பயனர்:Sharan Raaj/மணல்தொட்டி

மார்சிலிங் வட்டாரம்

 

சிங்கப்பூர் உலகத்தில் மிகவும் புகழ்பெற்ற நாடு. ஐம்பது ஆண்டுகளில் சிங்கப்பூர் பெற்ற வளர்ச்சியைக் கண்டு உலகமே வியந்து போகிறது.  அதைபோலவே சிங்கப்பூரில் உள்ள வட்டாரங்களும் அதிக வளர்ச்சி கண்டுள்ளன. அவற்றில் ஒன்று,  மார்சிலிங் வட்டாரம்.

மார்சிலிங் வட்டாரத்தின் பெயர், வசதிமிக்க வியாபாரியான லிம் நீ சுனின் வீட்டின் பெயரான “மார்சிலிங் வில்லா” என்பதிலிருந்து வந்தது.  19ஆம் நூற்றாண்டின்போது மார்சிலிங் வட்டாரம் கிராமப்புறமாகவே இருந்தது.  அந்தக் கிராமத்தில் வசிக்கும் மக்கள் பெரும்பாலோர், தொழிற்சாலைகளில் வேலைச் செய்தார்கள்.  அவர்களில் சிலர் வங்கி, அலுவலகம் போன்ற இடங்களில் வேலை செய்தனர். மார்சிலிங்கில் உள்ள தொழிற்சாலைகள் பல உணவுப் பொருட்களை உற்பத்தி செய்தன.  அதுமட்டுமில்லாமல் மார்சிலிங்கில் பல இரப்பர் தோட்டங்களும் இருந்தன. அவற்றிலும் கிராம மக்கள் வேலை செய்தனர். முன்பு இங்கு ஓர் இராணுவ முகாமும் இருந்தது.  முன்பு மார்சிலிங் வட்டாரம் காடுபோல காட்சியளித்தது.  இது மலேசியாவிற்கு அருகில் இருப்பதால் இங்கு இராணுவ முகாம் அமைக்கப்பட்டது.  மக்கள் வசிக்கும் இடங்களில், தேவையான வசதிகள் இல்லை. பேரங்காடிகள் போன்றவையும் இல்லை. இந்த இடம் மிகவும் அசுத்தமாக இருக்கும்.

ஆனால் இன்று மார்சிலிங் வட்டாரம் மிகவும் மாறியுள்ளது. மக்களுக்குத் தேவையான வசதிகள் எளிதில் கிடைக்கின்றன.  தூய்மையான வீடமைப்புப்பேட்டை, விளையாட்டுத்திடல், உடற்பயிற்சி செய்வதற்கான வசதிகள், பேரங்காடிகள், போன்றவை உள்ளன.  இங்குப் பல கடைத்தொகுதிகளும், உணவகங்களும் உள்ளன.  முன்பு மக்களுக்குத் தரமான கல்வி கிடைக்கவில்லை. ஆனால், இன்றோ, மார்சிலிங்கில் தரம்வாய்ந்த பல பள்ளிக்கூடங்கள் இருக்கின்றன. முன்பு மக்கள் இரப்பர் தோட்டங்களிலும், உணவு தயாரிக்கும் தொழிற்சாலைகளிலும் வேலைச் செய்தனர்.  இன்று பெரும்பாலோனோர் அலுவலகங்களில் வேலை செய்கிறார்கள்.  குறைவான கல்வியறிவு உடையவர்கள், பெரிய தலைசிறந்த தொழிற்சாலைகளில் வேலை செய்கிறார்கள்.  இவ்வாறு மார்சிலிங் வட்டாரத்தில் வசிப்போரின் வாழ்க்கைத் தரம் உயர்ந்ததாகக் காணப்படுகிறது. 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sharan_Raaj/மணல்தொட்டி&oldid=2250911" இலிருந்து மீள்விக்கப்பட்டது