பயனர்:Shihnas M/மணல்தொட்டி


கிழக்கு மாகாணத்தின் எழில் கொஞ்சும் கிராமமான பொத்துவிலைப் பிறப்பிடமாக கொண்ட எஸ். எம். எம். முஷர்ரப் முற்போக்கு சிந்தனை கொண்ட ஒரு இளம் ஊடகவியலாளர் ஆவார். இன, மத பற்றுதல்களிலும் பார்க்க மனிதம் குறித்த ஒற்றைச் சிந்தனை, சகலரையும் ஒரே கோணத்தில் அணுகி அன்பு செலுத்தும் மனப்பக்குவம் என்பன இவரின் தனித்துவ அடையாளமாகும். இலங்கை அரச தொலைக்காட்சியான இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தில் 2005 ஆம் ஆண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும், உதவித் தயாரிப்பாளராகவும் இணைந்ததன் மூலம் ஊடகத்துறைக்குள் நுழைந்த இவர் குறுகிய காலத்திற்குள் அறிவார்ந்த ரசிகர்களின் அபிமானம் பெற்ற நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆனார். பின்னர் 2009 ஆம் ஆண்டு வசந்தம் தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்ட போது அதில் தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் இணைந்து கொண்ட இவர் குறித்த வசந்தம் தொலைக்காட்சியின் வேகமான வளர்ச்சிக்கு மிகப்பிரதான காரணகர்த்தாவாக திகழ்ந்தார். வசந்தம் தொலைக்காட்சியின் பல நிகழ்ச்சிகளுக்கு தயாரிப்பாளராகவும், தொகுப்பாளராகவும் பணியாற்றி குறித்த நிகழ்ச்சிகளின் தரம் மேலோங்க அயராது உழைத்திருக்கின்றார். பள்ளிக் கூடம், யாதும் ஊரே, முகமூடி, வாங்க பழகலாம், தில்லு முல்லு போன்ற நிகழ்ச்சிகளின் தயாரிப்பாளராகவும் , சுயாதீன செய்திப்பார்வை, 8-9, தலைவாசல் பள்ளிக்கூடம் நிகழ்ச்சிகளின் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பல பரிமாணங்களை தொலைக்காட்சிகளில் வெளிப்படுத்தி வருவதன் மூலம் சமகால தமிழ்த் தொலைக்காட்சி ஆளுமைகளில் தனக்கென நிலையான ஒரு இடத்தை பிடித்துள்ளார். இவர் தயாரித்து வழங்கிய 'தூவானம்' நிகழ்ச்சி 2009 ஆம் ஆண்டு அரச விருது வழங்கும் நிகழ்வில் சிறந்த சஞ்சிகை நிகழ்ச்சியாக தெரிவு செய்யப்பட்டதோடு 2015 ஆம் ஆண்டின் சிறந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியாக இவரது 'பள்ளிக் கூடம்' நிகழ்ச்சி தெரிவாகியது. சிறந்த நிகழ்ச்சித் தொகுப்பாளர் விருதுக்கு பல முறை அரச விருது , றைகம் விருது உள்ளிட்ட பல விருதுகளுக்கு இவரது பெயர் சிபாரிசு செய்யப்பட்டிருக்கிறது. 2016 ஆம் ஆண்டு அகில இலங்கை ரீதியில் சிறந்த தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளருக்கான தேசிய விருதினைப் பெற்றுக் கொண்டார்.

தனது தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சமூக நல்லிணக்கத்தையும், தன்னம்பிக்கையையும், அறிவுத் தெளிவையும் முதன்மைப்படுத்தும் இவர் ஒரு சட்டத்துறை மாணவனும் ஆவார். தொலைக்காட்சிப் பணிக்கு புறம்பாக 'மைன்ட் அப்' எனும் தேசிய ரீதியிலான சமூக சேவை அமைப்பை நடாத்தி வரும் இவர் அதனூடாக கல்வித்துறை விருத்தி, சுயதொழில் ஊக்குவிப்பு, இன நல்லிணக்கம், சூழல் பாதுகாப்பு, சுகாதார மேம்பாடு போன்ற 5 இலக்குகளுக்காக அரும்பாடுபடுகின்றார். இவரது முயற்சியின் பயனாக பொத்துவில் பிரதேசத்தில் கிட்டத்தட்ட 30 தேவையுடைய பெண்கள் நெசவுத்தொழில் புரிந்து மாதாந்தம் சம்பளம் பெறுகின்றனர். எதிர்வரும் காலங்களில் நாடு முழுவதும் இத்தகைய செயற்றிட்டத்தை மேற்கொள்வதற்கான திட்டத்தில் செயற்படும் இவர் எப்போதும் கூறுவது ஒன்றைத்தான். 'தூய அன்பு என்பது எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டு செலுத்தப்பட வேண்டிய ஒன்று'

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Shihnas_M/மணல்தொட்டி&oldid=2265015" இலிருந்து மீள்விக்கப்பட்டது