பயனர்:Srivarthini2004/மணல்தொட்டி
எஸ்.ராஜரத்தினம்
சின்னத்தம்பி ராஜரத்தினம் (25 பிப்ரவரி 1915 - 22 பிப்ரவரி2006), 1980 முதல் 1985 வரை சிங்கப்பூரின் துணைப் பிரதம மந்திரியாகவும், 1959 முதல் 88 வரை நீண்ட நாள் சேவை செய்த அமைச்சர் மற்றும் அமைச்சரவை உறுப்பினராகவும், ஒரு சிறுகதை எழுத்தாளராகவும் இருந்தார். சிங்கப்பூர் 1965-ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றதற்கு முக்கியப் பங்கு வகித்தார். அவர் அதிகமான நேரத்தைப் பொதுச் சேவை செய்வதற்கும் சிங்கப்பூரர்களின் சமகாலப் பிரச்சனைகளை ஆராய்ந்து தீர்வு காண்பதற்கும் பயன்படுத்தினார். நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தினுடைய பெயர் அவருடைய நினைவாக எஸ்.ராஜரத்தினம் அனைத்துலக ஆய்வுக் கழகம் என்று மாற்றப்பட்டது.
ஆரம்பகால வாழ்க்கை
சபாபதி பிள்ளை சின்னதம்பி மற்றும் அவரது மனைவி இருவரும் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். அவர்களுடைய இரண்டாவது குழந்தைதான் ராஜரத்தினம். அவர் இலங்கையில் வட்டுக்கோட்டை (தொலபுறம்), யாசபாட்னம் என்ற இடத்தில் பிறந்தார். அதற்குப் பிறகு, அவர் மலாயாவில் உள்ள சிரம்பான் மற்றும் சிலாங்கூரில் வளர்க்கப் பட்டார்.
ராஜரத்தினம், கோலாலம்பூரில் உள்ள செயின்ட். பால்ஸ் சிறுவர்கள் பள்ளி, விக்டோரியா கல்வி நிலையம் மற்றும் சிங்கப்பூர் ராஃபிள்ஸ் கல்வி நிலையத்தில் பயின்றார்.
1937-ஆம் ஆண்டில், லண்டனில் உள்ள கிங்ஸ் கல்லூரியில் அவர் சட்டம் பயின்றார். இரண்டாம் உலகப் போரினால் பணப்பற்றாக்குறை ஏற்பட்டு அவர் படிப்பைக் கைவிட்டார். பிறகு அவர் பத்திரிக்கையாளராகத் தனது பணியைத் தொடங்கினார்.
லண்டனில் ராஜரத்தினம் சில சிறுகதைகளை எழுதினார். அதை ஸ்பெக்டெடர் ஜ.ப் டரன்டு பரிசீலனை செய்தார். மேலும் ராஜரத்தினம் ஜார்ஜ் ஆர்வெல் கவனத்தைப் பெற்றார். ஜார்ஜ் ஆர்வெல், லண்டன் பிபிசி கிழக்கு சேவை இந்தியப் பிரிவில் ராஜரத்தினத்தைத் திரைக்கதைத் துறையில் வேலைக்கு அமர்த்தினார்.
ராஜரத்தினத்தின் சிறுகதைகள் மற்றும் வானொலி நாடகங்கள் பின்னர் எபிகரம் புத்தக நிறுவனத்தால் வெளியிடப்பட்டன. அதன் பெயர் எஸ்.ராஜரத்தினம் சிறுகதைகள் மற்றும் வானொலி நாடகங்கள் என்பதாகும்.1948ஆம்-ஆண்டில் மலாயா ட்ரிப்யூன் செய்தி நிறுவனத்தில் சேர்ந்த போது அவர் சிறுகதைகள் எழுதுவதை நிறுத்திவிட்டார்.
ராஜரத்தினம் 1954-ஆம் ஆண்டில் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்லில் ஒரு பத்திரிகையாளராகச் சேர்ந்தார். அவர் தைரியமாக சிங்கப்பூரை பிரிட்டிஷ் குழு எப்படி ஆட்சி செய்தது என்று எழுதினார்.
அது, கலோனியல் அரசாங்கத்திற்கு அதிருப்தியை உண்டாக்கியது. அவரது பத்திரிகையில், "எனக்குப் பிடித்ததை நான் எழுதுவேன்", என்ற பகுதி அதிகமான மக்களின் கவனத்தை ஈர்த்தது. இதனால், அரசாங்கம் அவரைக் கேள்வி கேட்டது.
அரசியல் வாழ்க்கை
1954-ஆம் ஆண்டு, ராஜரத்தினம் மக்கள் செயல் கட்சி ஒன்றை இணைந்து நிறுவினார். அது அவர், லீ குவான் யூ, கோ சின் சி, கோ கெங் ஸுவி மற்றும் பலருடன் இணைந்து உருவாக்கிய கட்சியாகும். அவர் சிங்கப்பூரை ஒரு பல்லினச் சமுதாய நாடாகவும் ஒரு 'உலக நகரமாகவும்' மாற்ற எண்ணினார்.மேலும், அவர் தீவிரமான முக்கிய அரசியல் பிரச்சாரங்களை இடசாரி சிங்கப்பூர் குழுக்களுக்கு எதிராக ஏற்பாடு செய்தார்.
