பயனர்:Subha1727/மணல்தொட்டி

கடலூர் சுபா அருணாசலம்

கடலூர் சுபா அருணாசலம்(19.08.1987) - நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள சிறிய கிராமமான திருமுல்லைவாசல் பிறந்தவர் . 10 ஆண்டுகளுக்கும் மேலாக கடலூரில் , காமராஜர் நகர் பகுதியில் வசித்து வந்தார். இவர் தற்போது சென்னையில் டாக்டர்.எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர். இவர் ஒரு பன்முகத் திறமையாளர், பட்டிமன்ற பேச்சாளர், கவிஞர், ஒலி வடிவ நூல்களுக்கு குரல் கொடுப்பது, ஒலி-ஒளி வடிவ விளம்பரங்கள் தயாரித்தல் , தன்னம்பிக்கை உரை வழங்குதல் , போட்டி தேர்வு மாணவர்களுக்கு வகுப்பெடுத்தல் , skill developer என்ற பயிற்சி மைய்யத்தை உருவாக்கி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பயிற்சிகள் மற்றும் மென் திறன் பயிற்சி அளித்தல், "subha Store" என்ற இணைய வழி விற்பனை கடை உரிமையாளர் , சுபா அருணாசலம் மற்றும் skill developer you tube சேனல்கள் மூலமாக பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் வழங்கி வருதல் , என தன்னை தமிழ் பணிக்கும் சமூகப் பணிக்கும் அர்ப்பணித்தவர்.

பணி அனுபவம் தொகு

இப்படி பல்வேறு முகங்களில் 800 க்கும் மேற்பட்ட இணைய மற்றும் பொது பட்டிமன்றங்கள் , கவியரங்கங்கள் ,கருத்தரங்கங்கள் , வலையொலி நிகழ்வுகளில் பேசி வருகிறார் . 10 ஆண்டு காலம் , மனித வளம்(Human Recruitment) , பங்கு பரிவர்த்தனைகள், வாடிக்கையாளர் குறைகள் தீர்க்கும் துறை(Customer Care Officer) , அலுவலக மேலாண்மை துறை , போட்டித் தேர்வு தயாரிப்பு போன்ற பல துறைகளில் குறிப்பிடத்தக்க முன்னனுபவம் பெற்றவர்.தற்போது முனைவர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக மேலாண்மை புலத்தில், சென்னைல் மிகச் சிறப்பாக பணியாற்றி வருகிறார் .

கல்வித் தகுதி தொகு

  • இளங்கலை வணிக நிர்வாகம் (Bachelor of Business Administration (AVC college, Mayiladuthurai ),
  • சர்வதேச வணிகத்தில் முதுகலை வணிக நிர்வாகம், (Master of Business Administration in International Business, Annamalai University)
  • கணக்கியல் மற்றும் நிதியில் பட்டயம் (Diploma in Accounting and Finance,Annamalai University)
  • அலுவலக நிர்வாகத்தில் சான்றிதழ் திட்டம், (Certificate Program in Office Management ,Annamalai University)
  • பங்குச் சந்தை நடவடிக்கைகளில் முதுகலை டிப்ளமோ (Post Graduate Diploma in Stock Market Operations ,(Annamalai University)
  • மனித வள மேம்பாட்டுத் துறையில் முனைவர் பட்ட ஆய்வு (Ph.D in HRM (Organizational Behavior) (Annamalai University)

ஆராய்ச்சி சார்ந்த பங்களிப்பு தொகு

தற்போது அண்ணாமலை பல்கலைகழகத்தில் “நிறுவன உளவியல்” (Organisational Behavior) துறையில் மெய்ப்பாட்டு தொழிலாளர்(Emotional Labor)” சார்ந்து முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டு வருகிறார். இந்தியாவிலேயே முதல் முறையாக இந்த Emotional Labor இல் ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறார். வறுமை , வசதி வாய்ப்பின்மை , குடும்ப சுமை என்று பல்வேறு சிரமங்களுக்கு இடையே தன் கற்றல் பழக்கத்தை விடாமல் , பெரு முயற்சி செய்து இத்தனை பட்டங்கள் பெற்றுள்ளார் என்பது மிகையாகாது .

“மனித வள மேம்பாட்டுத் துறையில் வளர்ந்து வரும் சிக்கல்கள்”(Emerging Issues in Human Resource Development) என்ற நூலின் ஆசிரியர். பத்து ஆய்வு கட்டுரைகள் , சில பதிப்புகள் செய்துள்ளார். தன் ஆராய்ச்சி பணிகள் குறித்து பல சர்வதேச , தேசிய கருத்தரங்குகளில் உரையாற்றி உள்ளார் . இவர் ஆய்வுக் கட்டுரைகள் scopus மற்றும் web of science என்று கூறப்படும் சர்வதேச அளவில் அட்டவணை இடப்பட்ட இதழ்களில் வெளியாகி உள்ளது.இவர் பல்வேறு கல்லூரிகளில் தன்னம்பிக்கை உரைகளை நிகழ்த்தி உள்ளார்.

