பயனர்:SubashiniG/மணல்தொட்டி

சிங்கப்பூர் யூனிவர்சல் ஸ்டூடியோ                 (Universal Studios Singapore)

     சிங்கப்பூர் யூனிவர்சல் ஸ்டூடியோவின் கட்டுமானப் பணியை 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் 19-ஆம் தேதி தொடங்கியது. இதற்குரிய மாதிரி வரைபடத்தை 2009-ஆண்டு அக்டோபர் 20-ஆம் தேதி வெளியிட்டது. சிங்கப்பூர் அரசாங்கம் 2010-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. மேலும், இது திறந்த ஒன்பது மாதங்களில் 2 மில்லியன் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது.  இது தென்கிழக்காசியாவிலேயே முதன்முறையாகத் திறக்கப்பட்ட மிகப் பெரிய பூங்காவாகும். இது ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சை-ஃபை நகரம், பழைய எகிப்து, நியூயார்க், இழந்த உலகம், ஃபார் ஃபார் அவே, மடகாஸ்கர், ஹோலிவுட் ஆகியவையாகும்.

வரலாறு

     சிங்கப்பூரில் செந்தோசா உல்லாச உலகத் தீவு 2007-ஆம் ஆண்டு ஏப்ரல் 16-ஆம் தேதி கட்டத் தொடங்கப்பட்டது. கட்டுமானப் பணிகள் தொடர்ந்து 34 மாதங்கள் நடைபெற்றன. 2010 ஆம் ஆண்டு ஜனவரி 20-ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக அத்தீவு திறக்கப்பட்டது. மேலும், யூனிவர்ஸல் ஸ்டூடியோ, சூதாட்டக் கேளிக்கைக் கூடம் போன்றவற்றையும் திறந்தனர். 2010-ஆம் ஆண்டு 14-ஆம் தேதி முதல் 21-ஆம் தேதி மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக யூனிவர்ஸல் ஸ்டூடியோ திறக்கப்பட்டது. சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பார்ப்பதற்கு மட்டுமே அனுமதி கொடுக்கப்பட்டது; சவாரி செய்வதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. மேலும், சுற்றுலாப் பயணிகள் இத்தீவைச் சுற்றிப் பார்ப்பதற்குச் சிங்கப்பூர்ப் பணம் $10 வெள்ளி வசூலிக்கப்பட்டது.

அமைப்பு

     செந்தோசா உல்லாச உலகம் 49 ஹெக்டேர் (120 ஏக்கர்) பரப்பளவு கொண்டது. அதில் யூனிவர்சல் ஸ்டூடியோ 20 ஹெக்டேர் (49 ஏக்கர்) பரப்பளவில் அமைந்துள்ளது. இது ஏழு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மண்டலமும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பாத்திரத் தோற்றங்கள், சாப்பாடு, விற்பனைக் கூடங்கள் எனப் பல்வேறு அம்சங்களைக் கொண்டு விளங்குகிறது. மேலும், இது 30 உணவகங்களையும் உணவு வண்டிகளையும் 20 சில்லறைக் கடைகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

ஹோலிவுட் (Hollywood)

ஹாலிவுட் பவுல்வர்ட் (Hollywood Boulevard), 1970களின் பின்னணியிலான உண்மைகளை மாறும் கட்டிடக் கலை, பனை மரங்கள் போன்றவற்றின்மூலம் கட்டமைத்தார். ஹோலிவுட்டானது பூங்காவின் ஆரம்ப நுழைவாயிலிலேயே அமைந்துள்ளது. இதில் பல வகையான உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.

கவர்ச்சியும் பொழுதுபோக்கும்

·       சீசேம் தெருக்காட்சி (Sesame Street Show - When I Grow Up) - வளர்ந்த பிறகு தங்களது குறிக்கோள் என்ன என்பதை இசை மேடையின்மூலம் பகிர்ந்துகொள்ளலாம். அதாவது, கால்துறை அதிகாரி, ஒரு பாடகர், ஒரு தீயணைப்பு வீரர், தொல்லுயிரியலாளர் போன்ற துறைகளில் எந்தத் துறையில் வேலை செய்யப் பிடிக்கிறது என்பதைப் பகிர்ந்துகொள்ளலாம்.

·       ஹாலிவுட்டின் கண்கவர் ஏரி (Lake Hollywood Spectacular) – அழகான வானவேடிக்கையுடன் கூடிய இசைநிகழ்ச்சி பொதுமக்களுக்குக் காண்பிக்கப்படுகிறது.

