பயனர்:Sivasankaranpanarg/மணல்தொட்டி
யாழ் பாணர் எழுச்சி இயக்கம்
யாழ் பாணர் எழுச்சி இயக்கம் 2014 ஆம் ஆண்டு பாணர் சமூக மக்களை ஒருங்கிணைக்க மற்றும் பாணர் சமூக மக்கள் வளர்ச்சி மற்றும் வரலாற்று தேடல் குறித்து துவங்கப்பட்ட ஒரு அமைப்பாகும். பாணர் சமூக மக்கள் தொகை நாளுக்கு நாள் குறைந்து வருவதையும் மக்கள் தங்கள் கலை,பண்பாடு, கலாச்சாரம் கடந்து மக்கள் புதிய வடிவில் சமூக அந்தஸ்து வேண்டி பெயர் மாற்றம் செய்து வாழ்ந்து வருவதை தடுக்கும் பொருட்டு இந்த அமைப்பு செயல்பட்டு வருகிறது.
நிறுவனர்
பழைய திருநெல்வேலி மாவட்டம் தற்போதைய தென்காசி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ஆழ்வார்குறிச்சி என்ற கிராமத்தில் தந்தை சு.கணபதி-சாந்தி தம்பதியர் மகனாக ஜுன்-02 1991-ல் பிறந்தார். சிறு வயது முதலே போராட்டம், ஆர்ப்பாட்டம் களத்தில் வளர்ந்து தற்போது ஒரு சமூகத்தின் எழுச்சிக்காக தனது வாழ்வை அர்ப்பணித்து வாழ்ந்து வருகிறார். தனது 14 வயதில் தந்தையுடன் சேர்ந்து இந்திய தேசிய காங்கிரசு மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் பயணம் செய்தார். இளைஞர் காங்கிரஸ் தேர்தலில் போட்டியிட்டு ஆழ்வார்குறிச்சி நகர இளைஞர் காங்கிரஸ் செயலாளராக பணியாற்றினார் பின்நாட்களில் இலங்கை போரில் விடுதலை புலிகளுக்கு துரோகம் விளைவித்த காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி விடுதலை புலிகளுக்கு ஆதரவான தமிழ் தேசிய அரசியலில் கவனம் செலுத்தினார் நாம் தமிழர் கட்சி அடிப்படை உறுப்பினர் முதல் ஆலங்குளம் தொகுதி செயலாளர் வரை அவரது தமிழ் தேசிய அரசியல் பணி விறுவிறுப்பாக சென்றது ஒரு நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஒரு சட்டமன்றத் தேர்தல் என தொகுதியில் தமிழ் தேசிய கருத்துக்களை பகிர்ந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். நாம் தமிழர் கட்சியிலும் சாதி பார்த்து சீட் கொடுப்பதை சுட்டி காட்டி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் கல்லூரியில் நாம் தமிழர் கட்சி கட்சியை தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன்பே தூக்கி எறிந்து வந்தார். பிறகு அகில இந்திய மனித உரிமை தொழிலாளர்கள் நல சங்கத்தில் தன்னை ஒரு மனித உரிமைகள் தொடர்பான குற்றங்கள் எதிராக பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.