எனது பெயர் ஷிவானிஸ்ரீ.எனக்கு தற்போது பதினெட்டு வயது ஆகிறது. எனது தந்தையின் பெயர் கிருஷ்ணசாமி மற்றும் தாயாரின் பெயர் சிவமணி ஆகும்.என்னுடன் பிறந்தவர் ஒரு தமக்கை.அவள் பெயர் வைஷாலி. அவருக்கு ஒரு மாதத்திற்கு முன் தான் திருமணம் நடைபெற்றது.அவள் தற்போது கரூரில் வாழ்ந்து வருகிறார்.நான் என்னுடைய உறவுகளை பெரிதும் விரும்புகின்றேன்.எனது வாழ்வின் அனைத்து நிகழ்வுகளிலும் அவர்களுக்கு பெரும் பங்கு உண்டு.எனது தந்தை ஜவுளித் தொழிலில் ஈடுபட்டுள்ளார்.எனது சொந்த ஊர் தமிழகத்தில் உள்ள ஈரோடு மாவட்டம் ஆகும். ஈரோட்டின் சிறப்பம்சங்கள் மஞ்சள் மற்றும் ஜவுளித் தொழில் ஆகியன ஆகும்.ஈரோடு மிகவும் வெப்பம் மிகுந்த பகுதி ஆகும்.
நான் ஈரோட்டில் உள்ள பாரதி வித்யா பவன் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்தேன். எனது பள்ளி ஈரோட்டிலேயே மிகச் சிறந்த பள்ளிகளுள் ஒன்று ஆகும். நான் பத்தாம் வகுப்பில் நானூற்று அறுபத்து ஏழு மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றேன். பின் பன்னிரெண்டாம் வகுப்பில் ஆயிரத்து நூற்று ஐம்பத்து எட்டு மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றேன்.நான் தற்போது பெங்களூரில் உள்ள கிறித்து பல்கலைகழகத்திள் படித்து கொண்டு இருக்கின்றேன்.நான் இங்கு இளங்களை வணிகவியல் படித்துக் கொண்டு இருக்கின்றேன்.இக்கல்லூரி இந்தியாவிலே வணிகவியல் துறையில் நான்காம் இடத்தில் உள்ளது.
எனக்கு படிப்பு சாராத பிற நடவடிக்கைகளிலும் ஆர்வம் உண்டு.எனக்கு பாடுவதில் மிகவும் ஆர்வம் உள்ளது.நான் நன்றாக பாடுவேன்.எனது பள்ளியில் ஆண்டுதோறும் நடைபெறும் பாட்டுப் போட்டிகல் பெரும்பாலும் பரிசுகள் வென்று இருக்கிறேன்.பாட்டு மட்டும் அல்லாது எனக்கு நடனத்திலும் ஆர்வம் உண்டு.பள்ளியில் பல நடனப் போட்டிகளில் பங்கு பெற்றுள்ளேன்.எனக்கு நிறைய நண்பர்கள் உள்ளனர். நான் பெரும்பாலும் அவர்களுடன் எனது நேரத்தை செலவிட விரும்புவேன்.எனது இன்பம் துன்பம் அனைத்தையும் அவர்களுடன் பகிர்ந்து கொள்வேன்.என்னை எப்பொழுதும் அவர்கள் ஊக்குவிப்பார்கள்.எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும்.அவர்களின் மலலை சிரிப்பு என்னை எப்போதும் கவரும்.நான் திரைப்படங்களை மிகவும் விருப்பத்துடன் பார்ப்பேன்.என் மனதை மிகவும் கவர்ந்த நடிகர் சூர்யா ஆவார்.அவருடைய இயல்பான நடிப்பும் யதார்த்தமான படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும்.எனக்கு புடித்த நடிகை நயன்தாரா ஆகும்.அவர் மிகவும் அழகாகவும் எல்லோரையும் கவரும் விதத்திலும் நடிப்பார். எனக்கு தமிழ் மீதும் ஆர்வம் மிக அதிகம்.நான் நன்றாக கவிதை எழுதுவேன்.