பயனர்:Sorna Sivanandan/மணல்தொட்டி
கடம்ப மரம்
நன்கு முதிர்ந்து வளர்ந்த கடம்ப மரம் 45 மீற்றர் (148 அடி) உயரம் வரை இருக்கும்.இந்த மரம் முதல் 6-8 வருடங்கள் வரை மிக விரைவாக வளர்ந்து மிகப் பெரிய மரமாகி பரந்த கிளைகளையும்,அகலமான இலைகளையும் கொண்டிருக்கும்.அடிமர தண்டின் விட்டம் 100-160 செ.மீ வரை இருக்கும், ஆனால் அனேகமாக இதைவிட குறைவாகத்தான் இருக்கும்.இந்த மரத்தின் இலைகள் 13-32 செ.மீ (5.1 12.6 அங்குலம்) வரை நீளமானது.மரத்தின் 4-5 ஆணடு கால வளர்ச்சிக் காலத்திலேயே கடம்ப மரம் பூக்க ஆரம்பித்துவிடும்.
இந்த மரத்தின் பூக்கள் இனிமையான நறுமணம் கொண்ட,சிவப்பிலிருந்து தோடம்பழ நிறம் வரையுள்ள,கோள வடிவமான (அண்ணளவாக 5.5 செ.மீ (2.2 அங்குலம்) விட்டமுடைய தலைகளைக் கொண்டவையாகும்.கடம்ப மரத்தின் பழங்கள் சிறிய இறுக்கமான சதைப்பிடிப்பான மஞ்சள் கலந்த தோடம்பழ நிறமுடைய பெட்டி வடிவான கூட்டுப்பழங்களாகும். பழங்கள் ஏறக்கூறைய 8000 விதைகளைக் கொண்டிருக்கும், பழங்கள் சிதறி வெடிக்கும் போது விதைகள் வெளியேறி பின்பு அவை காற்றாலும்,மழையாலும் பரவப்படும்.