பயனர்:Smaniam53/மணல்தொட்டி
சிங்கப்பூரின் 50 வது ஆண்டு தேசிய தின நிறைவு கொண்டாட்டம்
2015 ஆம் ஆண்டு நம் சிங்கப்பூர் சுதந்திரம் அடைந்து 50 ஆண்டுகள் ஆகி விட்டதை கொண்டாடும் அற்புதமான ஆண்டு ஆகும். மக்கள் நல்லிணக்கத்துடன் ஒரே மக்களாக பயணப்பட்டு அடைந்துள்ள இந்த வரலாற்று சிறப்பு மிக்க தருணம், மக்கள் அனைவரும் கடந்து வந்த பாதையை நினைவு கூர்ந்து கொண்டாட வேண்டிய ஒரு மைல்கல் ஆகும். பல்லின மக்களாக இருந்தாலும் ஒரே உணர்வுடன், ஒன்றாக நீண்ட பாதையை சேர்ந்து கடந்து வந்துள்ளோம்.நிச்சயமாக ஒன்று பட்ட சிந்தையுடன் இன்னும் பல சிகரங்களைத் தொடுவோம்.
சிங்கை 50 திட்டங்கள்: சிங்கையின் SG சின்னங்கள் சிங்கையின் SG சின்னங்கள், சிங்கையின் தனிச் சிறப்பு மிக்க வாழ்க்கைக் கூறுகளை 49 தொடர் பிம்பங்களின் மூலமாக பிரதிபலிக்கின்றன. இந்த கண்காட்சியின் தொடர்ச்சியாக சிங்கையின் 50ஆவது சின்னமாக சிங்கையின் முத்திரை 2014ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் தேதி வெளியிடப்பட்டது. ஜனவரி 2014ல் சிங்கப்பூரின் பேருந்து நிறுத்தங்கள், மின்வண்டி நிலையங்கள், அக்கம் பக்கத்துக்கு தேநீர் கடைகள், பள்ளிகள் போன்ற பல இடங்களில் ஆங்காங்கே "சிறிய சிவப்பு புள்ளிகள்" தோன்ற ஆரம்பித்தன. ஒவ்வொரு சிவப்பு புள்ளியும் நமது வீவக வீடுகள் முதல் சிங்கப்பூரர்களின் நாவிற்குகந்த துரியன் பழம் வரை சிங்கையின் வாழ்க்கை முறையின் ஒவ்வொரு வில்லையாக காட்சியளிக்கிறது. சிங்கையின் SG சின்னங்களின் நோக்கம் சமூக மற்றும் பாரம்பரிய ஊடகங்கள்; வெளிப்புறத் தளங்கள் போன்றவற்றின் கலவையை உபயோகப்படுத்தி எது, சிங்கப்பூரியன் என்ற தனிச் சிறப்பு மிக்க உணர்வை நமக்குள் உருவாக்குகிறது என்பது பற்றிய உரையாடல்களைத் தொடங்குவதன் மூலம் ஒரு தேசிய சுய உணர்வை வளர்ப்பது ஆகும்.
சிங்கப்பூரர்களின் பல்லின கலாசாரம் மற்றும் விழைவுகளைக் கொண்டாடும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் பங்கு கொள்வதன் மூலமாக 2015 ஆம் ஆண்டு முழுவதும் பள்ளிகள் சிங்கப்பூரின் பொன்விழா ஆண்டை கொண்டாடவிருக்கின்றன. இந்த நடவடிக்கைகள் மூலமாக மாணவர்கள் சிங்கையின் முன்னோடி உணர்வை பிரதிபலித்து சிங்கப்பூரியர் என்ற உணர்வைப் பற்றி ஆராயப் புகுவர். சிங்கையின் வருங்காலத்தை செதுக்கும் வகையில் எல்லையற்ற படைப்பாற்றல் மற்றும் புத்தாக்க சிந்தனைகள் ஆகியவற்றுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் மாணவர்கள் பிறருக்கு முன்னோடிகளாக பல நடவடிக்கைகளில் தலைமைத்துவம் ஏற்க வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன சிங்கையின் 50 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் ஒரு முரசுக் குழு, ஒரு சிங்க நடன முரசு, தபலா மற்றும் ஒரு கிராமிய நாடகம் ஆகியவை புதியதாக எழுதப்பட்ட ஒரு தமிழ் பாட்டின் தாளத்தின் லயத்திற்கு ஏற்றவாறு ஒரே நேரத்தில் செயற்படும். நேற்று வெளியிடப்பட்ட "தேசத்தின் இதயத் துடிப்பு" என்ற இந்த பாடல் நம் நாட்டின் பாரம்பரியத்தையும் இன்றைய வெற்றிகளையும் ஒருங்கே கொண்டாடும் வகையில் " இந்நாட்டில் வேரூன்றிய ஐம்பது வருடத் தொடர்பினால் உழைப்பின் பலனை இன்று சுவைக்கிறோம்" என்று தன் பாடல் வரிகள் மூலம் கொண்டாடுகிறது. SG 50 ஐக் கொண்டாட புதிய எழுச்சிமிக்க வகையில் ஏதாவது உருவாக்க வேண்டும் என்ற உந்துதலில் திட்டத் தலைவர் திரு லோகப்பிரியன் ரெங்கநாதன், 42 இந்த புதிய காணொளியைப் புகுத்தி உள்ளார். "பாடலும் நடனமும் நமது இந்தியக் கலாசாரத்தின் பகுதியாக இருக்கும் போது அந்த கலாசாரத்தை நாம் பெருமைப்படும் கொண்டாட்டத்திற்கும் பயன்படுத்தினால் என்ன" என்ற சிந்தனை தான் இந்த பாடல் காணொளி உருவாகக் காரணமாக இருந்துள்ளது என்கிரார் திரு லோகப்பிரியன் ரெங்கநாதன்.
19 இளம், பாட்டு மற்றும் நடனக் கலைஞர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த பாடல் காணொளி அவருடைய 5 பேர் கொண்ட குழுவிற்கு எழுதி இசையமைத்து உருவாக்க சுமார் ஆறு மாத காலம் பிடித்தது. இந்த திட்டத்திற்கு SG 50 கொண்டாட்ட நிதியிலிருந்து 50,000/- வெள்ளி நிதியுதவி கிடைத்துள்ளது.
பழக்கமான "முன்னேறு வாலிபா" பாடலுக்குப் பதிலாக இந்த புதிய தமிழ்ப் பாடலை, தேசிய தின விழாவில் பாடுவதற்கு வாய்ப்பு கிடைக்கும்.