பயனர்:Shanthiny/மணல்தொட்டி
கலாபூஷணம், சைவப்புலவர் சு.செல்லத்துரை
தொகுஈழத்தின் வட பகுதியில் உள்ள இளவாலை என்னும் கிராமத்தில் 28.03.1938 - 21.10.2021 வாழ்ந்தவர். ஆசிரியர், அதிபர், சொற்பொழிவாளர், எழுத்தாளர், நூலாசிரியர், நாடக ஆசிரியர், கவிஞர், சமூகசேவகர் எனப் பல புலமைகள் நிறைந்தவர்.
ஆரிய திராவிட பாஷாபிவிருத்தி சங்கம், கொழும்புத் தமிழ்ச் சங்கம், அகில இலங்கை சைவப்புலவர் சங்கம், யாழ் சைவபரியாலன சபை , இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம் போன்ற பல சமய , கலை இலக்கிய அமைப்புகள்,பாடசாலை அகநிலை , புறநிலை செயற்பாடுகள், ஊர் மன்ற செயற்திட்டங்கள் என பல இடங்களில் தன் சிறந்த சேவையை நிறைத்தவர்.
இலங்கை வானொலியில் சைவநற்சிந்தனைகள், இலக்கியசொற்பொழிவுகள்,திருமந்திர விளக்கவுரை போன்ற நிகழ்ச்சிகளை மிகச் சிறப்பாக நிகழ்த்தியவர்.
நூற்றுக்குமேற்பட்ட நாடகங்கள் மற்றும் கலைப்படைப்புகள், ஐம்பதுற்கு மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள், கவியரங்கம், பட்டிமன்றம், கருத்தரங்கம், பேச்சுக்கள், சமய சொற்பொழிவுகள் , பல வகை கவிதையாக்கங்கள் எனப் பல பக்கங்களில் தேர்ச்சி பெற்று அந்தந்த துறைகளில் சிறப்புடன் மிளிர்ந்தவர்.
பிறப்பு
தொகுஇளவாலையில் சின்னத்தம்பி சுப்பிரமணியம் , சுப்பிரமணியம் பத்தினிப்பிள்ளை என்பவர்களுக்கு மகனாக 28.03.1938 பிறந்தார். அவருடன் உடன்பிறந்தவர்கள் மூன்று சகோதரிகள். இணுவில் சின்னையா மகள் சிவகாமசுந்தரியை திருணம் செய்து நாவரசன் , மாவிரதன் இருவரையும் புதல்வர்களாக பெற்றவர்.
கல்வி
தொகுஇளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலயம் (1944 - 1954 )
சி.ப.த. பா எஸ்.எஸ். ஸி (1954)
பலாலி ஆசிரியர் கலாசாலை பொதுப் பயிற்சி (1957-1958)
சென்னை சைவசித்தாந்த மகாசமாசம் - சைவப்புலவர் - 1963
கொழும்பு விவேகானந்தர் சபை சைவசமய உயர்தகமை தேர்வு - 1968 சிறப்புப்பரிசு
தொழில்
தொகு1955 - 1956 - வீரகேசரி பத்திரிகை ஒப்பு நோக்குனர்.
1959 - கொழும்பு மாளிகாவத்தை டென்ஹாம் ஆங்கிலப் பாடசாலை ஆசிரியர்.
1960-1968 - மன்னார் சித்தி விநாயகர் இந்துக்கல்லூரி ஆசிரியர்.
1969 - 1970 - கீரிமலை நகுலேஸ்வரா மகாவித்தியாலயம் ஆசிரியர்.
1971 - மகாஜனக்கல்லூரி ஆசரியர்.
1971 - 1974 - மாங்குளம் அ.த.க பாடசாலை அதிபர்.
1974 - 1998 - யா இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலம் அதிபர், ஓய்வு வரை.
