பயனர்:Sivagaami/மணல்தொட்டி

பாலாஜி சதாசிவன்

 

பாலாஜி சதாசிவன், (Balaji Sadasivan) (11.07.1955 – 27.09.2010) இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒரு சிங்கப்பூர் அரசியல்வாதி மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர் ஆவார்.

பொருளடக்கம்

1.   கல்வி மற்றும் தொழில் 

2.   அரசியல் வாழ்க்கை  

3.   சமுதாயப் பணிகள்  

4.   குடும்ப வாழ்க்கை  

5.   இறப்பு 

 

 

 

   

 

1. கல்வி மற்றும் தொழில்

சதாசிவன், ராஃபிள்ஸ் கல்வி நிலையம், சிக்லாப் உயிர்நிலைப் பள்ளி, தேசிய தொடக்கக் கல்லூரி ஆகியவற்றில் பயின்றவர். பிறகு அவர் சிங்கப்பூர்ப் பல்கலைக்கழகத்தில் மருத்துவம் பயின்றார். 1979-ஆம் ஆண்டு மருத்துவப் பட்டம் பெற்ற பிறகு, இவர் தனது கல்வியை  ராயல் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் கல்லுரியில் (Royal College of Surgeons) தொடர்ந்தார். சதாசிவன், மிச்சிகன் மாநிலத்தின் டெட்ராய்ட் நகரில் உள்ள ஹென்றி ஃபோர்ட் மருத்துவமனையில் 1985-ஆம் ஆண்டு முதல் 1989-ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். இவர் 2001-ஆம் ஆண்டு வரை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராகப் பணியாற்றினார். 2007-ஆம் ஆண்டு, உலக சுகாதார நிறுவனத்தின் (World Health Organisation) செயற்குழுவின் தலைவராகப் பணியாற்றானார். நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவராக இவர் பணியாற்றியபோது,  அடிக்கடி மருத்துவ, ஒழுக்கநெறிப் பிரச்சினைகள் மற்றும் சட்ட சிக்கல்கள் ஏற்பட்டன. இது அவருக்குச் சட்டத்துறைப் படிப்பில் ஆர்வத்தைத் தூண்டியது. லண்டன் பல்கலைக்கழகத்தில் சட்டத் துறையில் படித்து, 1997-ஆம் ஆண்டு பட்டம் பெற்றார்.

2. அரசியல் வாழ்க்கை   

பாலாஜி சதாசிவன், அங் மோ கியோ குழுத்தொகுதியின், செங் சான்-சிலேத்தார் பிரிவுக்கான நாடாளுமன்ற உறுப்பினராக 2001-ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டபோது, அவருடைய அரசியல் வாழ்க்கை தொடங்கியது. 2001 முதல் 2003 வரை சுற்றுப்புற அமைச்சுக்கான துணை அமைச்சராகவும் 2001 முதல் 2004 வரை சுகாதார அமைச்சு மற்றும் போக்குவரத்து அமைச்சுகளுக்கான துணை அமைச்சராகவும் பணியாற்றினார். அதன் பின்னர் மூத்த துணை அமைச்சர் பதவியை சுகாதார அமைச்சிலும் (2004-2006) வெளியுறவு அமைச்சிலும் (2006-2010) தகவல், தொடர்பு, கலைகள் அமைச்சிலும் (2004-2008) வகித்தார்.

3. சமுதாயப் பணிகள்

சதாசிவன், சிங்கப்பூர் இந்திய சமூகத்திற்குப் பயனளிக்கும் பல அமைப்புகளிலும் பணியாற்றியுள்ளார். சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கம் (SINDA) மற்றும் சிங்கப்பூர் இந்தியர் கல்வி அறக்கட்டளை (SIET)  ஆகியவற்றின் தலைவராக இவர் சேவையாற்றியுள்ளார். மேலும், அவர் இந்திய மரபுடைமை நிலையத்தின் வழிகாட்டுக் குழுத் தலைவராகவும் தமிழ்மொழிப் பேரவையின் ஆலோசகராகவும் இருந்து தம் பங்கை ஆற்றியுள்ளார். அது மட்டுமல்ல, தேசியக் கலைக்கூட செயல்படுத்தும் குழுவிலும், இன மற்றும் மத நல்லிணக்க வழிகாட்டுக் குழுவிலும் உறுப்பினராக இருந்திருக்கிறார். பாலாஜி சதாசிவனுக்கு இந்திய வரலாற்றில் மிகுந்த ஆர்வம் இருந்தது. அதனால், அவர் 2011-ஆம் ஆண்டில் “The Dancing Girl - A History of Early India” என்ற நூலை வெளியிட்டார்.

4. குடும்ப வாழ்க்கை

இவருக்கு ஐந்து உடன்பிறப்புகள் உள்ளனர். பாலாஜியின் துணைவியார், டாக்டர் மா சுவான் ஹூ. சதாசிவனுக்கு இரு பிள்ளைகள். ஒருவர் தர்மா மற்றவர் அனிதா.   

5. இறப்பு

2008-ஆம் ஆண்டு சதாசிவனுக்கு மலக்குடல் புற்றுநோய் இருப்பது .  தெரியவந்தது. சிகிச்சைக்குப் பிறகு, அவர் தொடர்ந்து தம் வெளியுறவு அமைச்சுப் பணிகளில் ஈடுபட்டார். புற்றுநோய் மீண்டும் தாக்கியதால், சதாசிவன் 2010-ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 27-ஆம் தேதி, தமது 55-வது வயதில் காலமானார்.

மேற்கோள்

https://en.wikipedia.org/wiki/Balaji_Sadasivan

கண்ணன் சிவகாமி  (KANNAN SIVAGAMI)

உயர்நிலை 1C

தெமாசெக் தொடக்கக் கல்லூரி [TEMASEK JUNIOR COLLEGE (IP)]  

 

    

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sivagaami/மணல்தொட்டி&oldid=2250966" இலிருந்து மீள்விக்கப்பட்டது