"VFYRBM-வணிக மற்றும் நிர்வாகத்தில் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான மெய்நிகர் மன்றம்" என்ற அமைப்பின் நிறுவனர்.

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் தொகு

பல்வேறு தொலைக்காட்சிகளில் தன் பேச்சு திறன் மற்றும் கவிதை திறனை வெளிப்படுத்தி உள்ளார் .

தொலைக்காட்சிப் பேச்சரங்கங்கள் பங்கேற்ப்பு :

1. சன் தொலைக்காட்சி, அரட்டை அரங்கம்,

2. கலைஞர் தொலைக்காட்சி, அழகிய தமிழ்மகள்,

3. ராஜ் தொலைக்காட்சி, அகட விகடன்,

4. வேந்தர் தொலைக்காட்சி, இது உங்க மேடை

5. புதுச்சேரி தொலைக்காட்சி நிலையம்

6. பொதிகை தொலைக்காட்சி, சென்னை

7. உள்ளூர் தொலைக்காட்சி நிகழ்சிகளில் பங்கெடுப்பு

8. தமிழன் தொலைக்காட்சி படிமன்றங்கள்

9. கேப்டன் தொலைக்காட்சி பட்டிமன்றங்கள்

10. மாயம் தொலைக்காட்சி - (You tube Channel)

பல்வேறு கல்வி நிலைய நிகழ்சிகளில் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டு பல்வேறு தலைப்புகளில் பேசி வருகிறார். இவர் உருவாக்கிய “skill developer” என்ற பயிற்சி பட்டறை மூலம் ஆயிரத்திற்க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் பயனடைந்துள்ளனர். பல்வேறு கிராமப்புற மாணவர்களுக்கு இலவசமான சேவைகளை தந்து வந்துள்ளது இந்த skill developer . பெண்களின் முன்னேற்றம் , சமூக தொண்டு , தமிழ்த்தொண்டு என்று சமூக வளர்ச்சிக்கு தன் பங்கினய் சிறப்பாய் செய்து வருகிறார் .

வழங்கப்பட்ட விருதுகள் தொகு

இந்த சேவைகளை பாராட்டி புதுச்சேரி சிகரம் society 2020 மார்ச் மாதம் மகளிர் தின விழாவில் " சிகரம் தொட்ட மகளிர்" என்னும் விருதை வழங்கி ஊக்குவித்தது . இவ்வாறு சாதனைப்பெண் 2018(மக்கள் சேமம் அறக்கட்டளை, கோவை) மகளிர் மாமணி (தியாக துருக்கம் தமிழ்ச்சங்கம்), “இலக்கியச் செம்மல்”, “அறிவேந்தல் விருது” (புலியூர் கேசிகன் இலக்கிய பேரவை,சென்னை)(2020), ”சாதனைப் பெண் 2021’ என்ற விருதினை தயாளன் அறக்கட்டளை, மற்றும் அகத்தியர் தமிழ்சங்கம்,பம்மல் இணைத்து வழங்கியது. “சாதனை மகளிர்” என்ற விருதை தமிழ் படைப்பாளர்கள் சங்கம் வழங்கி சிறப்பித்தது. “தமிழ்ப் பணி செம்மல்” (2022) என்ற விருதை கலந்துரையாடுவோம் குழு தமிழ்நாடு அமைப்பு வழங்கியது. இவ்வாறு சில விருதிகளை பெற்றுள்ளார் .

வெளியிட்டுள்ள நூல்கள் தொகு

“ஆம் நீ என் பகல் கனவு” என்ற இவரின் காதல் கவிதைத் தொகுப்பு அமேசான் கிண்டல்-ல் கிடைக்கும்

தமிழ்ப் பணி தொகு

கடலூர் முத்தமிழ்ச் சங்கம்(2017 முதல்) – துணைத் தலைவர் தமிழ் படைப்பாளர்கள் சங்கம்(கடலூர் கிளை) - துணைச் செயலாளர்(2015 முதல்) “கலந்துரையாடுவோம் குழு,தமிழ்நாடு” - ஒருங்கிணைப்பாளர். (2020 முதல் ) தமிழர் தளம் – ஒருங்கிணைப்பாளர்(2022முதல் )

பிற பொறுப்புகள் தொகு

நிறுவனர் - திறன்கள் உருவாக்குவோர் உயர் திறன் மையம் (Founder of Skill Developer (Up-skilling Center ) நிறுவனர் - வணிக மற்றும் நிர்வாகத்தில் இளம் ஆராய்ச்சியாளர்களுக்கான மெய்நிகர் மன்றம் (Founder of Virtual Forum for Young Researcher in Business and Management)

பிற இணைப்புகள் தொகு

[1] [2] [3]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Subha1727/மணல்தொட்டி&oldid=3908833" இலிருந்து மீள்விக்கப்பட்டது