பயனர்:Sonia2405/மணல்தொட்டி
சிங்கப்பூர் ஆரம்ப வரலாறு
சிங்கப்பூர் குடியரசு தென்கிழக்காசியாவில் உள்ள ஒரு சிறிய நாடு. இந்நாடு ஆரம்பக்காலத்தில் தெமாசெக் என அழைக்கப்பட்டது. 'தெமாசெக்' என்ற பெயர், மலாய் மொழியிலிருந்து வரும் 'டாசிக்' என்ற சொல்லிலிருந்து பிறந்தது. இதன் பொருள் கடல் என்பதாகும். அதாவது, ‘தெமாசெக்’ என்றால் 'கடல் நகரம்' என்று பொருள்படும். சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து பிரிந்தப்பின் 1819ல் சங் நீல உத்தமனால் சிங்கபுரம் என வழங்கப்பட்டு, இறுதியில் சிங்கப்பூர் என மாற்றப்பட்டது. ஒரு நாள் சங் நீல உத்தமன் பந்தான் தீவுக்கு அருகிலுள்ள தீவுக்கு வேட்டையாடச் சென்றபோது அவர் ஒரு கலைமானைக் கண்டார். அதை விரட்டிவிட்டு ஒரு பாறையின் மீது ஏறினார். பாறையின் மேல் நின்றுப் பார்த்தபோது அந்தக் கலைமான் திடீரென்று மாயமாய் மறைந்து விட்டது. அது மறைந்த இடத்தில் ஒரு பெரிய கல் பாறையைக் கண்ட சங் நீல உத்தமன் அதை நோக்கிச் சென்று அந்த பாறையின் மேல் ஏறினார். கல் பாறையின் மேலே ஏறிப் பார்க்கும் போது ஒரு தீவு தெரிந்தது. அந்தக் கடல் அழகாகக் காட்சியளித்தது. அதன் மேல் இருந்த வெள்ளை மணல் நீல உத்தமனை மிகவும் கவர்ந்தது. அந்தத் தீவின் பெயர் தெமாசெக் என்று அவருடைய பாதுகாவலர்கள் கூறினார்கள். நீல உத்தமன் அந்தத் தீவை நோக்கிப் பயணம் செய்ய வேண்டுமெனக் கட்டளையிட்டார். தீவை நோக்கி பயணம் செய்துக்கொண்டிருந்தபோது பயங்கரமான புயல்காற்று வீசியது. கப்பல் புயல் காற்றில் மூழ்கும் சூழ்நிலையில் இருந்தது. அதனைப் பொருட்படுத்தாது நீல உத்தமன் தெமாசெக்கை அடைந்தார். நீல உத்தமன் துமாசெக்கினுள் இறங்கியதும் அங்குள்ள காட்டினுள் வேட்டையாடப் புறப்பட்டார். அங்கே சிவந்த உடலுடனும், கறுத்தத் தலையுடனும், நெஞ்சுப் பகுதி மட்டும் வெள்ளையாக இருந்த ஒரு கம்பீரமான மிருகத்தைக் கண்டார். அது என்ன விலங்காக இருக்கும் என்று அவருடைய பாதுகாவலரைக் கேட்டார். அதற்கு அவர் சிங்கம் என்று கூறினார். அத்தருணம் முதல் அவர் அத்தீவுக்குச் "சிங்கப்பூர்" என்று பெயரிட்டார். புரம் என்றால் நகரம். பின் வந்த வரலாற்று அறிஞர்கள் நீல உத்தமன் இருந்ததற்கான சான்றுகள் இல்லாததால் நீல உத்தமன் சிங்கத்தைப் பார்த்ததாக முழுதாக நம்பவில்லை. அவர் பார்த்தது ஒரு புலியாக இருக்கலாம் அல்லது ஒரு வெள்ளை நரியாக இருக்கலாம் என்று கூறினார்கள். ஆனாலும், அவர்கள் தெமாசெக்கைச் சிங்கப்பூர் என்று அழைத்தார்கள். இவ்வாறே சிங்கப்பூர் என்ற பெயர் தோன்றியது.
1819-ல் சிங்கப்பூர் ஒரு சிறிய மீன்பிடி கிராமமாக இருந்தது. 1819ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் நாள், சர் தாமஸ் ஸ்டாம்போர்ட் ராபிள்ஸ் சிங்கப்பூரில் வந்து இறங்கினார். இப்பகுதியின் புவியியல் அமைவிடத்தையும், அதன் முக்கியத்துவத்தையும் உணர்ந்து கொண்டார். அவர் வணிக நிலையம் ஒன்றை அமைப்பதற்காக 1819 பெப்ரவரி மாதம் 6ஆம் தேதி சுல்தான் ஹுசேன் ஷாவுடன் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி சார்பில் ஒப்பந்தம் ஒன்றைச் செய்து கொண்டார். இவ்வொப்பந்தப்படி சிங்கப்பூரின் தெற்குப்பகுதியில் வணிக நிலையம் ஒன்றையும், குடியேற்றம் ஒன்றையும் அமைக்கும் உரிமையைப் பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி பெற்றுக்கொண்டது. சிங்கப்பூரும் அவரால் வளர்ச்சியடைந்தது.
சோனியா
பெண்டிமியர் உயர்நிலைப்பள்ளி
References: http://muthamilmantram.blogspot.sg/2007/08/blog-post_27.html https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2_%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D http://eresources.nlb.gov.sg/history/events/d24d6da6-0013-4a12-a6bc-68ad1497148e https://en.wikipedia.org/wiki/Early_history_of_Singapore https://images.google.com/