பயனர்:Sridevi1996/மணல்தொட்டி
ஒற்றை வகை பிறபொருளெதிரிகள் (மோனோக்ளோனல் ஆன்டிபாடிஸ்) என்பவை ஒரே பரம்பரையைச் சார்ந்த B லிம்போசைட்டுகளால் உற்பத்தி செய்யப்பட்ட பிறபொருளெதிரிகள் ஆகும். அதாவது, ஒரு B லிம்போசைட்டிலிருந்து உருவான பல நகலிகள் ஒற்றை வகை பிறபொருளெதிரிகளைத் தயாரிக்கும். இவை ஒரெ வகையானதால், அதற்கேற்ற ஒரு பிறபொருளெதிரியாக்கியிலுள்ள ஒரு குறிப்பான பகுதியில் மட்டுமே பிணையும்.
கண்டுபிடிப்பு
தொகுB லிம்போசைட்டுகள் வேறுபட்ட உயிரணுக்களானதால் உயிரணு பிரிவு மேற்கொண்டு பல நகலிளை உருவாக்க முடியாது. ஆனால் புற்று B உயிரணுக்களால் பிரிவு மேற்கொண்டு பல நகலிளை உருவாக்க முடியும். இந்த புற்று B உயிரணுக்கள் ஒரே பரம்பரையைச் சார்ந்ததால் ஒரே வகையான பிறபொருளெதிரிகளை மட்டுமே உற்பத்தி செய்யும். 1970 களில் B லிம்போசைட்டு(B உயிரணு) புற்றுநோயாகிய பல்கிய சோற்றுப்புற்று( மல்டிபில் மயிலோமா) அறியப்பட்டது. இதை அடிப்படையாகக் கொண்டு 1975 ல் ஜார்ஜ் கோலர், சீசர் மில்ஸ்டெய்ன், மற்றும் நீல்ஸ் காஜ் ஜெர்னெ, B உயிரணுக்களை சாற்றுப்புற்று உயிரணுக்களுடன் இணைத்து ஹைப்ரிடோமா என்னும் கலப்பு உயிரணுவை உருவாக்கினார்கள்.இந்த கண்டுபிடிப்புக்காக அவர்கள் 1984 ஆம் ஆண்டின் உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசை பெற்றார்காள்.
உற்பத்தி
தொகுபொதுவாக சுண்டெலி அல்லது முயலின் உடம்புக்குள் தேவையான பிறபொருளெதிரியாக்கியை செலுத்திய பிறகு அதன் மண்ணீரலிலிருந்து எடுத்த உயிரணுக்களை சாற்றுப்புற்று உயிரணுக்களுடன் இணைப்பது வழக்கம்.