இவர் எழுதிய நூல்கள்
தொகு- காரைக்கால் வரலாறு திருவூஞ்சல் வரலாறு - 1969
- சித்திரத்தேரில் சிவகாமியம்மன் - இசைப்பாடல் நூல் - 1978
- கோலங்கள் ஐந்து ( ஆசிரியரிகள் ஐவரில் ஒருவர் ) - 1993
- வாக்கும் வாழ்வும் - வானொலிப்பேச்சுக்கள் -1999
- கோமாதா - 1999
- ஆனந்த மாலை (ஒல்லுடை வைரவர் வழிபாட்டுப் பதிகப் பாடல் -1999
- மங்கல மனையறம் - 1999
- வள்ளல் ஏழூர் - சிந்துநடைக்கூத்து
- சித்திரத் தேரில் வித்தக விநாயகர் - இசைப்பாடல் நூல் -2000
- கல்வளையந்தாதி உரைவிளக்கம் -2002
- மங்கலத் திருமணம் - 2007
- காரைநகர் ஆண்டிக்கேணி ஐயனார் புராண உரை. - 2007
- ஆத்மவிமோசனம் ( அபரக்கிரியை ) - 2007
- மங்கல தரிசனம் (பூர்வக்கிரியை ) - 2007
- அரங்கப்படையல் - முத்தமிழ் நூல் -2008
- சிவநெறி (ஐரோப்பிய சிவநெறிக்கழகத் தேர்வுப்பாட நூல் ) -2009
- அண்ணா பொன் ஏடு - ( அண்ணா கோப்பி நிறுவன வரலாற்று நூல் ) - 2009
- ஆன்ம விடுதலை வழிபாட்டு மலர் ( சிவகாமசுந்தரி செல்லத்துரை நினைவு நூல் ) - 2010
- வாழ்வாங்கு வாழ்தல் - சிவகாமசுந்தரி செல்லத்துரை நினைவு நூல் - 2011
- திருமுறை அமுதம் - 2011
- கலாபூஷணம் , பண்டிதர் சி. அப்புத்துரை அவர்களின் வாழ்வியலும் நூலாக்கமும் - 2011
- சிவகாமி தமிழ் - (சிவகாமசுந்தரி செல்லத்துரை நினைவு நூல் ) - 2012
- இலக்கியத் தமிழ் இன்பம் - சிவகாமசுந்தரி செல்லத்துரை நினைவு நூல் - 2013
- இன்பத்தமிழ் - (சிவகாமசுந்தரி செல்லத்துரை நினைவு நூல் ) - 2014
- கலையும் வாழ்வும் - (சிவகாமசுந்தரி செல்லத்துரை நினைவு நூல் ) - 2015
- வாடாமல்லிகை - அண்ணா தொழிலகம் இணுவில் -2015
- பத்தினித் தெய்வம் - (சிவகாமசுந்தரி செல்லத்துரை நினைவு நூல் ) - 2016
- இறந்த பின் எங்கள் நிலை - வினாவிடை -2016
- நற்சிந்தனைகள் 50 - (சிவகாமசுந்தரி செல்லத்துரை நினைவு நூல் ) - 2017
- நற்சிந்தனைகள் 50 - வானொலியில் வந்தவை - ஒலிப்பேழை (சிவகாமசுந்தரி செல்லத்துரை நினைவு நூல் ) - 2017
- வில்லிசைப்பாடல்கள் - சிவகாமசுந்தரி செல்லத்துரை நினைவு நூல் - 2018
- திருமந்திர விருந்து 1 - சிவகாமசுந்தரி செல்லத்துரை நினைவு நூல் - 2019
- மெய்கண்ட சாத்திரம் - சிவகாமசுந்தரி செல்லத்துரை நினைவு நூல் - 2020
- பண்பாட்டுக் கோலங்கள் ஏன் எப்படி ?
- கோமாதா குலம் காப்போம்.
ஆசிரியரால் எழுதப்பட்ட நாடகங்கள்.