·       ஹாலிவுட்டின் புகழ்பெற்ற பொக்கிஷம் (Hollywood walk of Fame) – யூனிவர்சலின் திரைப்படங்களில் நடித்த மர்லின் மன்றோ (Marilyn Monroe), மரங்கொத்தி, மினியன் போன்ற நட்சத்திரங்களைப் போன்ற உருவ அமைப்புகளும் உள்ளன.

சாப்பாடும் உணவகங்களும்

·       பிஸ்ட்ரோ சீன ஹோலிவுட் (Hollywood China Bistro) – பாரம்பரிய சீன உணவுகள் இவ்வுணவகத்தில் பரிமாறுகிறார்கள்.

·       மீல்ஸ் டிரைவ் இன் (Mel’s Drive-In) – 1950லிருந்து இருக்கும் உன்னதமான அமெரிக்க விடுதி

·       ஸ்டார்பக்ஸ் (Starbucks) – யூனிவர்சல் ஸ்டூடியோவில் ஒரு காபி கடை உள்ளது.

பழைய எகிப்து (Ancient Egypt)

     எகிப்தியர்களின் பொற்காலமாகிய 1930ஆம் ஆண்டு வரலாற்றை அடிப்படையாகக் கொண்டதுதான் பழைய எகிப்து ஆகும். இது அரிதாகக் கிடைக்கும் சதுரதூபிகளையும் பிரமிடுகளையும் கொண்டுள்ளது. மேலும், ஃபரோஸ்களின் கல்லறைகளும் (Pharaohs Tombs) உள்ளன. இருட்டறையில் சவாரி செல்லும் வண்டியும் உள்ளது. அவ்வாறு சவாரி செய்துகொண்டே அங்குள்ள மம்மிகளைப் பார்த்துக்கொண்டே செல்லுமாறு வசதி உள்ளது.

ஜூராசிக் பூங்கா (Jurassic Park)

     யூனிவர்சல் ஸ்டூடியோவில் உள்ள காணாமல் போன உலகத்தில் இரண்டுவிதமான பாரம்பரிய கண்கவர் இடங்கள் உள்ளன. ஜூராசிக் பூங்கா, நீர் உலகம் ஆகியவை ஆகும். மேலும், இங்குத் தண்ணீர் சவாரி செய்யலாம். இது மக்களிடையே மிகவும் புகழ்பெற்ற விளங்குகிறது. கெவின் காஸ்ட்னர் (Kevin Costner) நடித்த தண்ணீர் உலகம் என்ற நிகழ்ச்சி நேரடியாக மேடையில் நடித்துக் காட்டப்படுகிறது.

தூரமுள்ள கோட்டை (Far Far Away)

     தூரக் கோட்டையில் கனவுலக அனிமேஷன் (DreamWorks Animation’s)என்னும் அமைப்பு இடம்பெற்றுள்ளது. மேலும், இதில் 40 மீட்டர் உயரமுள்ள பாத்திரப் படைப்புகள் இருக்கின்றன. அதாவது, ‌ஷ்ரெக் (Shrek), கழுதை (Donkey), புஸ் இன் பூட்ஸ் (Puss in Boots), இளவரசி பியோனா(Princess Fiona), பினோச்சியோ (Pinocchio), இளவரசன் சார்மிங் (Prince Charming) போன்ற பாத்திரப் படைப்புகள் இடம்பெற்றுள்ளன.

மடகாஸ்கர் (Madagascar)

    மடகாஸ்கரில் கனவுலக அனிமேஷன் (DreamWorks Animation’s) மிகவும் புகழ்பெற்றது. பூங்காவிலுள்ள மடகாஸ்கர் நொறுங்கியதில் அலெக்ஸ், குளோரியா, மார்ட்டி, மெல்மேன் போன்றவை அதிர்ஷ்டவசமாகத் தப்பின. மேலும், இதில் இரண்டு சவாரிகளும் உள்ளன. அவ்வாறு சவாரி செய்யும்போது ஆங்காங்கு உள்ள விலங்குகளைப் பார்த்துக்கொண்டே செல்லும்வண்ணம்  அந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளத.

சுபாஷினி கணேசன் (1E3)

யூனிட்டி உயர்நிலைப்பள்ளி

Subashini Ganesan (1E3)

Unity Secondary School 

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:SubashiniG/மணல்தொட்டி&oldid=2251138" இலிருந்து மீள்விக்கப்பட்டது