பயனர்:Successmahes1975/மணல்தொட்டி

எங்கே செல்கிறது இன்றைய இளைய தலைமுறை? இன்றைய இளைய தலைமுறையில் 80 சதவீதத்தினர் திரைப்பட்ட நடிகர் மற்றும் நடிகைகளுக்கு பல்லாக்கு தூக்குதல், மட்டை பந்து போட்டிகளை கண்டுகளித்தல், பெரியோர்களை மற்றும் பெற்றோர்களை மதிக்காதிருத்தல், தன்னுடைய சமுதாய பொறுப்புகளை உணராதிருத்தல் போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். சமுதாயத்தில் நடந்து கொண்டுருக்கின்ற சமுதாய சீர்கேடுகளை பற்றி கண்டுகொள்வதேயில்லை. வீட்டில் பெற்றோர்களுக்கு உதவியாக இருப்பதில்லை. இப்படியே சென்றால் இன்றைய இளைய தலைமுறையின் எதிர்காலம் யாருடைய கையில்? நாளைய இந்தியாவின் எதிர்காலம் யாருடைய கையில்? காரணம் யார்? பள்ளிகளில் தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பது கண்டனத்திற்குரியது. அவ்வாறு மீறி கண்டித்தால் அந்த சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் கண்டிக்கப்படுகிறார்கள். அப்படி என்றால் தவறு செய்யும் மாணவர்களை திருத்தி நல்வழிப்படுத்தி திருத்துவது யார்?

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Successmahes1975/மணல்தொட்டி&oldid=1945714" இலிருந்து மீள்விக்கப்பட்டது