாவது, வேலை வாய்ப்புகள் குறைந்துவிட்டது. இந்நிலையில் புதிய சிந்தனைகள் தேவை. பெரிய தொழில்கூடங்களின் உற்பத்தி, நாட்டின் ஒட்டு மொத்த உற்பத்தியில் 60 சதவீதம் மட்டுமே. மீதம் 49 சதவீத உற்பத்தி சிறு தொழில்களின் மூலமே கிடைக்கிறது. அதேபோல் மொத்த ஏற்றுமதியில், 40 சதவீத பொருள்கள் சிறு தொழில்களின் உற்பத்திதான். எனவே, சிறு தொழில் துறையை சிறிய சிறிய சலுகைகள், ஊக்குவிப்புகள் மூலம் சிறப்பாக முடுக்கிவிட முடியும். அப்படிச் செய்வதன் மூலம், கால தாமதம் இல்லாமல் இந்திய பொருள்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை கணிசமாக அதிகரிக்க முடியும். ஏற்றுமதி அதிகரித்தால், நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறையும். அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வலுவடையும். அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகரிக்கும். இந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முயற்சியில் வங்கிகள் பெரும் பங்கு வகிக்க முடியும். வங்கிகள் பல வகையில் சிறு தொழில்களுக்கு உதவ முடியும். முதலாவதாக, சிறு தொழில்களுக்குத் தரப்படும் கடனுதவி வாராக்கடன் ஆகிவிடுமோ என்ற அச்சம் இருந்தால் அதை திருத்திக் கொள்ள வேண்டும். வாராக்கடனில் பெரும் பகுதி பெரிய தொழில் நிறுவனங்களுக்கு கொடுக்கப்பட்ட கடன்கள்தான் என்று ரிசர்வ் வங்கி பலமுறை தெரிவித்துள்ளது. இதன் எதிரொலியாகத்தான், பெரிய தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவதற்கு முன், அவர்களுடைய விண்ணப்பங்களையும், அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களையும் கவனமாகவும், ஆழமாகவும் பரிசீலிக்க வேண்டும் என்று அண்மையில் நிகழ்ந்த வங்கியாளர்கள் மாநாட்டில் ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் டாக்டர் கே.சி. சக்ரவர்த்தி வெளிப்படையாக கூறியுள்ளார். "கிரிஸில்' (இதஐநஉக) தரநிர்ணய அமைப்பு ஏற்கனவே தனது ஆய்வில் தெரிவித்துள்ளபடி, இந்தியாவில் இயங்குகிற சிறு தொழில் நிறுவனங்களுக்கு வங்கிகள் வழங்குகிற கடன் தொகை, அந்த நிறுவனங்களின் உண்மையான தேவையைவிட மிகவும் குறைவானதே. எந்த அளவு குறைவு என்றால், இந்தியாவில் உள்ள சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நியாயமாக கொடுக்க வேண்டிய தொகையை விட 50,000 கோடி ரூபாய் குறைவு என்று சுட்டிக்காட்டுகிறது "கிரிஸில்' தர நிர்ணய அமைப்பு. எனவே தேவைப்படும் மீதி தொகையை சம்பந்தப்பட்ட தொழில் நிறுவனங்கள் வெளியாரிடம், அதிக வட்டிக்கு கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படுகிறது. அண்மையில் ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், சிறு தொழில் கடன்கள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட வேண்டும் என்பது, ஏட்டளவில் மட்டும் அல்லாமல் செயல் அளவிலும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அவர் இன்னும் ஒருபடி மேலே போய், புதிய கருத்து ஒன்றையும் வெளியிட்டுள்ளார். சிறு தொழில் நிறுவனங்களின் சேவைகள் மற்றும் பொருள்களுக்கு தரவேண்டிய பில் பணத்தை பெரிய நிறுவனங்கள் பல மாதங்களுக்கு நிலுவையில் வைத்திருப்பதால், இதற்கு நிவாரணம் அளிக்கும் வகையில் "எலெக்ட்ரானிக் பில் ஃபேக்டரிங்' திட்டத்தின் மூலம் சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முன் கூட்டியே பணம் கிடைப்பதற்கு வழி செய்வதற்கு புதிய திட்டம் பரிசீலிக்கப்படவேண்டும் என்றும் கூறினார். இது தொடர்பான நல்ல செய்தியை 28.01.2014 அன்று வெளியிட உள்ள கடன் கொள்கையில் அவர் தெரிவிப்பார் என்று எல்லாரும் எதிர்பாக்கிறார்கள். சிறு தொழில் செழித்தால் ஏற்றுமதி பெருகும், ஏற்கனவே கூறியது போல் அதன் மூலம் அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகரிக்கும்; முக்கியமாக, வேலையில்லாத் திண்டாட்டம் குறையும். இப்படி பல வகையில் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் சிறு தொழில்களை கைதூக்கிவிடுவதற்கு ரிசர்வ் வங்கியும், மத்திய மாநில அரசுகளும் முனைப்பு காட்டவேண்டும். சலுகை வட்டியில் சரியான நேரத்தில் சரியான அளவில் கடனுதவி கிடைத்தல்; பெரிய நிறுவனங்களிடமிருந்து பில்களுக்கு தாமதம் இன்றி பணம் கிடைத்தல்; ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை, கொள்முதல் திட்டத்தை சீராக செயல்படுத்துதல்; நிர்வாக நடைமுறைகளை எளிமைப் படுத்துதல் உள்ளிட்ட புத்துயிர் ஊட்டும் திட்டங்களே சிறு தொழில்களுக்கு உந்து சக்தியாக அமையும்; நாட்டின் வளர்ச்சிக்கும் உதவும்.