பயனர்:Subramaniyam ajanthan/மணல்தொட்டி

உள்ளுராட்சித் தேர்தல் 2018 இல் உரும்பிராய் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் தமிழீழ விடுதலை இயக்கம் சார்பாக தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளராக தியாகராஜா நிரோஷ் சேவையாற்றி வருகின்றார். இவர் இலங்கையின் தலைநகரும் வரலாற்று முக்கியத்துவம் மிக்க மக்கள் சபையான கொழும்பு மாநகர சபை உறுப்பினராகவும் தேர்தல் வாயிலாகத் தெரிவு செய்யப்பட்டு சேவையாற்றியுள்ளார். மிக இளம் வயதில் தேர்தல் அரசியலில் பதவிகளை வகித்துள்ளார்.

பின்னணி

தொகு

யுத்தம் மற்றும் அதனோடு இணைந்த தாக்கங்களால் மிகவும் கஸ்டங்களை எதிர்கொண்ட நிலையில் பாடசாலைக் கல்வியில் பல தடவைகள் இடைவிலகளைச் சந்தித்துள்ள போதும் பட்டப் பின்படிப்பு வரையில் கல்வியைத் தொடர்ந்துள்ளார். மல்லாவிப் பகுதியில் அரச பயங்கரவாதத்தினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களில் சிறுவனாக படுகாயமுற்றார்.

மாணவ அரசியல் ஈடுபாடு

தொகு

பாடசாலை மாணவராக இருந்த காலம் மற்றும் பல்கலைக்கழக காலம் வரையில் தமிழர் உரிமைப்போராட்டத்தில் மாணவர் எழுச்சிக்கான செயற்றிட்டங்களில் அதீத ஈடுபாடு காட்டியுள்ளார்.டியாழ் குடாநாடு கடும் இராணுவ கெடுபிடிக்குள் இருந்த சமயத்தில் ஊடக மாணவர் அமையம் என்ற அமைப்பினை 2016 இல் தாபித்து அதன் தலைவராகவும் பணியாற்றினார்.

இவ் அமைப்பு யாழ்ப்பாணம் திறந்த வெளிச்சிறைச்சாலையாக இருந்தபோது, மக்களின் அவலம் குறித்த தகவல்களை திரட்டுவதும் வெளிக்கொண்டுவருவதுமான அரும் பணியினை அக்காலகட்டத்தில் மேற்கொண்டது. இவ் அமைப்பின் பத்திராதிபராக கடமையாற்றிய தமிழ் மாணவர் ஒன்றியத்தின் தலைவர் சகாதேவன் நிலக்சன் ஊரடங்கு வேளையில் இராணுவ புலனாய்வாளர்களால் அவரது கொக்குவில் இல்லத்தில் வைத்து சுட்டுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறான கொலைகளுக்கு நீதி இன்றும் கிட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான பின்னணியில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் கொழும்பில் நேர்வே அரசின் நிதிப்பங்களிப்பில் ஏற்பாடு செய்திருந்த பயிற்சி ஒன்றுக்காக யாழில் இருந்து சில மாணவர்களை கொழும்பிற்கு 2006 இல் அனுப்பியது. அப் பயண வசதியைப்பயன்படுத்தி கிறிஸ்தவ பாதிரியார் ஒருவரின் உதவியுடன் இராணுவக் கெடுபிடிகளினூடக கொழும்பில் இடம்பெயர்ந்து இருக்கவேண்டியிருந்தது.. கொழும்பில் இருந்த நிலையில் அரசியல் தலைவர்கள் சிலரின் தொடர்புகளோடு ஜனநாயக ரீதியில் செயற்பட்டார்.

பத்திரிகையாளனாக….

தொகு

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் உயர்தரம் கற்றுக்கொண்டிருக்கும் போது நமது ஈழநாடு பத்திரிகையில் பிரதேச செய்தியாளராக 2004 இல் இணைந்து பணியாற்றத் தொடங்கினார். பிரதேச செய்தியாளராக பிரதேசத்தின் குறை நிறைகளை பத்திரிகைக்கு அறிக்கையிடுவதும் அரச காரியாலயங்களில் சென்று செய்தி சேகரிப்பதும் பகுதி நேரமான பணியாக அமைந்தது. இதன் பின்னர் குடாநாட்டில் இருந்து வெளியேறிய நிலையில் தினக்குரல் பத்திரிகையில் இணைந்து பணியாற்றினார்.

