பயனர்:Sivakarthiga/மணல்தொட்டி
மொழிப் பாடமும் அகராதியும் ஒன்றோடொன்று இணைந்தவை.அகராதியைப் பயன்படுத்தச் செய்வதால் ஆசிரியர் பல குறிக்கோள்களை நிறைவு செய்யலாம்.அருஞ்சொற்பொருளுணரச் செய்தல்,சொற்களின் சரியான உச்சரிப்பை அறியச் செய்தல். சொற்களஞ்சியப் பெருக்கம் ஆகிய பல பயன்கள் அகராதியைப் பயன்படுத்துவதால் உண்டு. அகராதியைப் பயன்படுத்தும் திறனை வளர்க்க ஆசிரியர் பின்வரும் வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்.
- சொற்களை அகரவரிசைப்படுத்துதல்
- அகரவரிசைப்படுத்துதல்
- கொடுக்கப்பட்ட ஓர் எழுத்தின் முன்னும் பின்னும் வரும் எழுத்துகளை உறுதி செய்யக் கற்பித்தல்.
- சொற்களை வரிசைப்படுத்துங்கால் இரண்டாவது,மூன்றாவது,நான்காவது எழுத்துகளையும் கருத்தில் கொள்ளல்.
- பொருளறிய வேண்டிய சொல்லுக்கு மிக அருகிலான பக்கத்தைத் திருப்பும் பயிற்சி அளித்தல்.
- அகராதியின் பக்கத் தலைப்பில் தரப்பட்டிருக்கும் குறிச்சொற்களை முறையாகப் பயன்படுத்துதல்.