பயனர்:Shanmugamveeranam/மணல்தொட்டி

புதுவை கம்பன் விழா

தொகு

தமிழில் உள்ள இதிகாசங்களில் இராமாயணமும் ஒன்று. இதனை இயற்றியவர் கல்வியில் பெரியவர் எனப் போற்றப்படும் கம்பர்.இந்நூலின் சிறப்பையும் நூலசிரியர் பெருமையையும் தமிழ் கூறு நல்லுலகுக்குத் தெரிவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் கம்பன்விழா நடத்தப்படுகிறது. இவற்றில் புதுச்சேரி நகரில் ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாம் வாரம் மூன்று நாட்கள்தொடர்ந்து நடத்தப்படும் விழா அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடியது.

சிறப்பு அழைப்பாளர்கள்

தொகு

தமிழ்நாடு மற்றும் கடல் கடந்த நாடுகளில் உள்ள தமிழறிஞர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப்பட்டு கம்ப இராமாயணம் பற்றி சொற்பொழிவுகள், பட்டிமன்றம், வழக்காடு மன்றம், விவாத மேடை, கவியரங்கம் போன்றவை நடத்தப்படும்.

போட்டிகள்

தொகு

முன்னதாக ஆண்டுதோறும் விழாவின் பொருட்டு பள்ளி, கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்களுக்கு கம்ப இராமாயணம் குறித்த பேச்சு, கட்டுரை,ஓவியப் போட்டிகள் நடத்தப்பட்டு, போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு விழாவின் துவக்க நாளன்று புதுச்சேரி மாநில முதல்வரால் ரொக்கப் பரிசும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்படும்.

பங்கேற்பாளர்கள்

தொகு

விழா நடைபெறும் மூன்று நாட்களும் நிகழ்ச்சிகளைக் காண பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசமாக வழங்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Shanmugamveeranam/மணல்தொட்டி&oldid=2274602" இலிருந்து மீள்விக்கப்பட்டது