பயனர்:Shweta Josalyn/மணல்தொட்டி

கல்வி அமைச்சு

கல்வி அமைச்சின் (Ministry of Education) பணி, சிங்கப்பூரில் கல்வி தொடர்பான கொள்கைகளை உருவாக்குவதும் அவற்றைச் செயல்படுத்துவதும் ஆகும். தற்போது இரண்டு கல்வி அமைச்சர்கள் உள்ளனர். ஒருவர் இங் சீ மெங். இவர் பள்ளிகளின் செயல்பாட்டைக் கவனித்துக் கொள்வார். மற்றவர் ஓங் யீ குங். இவர் உயர்கல்வி மற்றும் திறன்கள் துறைகளுக்குப் பொறுப்பான அமைச்சர். 2016-இல், கல்வி அமைச்சின் கீழ், ‘ஸ்கில்ஸ் ஃபூயூச்சர்’ (Skills Future) சிங்கப்பூர் என்ற ஒரு புதிய அமைப்பு உருவாக்கப்பட்டது. அது தற்போது சிங்கப்பூர் பணியாளர் மேம்பாட்டு முகமை (WDA) செய்து வரும் சில பணிகளை மேற்கொள்ளவிருக்கிறது.

அரசாங்க ஆணை பெற்ற நிறுவனங்கள் கல்வி அமைச்சு தற்போது 10 அரசாங்க ஆணை பெற்ற நிறுவனங்களை மேற்பார்வையிடுகிறது. அவையாவன: • சிங்கப்பூர் பலதுறைத் தொழிற்கல்லூரி • ஙீ ஆன் தொழிற்கல்லூரி • தெமாசெக் தொழிற்கல்லூரி • நன்யாங் தொழிற்கல்லூரி • ரிப்பப்ளிக் தொழிற்கல்லூரி • தொழில்நுட்பக் கல்விக் கழகம் • தென்கிழக்கு ஆசிய ஆய்வு மன்றம் • அறிவியல் மன்றம், சிங்கப்பூர் • சிங்கப்பூர் தேர்வு மற்றும் மதிப்பீட்டு வாரியம் • தனியார் கல்வி மன்றம்



கல்வி அமைச்சர்கள் வருடங்கள் அமைச்சர் 1959 – 1963 யோங் நியூக் லின் 1963 – 1970 ஓங் பாங் பூன்

1972 – 1975 லீ சியவ் மெங் 1975 தோ சின் சை 1975 – 1979 சுவா ஸியன் சின் 1979 – 1984 கோ கெங் சுவீ 1985 – 1992 டோனி டான் 1992 – 1997 லீ யொக் ஸ்வான் 1997 – 2003 தியோ சீ ஹியன் 2003 – 2008 தர்மன் ஷண்முகரத்தினம் 2008 – 2011 இங் எங் ஹென் 2011 – 2015 ஹெங் ஸ்வீ கியட் 2015 – இங் சீ மெங் (பள்ளிகள்) ஓங் யீ குங் (உயர்கல்வி, திறன்கள்)


தொழிற்சங்கங்கள் கல்வி அமைச்சில் பணியிலுள்ள அரசாங்க ஊழியர்கள் சிங்கப்பூர் ஆசிரியர்கள் சங்கம், சிங்கப்பூர்ச் சீன ஆசிரியர்கள் சங்கம், சிங்கப்பூர் மலாய் ஆசிரியர்கள் சங்கம் மற்றும் சிங்கப்பூர்த் தமிழ் ஆசிரியர்கள் சங்கம் ஆகியவற்றில் உறுப்பினர்களாக உள்ளனர். ஆசிரியர் பணியில் இல்லாதவர்கள், பொது ஊழியர்களுக்கான ஒருங்கிணைக்கப்பட்ட தொழிற்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இவை அனைத்தும் தேசியத் தொழிற்சங்கக் காங்கிரசுடன் தொடர்பு உடையன.

பள்ளிகளின் எண்ணிக்கை கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பள்ளிகளின் எண்ணிக்கை: பள்ளி வகை எண்ணிக்கை தொடக்கநிலை 190 உயர்நிலை 147 தொடக்கக்கல்லூரி / கல்வி நிலையம் 20

மேற்கோள்கள் https://en.wikipedia.org/wiki/Ministry_of_Education_(Singapore) https://data.gov.sg/dataset/list-of-all-schools-by-cluster https://www.moe.gov.sg/

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Shweta_Josalyn/மணல்தொட்டி&oldid=2250995" இலிருந்து மீள்விக்கப்பட்டது