பயனர்:Soniya srinivasan/மணல்தொட்டி
எனது புகைபடம் | |
பெயர் | சோனியா |
---|---|
இயற்பெயர் | சோனியா |
சொந்தப் பெயர் | சோனியா |
பால் | பெண் |
பிறந்த நாள் | 07/05/1997 |
பிறந்த இடம் | பெங்களூர் |
தற்போதைய வசிப்பிடம் | கர்நாடக |
நாடு | இந்தியா |
தேசியம் | இந்தியன் |
இனம் | தமிழன் |
கல்வி, தொழில் | |
கல்வி | Pursuing b.sc |
கல்லூரி | கிறித்து பல்கலைக்கழகம் |
பல்கலைக்கழகம் | கிறித்து பல்கலைக்கழகம் |
பாடசாலை | lfc ammoor |
கொள்கை, நம்பிக்கை | |
பொழுதுபோக்கு | புத்தகங்கள் படித்தல் |
சமயம் | இந்து மதம் |
எனை பற்றி :
என் பெயர் சோனியா.என் தந்தை பெயர் சீனிவாசன். என் ஊரை பற்றி:
வேலூர்க் கோட்டை (Vellore Fort) 16 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஒரு கோட்டை ஆகும். இந்தியாவில் உள்ள தமிழ் நாடு மாநிலத்தில் சென்னைக்கு அருகில் உள்ள வேலூரில் இக்கோட்டை அமைந்துள்ளது. விஜயநகரப் பேரரசுக் காலத்தில் நாயக்கர் மன்னரான, இப்பகுதியை ஆண்ட குச்சி பொம்மு நாயக்கரால் கட்டப்பட்டது. கருங்கல்லால் கட்டப்பட்ட அழகிய இக் கோட்டை இதன் பாரிய மதில்கள், அகழி மற்றும் உறுதியான கல் கட்டுமானங்களுக்குப் பெயர் பெற்றது. ஒரேயொரு வாயில் கொண்ட அமைப்பில் கட்டப்பட்டுள்ள இக்கோட்டை 133 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. 191 அடி அகலமும் 29 அடி ஆழமும் கொண்ட அகழி இக்கோட்டையைச் சுற்றிலும் அமைந்துள்ளது. எனக்கு பிடித்த வவிஞ்ஞானி :
ஆவுல் பக்கிர் ஜைனுலாபுதீன் அப்துல் கலாம் ( அக்டோபர் 15 , 1931 - ஜூலை 27 , 2015 ) பொதுவாக டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம், என்று குறிப்பிடப்படுகிறார். இந்தியாவின் 11 ஆவது குடியரசு தலைவராக பணியாற்றிய இந்திய அறிவியலாளரும் நிர்வாகியும் ஆவார். கலாம் தமிழ்நாட்டில் இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். திருச்சியில் உள்ள புனித ஜோசப் கல்லூரியில் இயற்பியலும் மெட்ராஸ் தொழில்நுட்பக் கல்லூரியில் விண்வெளி பொறியியலும் படித்தார்.
கலாம், குடியரசுத் தலைவராக பதவி ஏற்பதற்குமுன், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலும் (டி.ஆர்.டி.ஓ.) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திலும் , (இஸ்ரோ) விண்வெளி பொறியாளராக பணியாற்றினார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் ஈடுபாட்டினால் அவர் இந்திய ஏவுகணை நாயகன் என்று பிரபலமாக அறியப்படுகிறார். 1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்கு பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - இரண்டாம் அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப, மற்றும் அரசியல் ரீதியாக அவர் முக்கிய பங்காற்றினார். எனினும், சில அறிவியல் வல்லுனர்கள் கலாம் அணு இயற்பியலில் ஆளுமை இல்லாதவர் என்றும், ஹோமி ஜே பாபா மற்றும் விக்ரம் சாராபாய் அவர்களை பின்பற்றினார் என்றும் கூறினர்.