பயனர்:Sujiparamu/மணல்தொட்டி
கிரீஸ் காசரவள்ளி முன்னுரை கிரீஸ் காசரவள்ளி , ஒரு கன்னட பட இயக்குனர் ஆவர். அவர் சிறந்த படத்திற்கான தேசிய விருதை நான்கு முறை வென்றுள்ளார். அவருக்கு 2011ஆம் ஆண்டு பத்மா ஸ்ரீ விருதை வழங்கி , இந்திய அரசு அவைக்கு பெருமை செய்தது. அவர் புனேவில் உள்ள படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரயில் இருந்து தங்க பதக்கம் வென்றவர். 1977 ஆம் ஆண்டு, காட்டஷ்ராத்தா என்னும் படத்தின் மூலம் தன இயக்குனர் வாழ்கையை தொடங்கினார். அடுத்த 30 வருடங்களில் அவர் 11 படங்களையும், ஒரு தொலைகாத்சி தொடரையும் இயக்கினார். ஆரம்ப வாழ்க்கை: கிரீஸ் காசரவள்ளி ,சிமோகா மாவட்டத்தில் உள்ள கேளசூர் என்னும் ஒரு சிறிய கிராமத்தில் ,கணேஷ் ராவ் மற்றும் லக்ஷ்மி தேவி என்னும் தம்பதியருக்கு, 3-12-1950 அன்று பிறந்தார்.அவர் குடும்பத்தில் உள்ள அனைவரும் புத்தகளை படிக்க மிகவும் ஆர்வம் காட்டியதால், அவருக்கும் புத்தகங்கள் படிப்பதில் மிகுந்த ஆர்வம் ஏற்பட்டது. அவருடைய தத்ரூப யோசனைகள் இங்கிருந்தே தொடங்கின. அவர் ஊரில் இருந்த டூரின் டாகீஸ்க்கு அவர் அடிக்கடி சென்றமையால் அவருக்கு படங்களின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. அவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்புகளை ஷிமோகாவில் முடித்து விட்டு மேற்படிப்பு படிக்க மணிபால் சென்றார். அங்கு அவர் B.Pharm படிப்பை முடித்து விட்டு அந்த துறையிலேயே ஒரு வேலையில் சேர்ந்தார். அவரால் இரு வேலைகளிலயும் முழுமையாக கவனம் செலுத்த முடியாததால், அவர் புனேவில் உள்ள படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரயில் சேர்ந்தார்.