பயனர்:Sivhani/மணல்தொட்டி

                                            பாய லேபார் மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளி

1916- ஆம் ஆண்டில் மெத்தடிஸ்ட் தேவாலயம் ஒரு புதிய பள்ளியை ஆரம்பித்தது. அது ஆங்கிலோ-சீன பள்ளியின் ஒரு சிறிய பகுதியாகும், பய லேபார் ஆங்கிலப் பள்ளி என்று பெயர் சூட்டப்பட்டிருந்தது. அதுதான் இப்போதைய பய லேபார் மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளி ஆகும். 1916 ஆம் ஆண்டிலிருந்து அப்பள்ளியில் நடந்த சில நிகழ்வுகள்: 1917 -பய லேபார் ஆங்கிலப் பள்ளி செயல்படத் தொடங்கியது . பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு ராபர்ட் ஹனம் ஆவார். பள்ளியில் மொத்தம் மூன்று ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிந்தனர் . பள்ளியில் 24 ஆண் மாணவர்கள் மட்டும் பயின்றார்கள். 1918 -பாய லேபார் ஆங்கிலப் பள்ளி பெண்களை மாணவர்களாகச் சேர்க்கத் தொடங்கியது. 1930 -மெத்தடிஸ்ட் ஆங்கிலத் தயாரிப்பு பள்ளி என்று பெயரை மாற்றிக்கொண்டது. பௌண்டரி சாலையிலிருந்து அப்பர் சிராங்கூன் சாலையில் கம்போங் சிரெஹ் அருகில் ஒரு இரண்டு மாடி கடை வீட்டுக்குப் பள்ளியை மாற்றினர். 1932 –க்குப் பின்பு மெத்தடிஸ்ட் ஆங்கிலத் தயாரிப்புப் பள்ளி பௌண்டரி சாலையில் இருந்த ஒரு புதுப் பள்ளியின் கட்டடத்திலும் தேவாலயத்தின் கட்டத்திலும் தங்களுடைய பள்ளியின் இடத்தை அமைத்தனர். அங்கே நான்கு வகுப்பறைகளும், ஒரு மர பங்களாவும் இருந்தது. 1935 - திருமதி சேவ் ஹாக் ஹின் முதல்வர் ஆனார். 1943 -1944 -பள்ளிக் கட்டடம் ஜப்பானியப் படைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு மோசமாக சேதமடைந்தது . 1945 -ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்குப் பிறகு பள்ளி மீண்டும் திருமதி சேவ் ஹாக் ஹினால் தொடங்கப்பட்டது. காலைப் பள்ளி பாய லேபார் மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளியாகவும் மதியப் பள்ளி, பாய லேபார் மெத்தடிஸ்ட் ஆண்கள் பள்ளியாகவும் நிறுவப்பட்டது. ஜப்பானிய ஆக்கிரமிப்பிற்கு பிறகு திருமதி சேவ் ஹாக் ஹின் இந்தப் பள்ளியை திரும்பி ஆரம்பித்ததால் இவர் பள்ளியின் நிறுவினர் ஆனார் . 1949 -பாய லேபார் மெத்தடிஸ்ட் பள்ளி ஒரு அரசு உதவி பெறும் பள்ளியானது 1958 -திருமதி ராபர்ட் ஈவு பள்ளி முதல்வர் ஆனார். 1961 - பாய லேபார் ஒரு முழுமையான பெண்கள் பள்ளியானது – அதுவே பாய லேபார் மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளி 1966 -திருமதி லூசி கந்தசாமி பள்ளியின் முதல்வர் ஆனார் 1972 -முன்னாள் மாணவர் மற்றும் ஆசிரியர், திருமதி வின்னீ டான் பள்ளியின் முதல்வர் ஆனார் 1986 -பௌண்டரி சாலையிலிருந்து தற்போது (2017 ) இருக்கும் லோரொங் ஆ சூ என்ற இடத்திற்கு மாறினார்கள் 1991 – 75-ஆம் ஆண்டு விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன 1997 -திருமதி லீ சியூ சூ பள்ளியின் முதல்வர் ஆனார் 2001 -இந்தப் பள்ளி ஒரு தன்னாட்சிப் பள்ளியானது 2005 -பள்ளிக் கட்டடம் சீரமைக்கப்பட்டபோது செராங்கூன் அவெனியூ 1- க்கு மாறினார்கள் 2007 - சீரமைப்புக்குப் பிறகு லோரொங் ஆ சூ விற்கு வந்தார்கள் 2010 -திருமதி பமீலா யூங் முதல்வரானார் 2014 -திருமதி குயெக் லி கேக் முதல்வரானார் 2016 -பாய லேபாரின் நூறாவது ஆண்டு விழாக்கள் நடைபெற்றன. நூறாவது ஆண்டு விழாக்களின் சாராம்சம்: 2016 பாய லேபார் மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளியின் நூறாவது ஆண்டினால் அதை கொண்டாடப்பட்டு விழாக்கள் நடைபெற்றன