இவ்வாறு பணியாற்றும் போது வன்னி மீது இலங்கைப் படைகள் இறுதி யுத்தத்தினை மேற்கொண்டு கொண்டிருந்தன. இதன் போது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் எல்லாம் மிகவும் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டன. அவ்வாறான சந்தர்ப்பத்தில் வன்னியில் அரச படைகளால் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் வாராவாரம் ஞாயிறு தினக்குரலில் யதார்த்தன் என்ற புனை பெயரில் தொடர்ச்சியாக எழுதினார். இந் நிலையில் ஞாயிறு தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அந் நியமனத்திற்கு மேலாக அப் பத்திரிகையில் வாராந்தம் ஞாயிறு தினக்குரலில் சொந்தப் பெயரிலும் புனை பெயரிலும் அரசியல் களரிக்கு கட்டுரைகளையும் அரசியல் தலைவர்களின் பேட்டிகளையும் எழுதியுள்ளார்.

அரசியல் ஈடுபாடு காரணமாக விலகிக்கொண்டு சிவில் சமூக வேலைகளில் அக்கறை செலுத்தினார். தொடர்ந்து ஞாயிறு வீரகேசரி பத்திரிகையின் சமகால அரசியல் களரி பகுதியில் சொந்தப் பெயரிலும் அரசியல் பத்திகளையும் அரசியல் தலைவர்களை நேர்காணலுக்கு உட்படுத்துவதையும் மக்கள் பாதிக்கப்பட்டவர்களின் அபிப்பிராயங்களை சாட்சியங்களாக தொகுப்பதனையும் மேற்கொண்டுள்ளார்.

புலனாய்வு ஊடக பயிற்றுவிப்பாளனாக

தொகு

உலக அளவில் லஞ்சம் ஊழல், மனித உரிமைகள் பற்றி கவனம் செலுத்துகின்ற நிறுவனமான டிரான்பரன்சி இன்டநசனல் நிறுவனத்தில் புலனாய்வு ஊடகப் பயிற்றுவிப்பாளராக பணியாற்றினார். இப் பயிற்சி நொறி ஆட்சியில் இருந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் மிகுந்த நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டு பின்னர் தடைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மனித உரிமைப்பணி இக் காலப்பகுதியில் வடக்கு மனித உரிமைகள் நிறுவனம் என்ற நிறுவனத்தினை ஏனைய சகாக்களுடன் இணைந்து உருவாக்கி செயற்படுத்திவருகின்றார். இந் நிறுவனத்தின் வாயிலாக காணாமல் போனோர் விடயம், இராணுவ மயமாக்கம், மக்களின் பொருளாதார உடமைகள் மீது அரசு செலுத்தும் இராணுவ ரீதியிலான ஆக்கிரமிப்புக்களை எதிர்த்தல், மனித உரிமை ரீதியில் பாதிக்கப்படுவோருக்காக பலமாக இருத்தல், குரல் கொடுத்தல், செயற்படுதல், பிரச்சினைகளை சர்வதேச அமைப்புக்களுக்கு எடுத்துச் செல்லுதல் என செயற்படுத்தப்பட்டு வருகின்றது. இவர் சர்வதேச மன்னிப்புச் சபையுடனும் பல்வகையில் இணைந்து பணியாற்றிவருகின்றார்.

ஜனநாயக செயற்பாட்டில்

தொகு

அரசியல்

தொகு

கடந்த 2018 ஆண்டைய உள்ளுராட்சித் தேர்தலில் உரும்பிராய் தேர்தல் தொகுதியில் வெற்றி பெற்று வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் உறுப்பினராகவும் பிரதேச சபையில் தவிசாளருக்கான (தலைவருக்கான) தேர்தலிலும் வென்று முப்பத்து எட்டு உறுப்பினர்களைக் கொண்ட சபையின் தலைவரானார். இதன் மூலம் வலிகாமம் கிழக்கு பிரதேசத்தின் முதற் பிரஜையும் நிறைவேற்று அதிகாரியும் ஆனார். முன்னாள் கொழும்பு மாநகர சபை உறுப்பினரும் ஆவார்.

