பயனர்:Sudalaimuthu2555/மணல்தொட்டி

எனது ஊர் _ திருக்கோளூர் தூத்துக்குடி மாவட்டத்தில் திருச்செந்துதூர் வட்டத்தில் திருநெல்வேலி - திருச்செந்தூர் சாலையில் ஆழ்வார்திருநகரியில் இருந்து ½ கி.மீ தொலைவில் பால்குளம் என்ற சிற்றூர் வழியாக நாசரேத்துக்கு செல்லும் வழியில் , தாமிரபரனி நதியின் கடைசிஅணைக்கட்டான திருவைகுண்டம் ஊரில் தென் பகுதியிலிருந்துபிரியும் கால்வாயின் தென் கரையில் அமைந்துள்ளது எங்களூரில் புகழ்பெற்ற ஒரு பெருமாள் கோவில் உள்ளது இவ்வூரில் 12 ஆழ்வார்களில் ஒருவரான மதுரகவி ஆழ்வார் பிறந்த தலமாகும். மற்ற ஆழ்வார்களெல்லாம் இறைவனை புகழ்ந்து முக்திஅடைந்தனர் ஆனால் இவரோ குருவையே இறைவனாக ஏற்று பா டி முக்தி பெற்றார் இவர் பாடிய பாடல்கள் 11 மட்டுமே.அவை “கன்னி நுண் சிறுதாம்பு” யென்ற தலைப்பில் நாலாயிர திவ்விய பிரபந்த்த்தில் தொகுக்கப்பட்டுள்ளது. இவர் தம்முடைய ஓவ்வொரு பாடலின் இறுதி வரியிலும் தான்பிறந்த ஊரை பெருமைபடுத்தும் வகையில் “கோளூரே””யென புகழ்ந்தூளார் இவ்வூரீல் நடைபெறும் ஆவணி மாத்த்தில் தே திருவிழா மிகவும் புகழ்பெற்றதாகும் இவ்வூரில் வுள்ள பெருமாள் கோவில் நவ திருப்பதிகளில் ஒன்றாகும். மேலும் 108 வைனவ த்திருத்தலங்களில் ஒன்றாகும்

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:Sudalaimuthu2555/மணல்தொட்டி&oldid=1968495" இலிருந்து மீள்விக்கப்பட்டது