பாராளுமன்றத்தில் இருந்த காலத்தில், அவர் பண்பாட்டு அமைச்சர் (1959), வெளியுறவு அமைச்சர் (1965-1980), தொழிலாளர் துறை அமைச்சர் (1968-1971), துணைப் பிரதமர் (1980-1985) எனப் பல பொறுப்புகளில் பணியாற்றினார். 1988 இல் ஓய்வு பெறும் வரை மூத்த அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
ராஜரத்தினம் 1966-ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தேசிய உறுதிமொழியை எழுதியதிற்கு பாராட்டப்பட்டார்..
1965-ஆம் ஆண்டில் சுதந்திரம் பெற்றவுடன் முதல் வெளியுறவு அமைச்சராக அவர் இருந்தார். வெளியுறவு மந்திரி பதவி வகித்த காலத்தில், ராஜரத்தினம் சிங்கப்பூரை ஐக்கிய நாட்டிலும் அணிசேரா இயக்கத்திலும் நுழைய உதவினார். அவர் மற்ற நாடுகளுடன் இராஜதந்திர உறவுகளை நிறுவினார் மற்றும் நாட்டின் இறையாண்மையைச் சர்வதேச அங்கீகாரம் பெற வைத்தார்.
அவர் 1960 களில் நாட்டின் கான்ஃரன்டேசிi மோதல் மற்றும் 1970 களின் முற்பகுதியில் பிரிட்டிஷ் துருப்புகள் உட்பட குறிப்பிடத்தக்க சவால்களை எதிர்நோக்கும் காலத்தில், சிங்கப்பூரின் சுதந்திரத்தை நிறுவ, சிங்கப்பூர் தன்னை வலுப்படுத்திக் கொள்ளும் வெளியுறவுக் கொள்கையை நிலைநாட்டினார்.
1964-ஆம் ஆண்டில் இனக் கலவரங்கள் நடந்த இரண்டே ஆண்டுகளுக்கு பின்னர் 1966-ஆம் ஆண்டில், ராஜரத்தினம்’ இனம், மொழி, மதம் ஆகிய வேற்றுமைகளை மறந்து ஒன்றுபட்டு என்ற வரியுடன் சிங்கப்பூர் தேசிய உறுதிமொழி வரைவு எழுதிய போது, அவர் சிங்கப்பூர் பல இனத்தவர்கள் ஒற்றுமையாக வாழும் நாடு என்பதில் வலுவான நம்பிக்கைக் கொண்டு இருந்தார்.
1980 மற்றும் 1990 களில், அரசாங்கம் "தாய்மொழியை" மொழிகள் மற்றும் சீன மேம்பாட்டு உதவி கவுன்சில் (CDAC) மற்றும் Mendaki இன அடிப்படையிலான சுய உதவிக் குழுக்களை ஊக்குவிக்கப் பல கொள்கைகளைச் செயல்படுத்தித் தொடங்கிய போது, ராஜரத்தினம் இந்தக் கொள்கைகளுக்குத் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்
பிற்கால வாழ்வு ராஜரத்தினம் தலைமை மாற்றம் காரணமாக 1988 இல் அரசியல் கட்சி அலுவலகத்தில் ஓய்வு பெற்றார். பின்னர் அவர் தென் கிழக்கு ஆசிய கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தின் மேன்மை வாய்ந்த மூத்த உறுப்பினராக 1 நவம்பர் 1988-லிருந்து 31 அக்டோபர் 1997 வரை பணியாற்றினார் .
1994 இல், ராஜரத்தினம் மறதி நோயால் பாதிக்கப்பட்டார். 2001-ஆம் ஆண்டில் அவரால் நகரவோ அல்லது பேசவோ முடியாமல் போனது.அவருடன் 21 ஆண்டுகளாக இருந்த அவரது நீண்ட நேர பணிப்பெண், செசீலியா தாணடாக் உட்பட ஆறு பணிப்பெண்கள் உதவினர்.
மரணம்
ராஜரத்தினம் அவரது 91 வயது பிறந்தநாளுக்கு 3 நாட்களுக்கு முன்பு இதயச் செயலிழப்பினால் தனது வீட்டில், 22 பிப்ரவரி 2006-ல் காலமானார்.
ராஜரத்தினத்தின் உடலுக்கு அவருடைய முன்னாள் சக ஊழியர்கள் தோ சின் சை, எஸ் தனபாலன், உதுமான் ஒக் , லீ சியன் லூங் அதிபர் எஸ்.ஆர் நாதன் மற்றும் தர்மன் சண்முகரத்தினம் முதலியோர் அவரது வீட்டிற்கு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
ஸ்ரீவர்தினி தஞ்சோங் காத்தோங் பெண்கள் உயர்நிலைப்பள்ளி