ஜனவரி மாதத்தில்- பாய லேபார் 'பிறைசத்தோன்' என்ற தொடர் பாட்டு  விழா நடைபெற்றது. அந்த விழாவில் இறைவனை வணங்க நூறு பாடல்கள் தொடர்ச்சியாக  பாடப்பட்டன.

பிப்ரவரி மாதத்தில்-பாய லேபார் கனிவு என்ற ஒரு சீனப் புத்தாண்டு விருந்து வயதானவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. மார்ச் மாதத்தில் -பாய லேபார் 'டெஸ்டிபிஎஸ் ' நடந்தது. இயேசுவை வணங்கும் நிகழ்ச்சியில் முன்னாள் மாணவர்களும், தற்போது படிக்கும் மாணவர்களும் கலந்துகொண்டார்கள். ஏப்ரல் மாதத்தில் -பாய லேபார் 'ஸ்போர்ட்ஸ் ' என்ற நிகழ்ச்சி நடந்தது. அன்று பல்வேறு வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்கள் கலந்து கொண்டார்கள். மே மாதத்தில் -பாயா லேபார் 'மேக்ஸ் ஹர் மார்க்' என்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அன்று ஒரு காலில் தொடர்ச்சியாக ஐந்து நிமிடங்களுக்கு மாணவர்கள் குதித்தார்கள். மே மாதத்தில் -'எபெனிஸிர்' சந்தை ஒன்று நடைபெற்றது அதில் நூறு விளையாட்டு மற்றும் உணவு கடைகள் வைக்கப்பட்டது. இந்தச் சந்தையினால் நான்கு நிறுவனங்களுக்கு 176 ,520 வெள்ளி நிதி திரட்டப்பட்டது . ஜூலை மாதத்தில்-பாய லேபார் 'மியூசிக்கல் ' என்ற ஒரு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆகஸ்ட் மாதத்தில் -பாய லேபார் 'ரைட்ஸ்' என்ற ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.அப்போது பாய லேபார் மெத்தடிஸ்ட் பெண்கள் பள்ளியைப் பற்றி மாணவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று ஒளிவுமறைவின்றி எழுதினார்கள் . செப்டம்பர் மாதத்தில் -பாய லேபார் 'ஆனர்ஸ் ஹர் டீச்சர்ஸ் ' என்ற விருந்து நடைபெற்றது. அதில் முன்னாள் ஆசிரியர்களுக்கும் தற்போதிருக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரு விருந்து வழங்கப்பட்டது. அக்டோபர் மாதத்தில் -பாய லேபார் 'பௌண்டர்ஸ் டே தேங்க்ஸ்கிவிங் அண்ட் ரீயூனியன் டின்னர்' விருந்து நடந்தது . நூறு வருடத்திற்கு நன்றி தெரிவிக்கவும், ஒரு வருடத்திற்கான கொண்டாட்டத்தை நிறைவு செய்யவும் ஒரு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

இணை கல்விசார் நடவடிக்கைகள்

விளையாட்டு இணை கல்விசார் நடவடிக்கைகள்- 1 )பூப்பந்து 2)கூடைப்பந்து 3)நீச்சல் 4)தடகளம் 5)வலைப்பந்து 6)கைப்பந்து

சீருடை குழுக்கள்- 1 )பெண்கள் படை 2 )தேசிய காவல் மாணவர்படை 3 )செயின்ட் ஜான் படை

காட்சி மற்றும் அரங்கேற்றக் கலைகள்- 1 )பாடல் குழு 2 )கிட்டார் 3 )குச்சங் 4 )கை மணி குழு 5 )ஹர்ப் 6 )நடனக் குழு 7 )இசைக்குழு

சங்கம் மற்றும் சமூகங்கள் 

1 )சதுரங்க சங்கம் 2 )இலக்கிய மற்றும் விவாத சமூகம் 3 )நாடக சங்கம் 4 )ஊடக மற்றும் தொழில்நுட்ப சமூகம் 5 )புகைப்பட சங்கம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sivhani/மணல்தொட்டி&oldid=2251086" இலிருந்து மீள்விக்கப்பட்டது