போருக்குப் பின்னரான காலப்பகுதியில் மிகவும் நெருக்கடி மிக்க சமயத்தில் கொழும்பு மாநகர சபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவ்வாறு அறிவிக்கப்பட்ட சூழ்நிலையில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற பிரச்சினைகளை கொழும்பில் ஓர் பரப்புரையாக்க வேண்டிய அவசியம் காணப்பட்டது. அவ் அவசியத்தின் மத்தியில் தேர்தல் பிரச்சார களத்தினை தமிழ் மக்களுக்கு எதிராக வடக்கிலும் கிழக்கிலும் மேற்கொள்ளப்படும் அநீதிகளுக்கு எதிராகப் பயன்படுத்த புத்திஜீவிகள் சிலராலும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலராலும் சிந்தித்து நாட்டில் அச்சமயம் நிலவும் பயங்கரவாதத் தடைச்சட்டம் மற்றும் அவசரகாலத் தடைச்சட்டம் என்பவற்றுக்கு உள்ளாகவும் குரல் எழுப்புவதற்கு தேர்தல் களத்தினை பாவிப்பது என முடிவு எட்டப்பட்டது. அதன் பிரகாரம் கொழும்பில் மிகவும் துணிச்சலுடன் மனித உரிமை விடயங்களில் குரல் கொடுத்தும் செயற்பட்டும் வந்த மனோ கணேசன் அவர்களது சின்னத்தில் இடது சாரித் தலைவர்கள் விக்கிரமபாகு கருணாரட்ண மற்றும் சிவில் அமைப்புக்கள் இணைந்து போட்டியிட்டன. இக் கூட்டில் மனித உரிமைச் செயற்பாட்டாளரும் அரசியல் தலைவருமான மனோ கணேசன் அவர்களின் தலைமையில் கொழும்பு மாநகர சபைக்கு இருபத்து நான்காவது வயதில் இளம் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார். வெற்றி வாய்ப்பு சில வாக்குகள் தவறிய நிலையில் கட்சித் தலைமையின் தீர்மானத்திற்கிணங்க பின்னர் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பின்னர் ஆட்சி மாற்றத்தின் பின்னர் கொழும்பில் இருந்து வெளியேறி மீண்டும் யாழ் குடாநாட்டில் நிரந்தரமாக வந்ததுடன் யாழில் பல்வேறுபட்ட ஜனநாயகப் போராட்டங்களிலும் ஈடுபட்டார்.

இந் நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் வேட்பாளராகக் கடந்த 2018 இல் இடம்பெற்ற உள்ளுராட்சித் தேர்தலில் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டார்.

சமாதான நீதவானாக சத்தியப்பிரமாணம்

தொகு

அகில இலங்கை சமாதான நீதவானாக மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் அவர்கள் முன்னிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். மாநகர சபை உறுப்பினராக பதவி வகித்த இவர் தனது 30 வயதில் சமாதான நீதவனாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

கல்வி

தொகு

ஆரம்பக் கல்வியை புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி, இடம்பெயர்வின் பின்னர் வன்னிப் பெருநிலப்பரப்பில் குறிப்பாக கிளிநொச்சி கனிஷ்ட வித்தியாலயம், மாங்குளம் மகாவித்தியாலயம், முழங்காவில் மகாவித்தியாலயம், கப்டன் பண்டிதர் கல்வி வளர்ச்சிக் கழகம், முழங்காவில் மகாவித்தியாலயம், மல்லாவி மத்திய கல்லூரி ஆகியவற்றில் சாதாரண தரம் வரையிலும் உயர் தரத்தினை கோப்பாய் கிறிஸ்தவ கல்லூரியிலும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலும் கற்றார். பல்கலைக்கழகக் கல்வியை யாழ்பல்கலைக்கழக ஊடக வள பிரிவில் கற்ற போதும் நிறைவுறுத்தவில்லை. பின்னர் கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப்பிரிவில் இதழியல் துறை டிப்பிளோமா, சட்ட பீடத்தின் மனித உரிமைகள் துறையிலும் கற்றார். பட்டப் பின் படிப்பினை இரஜரட்ட பல்கலைக்கழகத்தில் ஐக்கியநாடுகள் சபையின் சிறுவர் நிதியத்தின் அணுசரனையுடன் கற்றுள்ளார். ஊடகத்துறை மற்றும் ஜனநாயகம் குறித்து பல்வேறு பயிற்சிகளையும் பெற்றுள்ளார். இலத்திரனியல் ஊடகத்துறையில் உயர் டிப்பிளோமாவை நேர்வேஜிய வெளிவிவகார அமைச்சு மற்றும் நேர்வேஜிய ஊடக அமைப்புக்களின் அனுசரனையுடன் சிங்கப்பூரில் பெற்றுள்ளார்.

உள்நாட்டில் நிலைமாறு காலப்பகுதி முரண்பாடும் சமாதானத்தினைக் கட்டியெழுப்புதல் துறையில் சான்றுக்கற்கை(மனிதாபிமானத்திற்கான முகவராண்மை), முகாமைத்துவமும் தகவல் தொழில் நுட்பமும் டிப்பிளோமா (விஞ்ஞான தொழில் நுட்ப அமைச்சு), குற்றவியலும் நீதித்துறை அறிக்கையிடலும்( இலங்கை பத்திகை தாபனம்), சிறுவர் உரிமையும் பாதுகாப்பும் (சேவ் த சில்ரன்), யுத்தத்தின் பின்னரான அறிக்கையிடலும் சமாதானத்தினைக் கட்டியெழுப்புதலும்(சார்க் பத்திகையாளர் இணைவு), போருக்குப் பின்னரான முரண்பாட்டுடன் தொடர்பான விடயங்கள்(பத்திரிகை தாபனம்), யுத்தச் சட்டங்களும் போருடன் தொடர்புடைய விடயங்களும்( சப்மா) போன்ற பலதரப்பட்ட ஆட்சி முறை சார்ந்த கற்கைகளை பூர்த்தி செய்துள்ளார்.