தொகு- தணியாததாகம் - 1960 - கலைக்கழகப்போட்டிக்ககாக
- தீந்தமிழ்த் தீ - மன்னார் இந்து சமய வளர்ச்சிக்கழகம்
- ஆதவன் மன்னிப்பாய் - 1965 ( அகில இலங்கையில் முதலிடம் பெற்ற நாடகம் )
- பாதுகை பெற்ற பரிசு - 1976 ( அகில இலங்கையில் முதலிடம் பெற்ற நாடகம் )
- பஞ்சவடி - 1979
- கலையால் அழிந்த கர்வம் - கீரிமலை நகுலேஸ்வர வித்தியாலயம்.
- வலைபந்தாட்டம் - இளவாலை மெய்கண்டான் வித்தியாலத்திற்கு
- சொர்க்கம் - இளவாலை மெய்கண்டான் வித்தியாலத்திற்கு
- இன்னல் சுமந்த அண்ணல் -ஆனைப்பந்தி உயர்கலைக் கல்லூரி
இலக்கிய நாடகங்கள்
தொகு- கண்ணகி வழக்குரை காதை
- மாயவன் செய்த மாயை - 1977 மகாஜனக் கல்லூரி
- மண்ணாசை - இளவாலை இளங்குமரன் கலாமன்றம்
- கர்வபங்கம் - 1977 ( அகில இலங்கையில் முதலிடம் பெற்ற நாடகம் )
- இராவணன் - 1977
- காத்தவராஜன் - இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலத்திற்கு
சமய நாடகங்கள்.
தொகு- மெய்பொருள் நாயனார்
- நாவலரானார்
- தருமத்தின் வழி
- மணியோசை - 1969 - காரைநகர் ஈழத்திற்குச் சிவன் கோவில் நிதிக்காக.
- தென்னவன் பிரமராயன்.- மன்னார் இந்து சமய வளர்ச்சிக்கழகம்
நாட்டிய நாடகங்கள்
தொகு- சக்திகள் சபதம் - இணுவில் இசை நடனக்கிராமியக்கலைக்கழகத்திற்கு
- சியாமயன் தரிசனம் - இணுவில் இசை நடனக்கிராமியக்கலைக்கழகத்திற்கு
- அணுவின் கதை - இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலத்திற்கு
- வாயுக்கள் - இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலத்திற்கு
- எண்கோலம் -இளவாலை மெய்கண்டான் மகாவித்தியாலத்திற்கு
- சரஸ்வதியே சம்மதமா? - இளவாலை மெய்கண்டான் மகா வித்தியாலத்திற்கு
சமூக நாடகங்கள்
தொகு- சுப்ரீன் கோர்ட்டில் திரௌபதை
- வயோதிபர் விதியில்
- ஐயோ அம்மான் - 1964
- கண்ணீர் - இளவாலை இளங்குமரன் கலாமன்றம்
இவருக்கு கிடைத்த கெளரவபட்டங்கள்.
தொகு- கலைஞானகேசரி - இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களம் -2002
- கலாபூஷணம் - இலங்கை அரசு கலாசார அமைச்சு -2003
- சித்தாந்தச்செல்வர் - காரைநகர் வீரகத்தி விநாயக ஆலயத்தினர்
- சிவநெறிப்புரவலர் - 2வது உலக சேக்கிழார் மாநாடு - இந்து சமய அமைச்சு - 2005
- கலைச்சுடர் - வலிவடக்குப் பிரதேச கலாமன்றம்.
- சமாசச் சான்றோர் விருது - புனர்வாழ்வு கல்வி அபிவிருத்தி நிதியம் , சமூக முன்னேற்றச் சங்கங்களின் சமாசம் - 2013
- சைவப்புலவர்மணி - இந்துநாகரிகத்துறை யாழ். பல்கலைக்கழகம் - 2017
- முதலமைச்சர் விருது - வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு - 2017
- மூதறிஞர் - தங்கம்மா அப்பாக்குட்டி அம்மாவின் பிறந்ததின விழாவில் கொடுக்கப்பட்டது.
மேற்கோள்கள்
தொகுமூலவிருட்சம் - மூதறிஞர் சைவப்புலவர் சு.செல்லத்துரை அவர்களின் அந்தியேட்டி தின வெளியீடு. 21.11.2021.ttps://noolaham.org/wiki/index.php/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%90%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D