பயனர்:Sumathy1959/மணல்தொட்டி
Editing பயனர்:Sumathy1959/மணல்தொட்டி
மணல்தொட்டிப் பக்கத்திற்கு வருக! இந்தப் பக்கத்தில் நீங்கள் தொகுத்தல் சோதனைகளை மேற்கொள்ளலாம். தொகுப்பதற்கு இங்கு சொடுக்கவும். அல்லது மேலே உள்ள தொகு எனும் தத்தலைச் சொடுக்கவும். உங்களுக்கு வேண்டியதைத் தட்டச்சிவிட்டு பக்கத்தைச் சேமிக்கவும் என்ற பொத்தானைச் சொடுக்கவும்.
தமிழில் தட்டச்சு செய்ய என்ற குறுக்குவிசையைப் பயன்படுத்தவும் அல்லது அதுகுறித்து இங்கு படிக்கவும். இதிலுள்ள உள்ளடக்கம் நிலையானதன்று! இப்பக்கம் தொடர்ந்து நீக்கப்பட்டுப் புதுப்பிக்கப்பட்டுக் கொண்டேயிருக்கப்படும். மேலும், நிறைய புதிய பயனர்கள் இதில் தொகுத்தல் சோதனைகளை மேற்கொள்வர். நீங்கள் ஏதுமற்ற புதிய மணல்தொட்டியில் பயிற்சி செய்ய விரும்பினால் இங்கு சொடுக்கவும். தயவுசெய்து பதிப்புரிமை கொண்ட, அருவருக்கத்தக்க, அவதூறு கொண்ட உள்ளடக்கங்களை மணல்தொட்டிகளில் இட வேண்டாம்! பயனர் இதனைத் தொகுக்கலாம். ஆயினும், இப்பக்கம் தொடர்ச்சியாக துப்புரவு செய்யப்படும் என்பதை நினைவிற்கொள்ளுங்கள். மணல் தொட்டியைச் சுத்தம் செய்ய இங்கே சொடுக்குக. நீங்கள் ஒரு விக்கிப்பீடியா பயனராகப் பதிவு செய்திருந்தால், உங்களுக்கென தனியே ஒரு மணல்தொட்டியை இங்கு சொடுக்கிப் பெறலாம். வருங்காலத் தேவைகளுக்காக வேண்டி {{என் மணல்தொட்டி}} என்பதை உங்கள் பயனர் பக்கத்தில் இட்டுக்கொள்ளலாம். மேலதிக தகவலுக்கு விக்கிப்பீடியாவிற்கு அறிமுகம், தொகுத்தல் பயிற்சி, தமிழ்த் தட்டச்சு |
பிரதம அமைச்சரின் விஸ்வகர்மா திட்டம், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி தலைமையிலான இந்திய அரசு பாரம்பரியத் தொழில் புரியும் தச்சர், கொல்லர், பொற்கொல்லர், குயவர், சிற்பி, கல் உடைப்பவர், காலணி செய்பவர், படகு தயாரிப்பவர், கொத்தனார், கூடை, பாய், துடைப்பம் மற்றும் கயிறு திரிப்பவர், கைநெசவுத் நெசவாளர், பாரம்பரியமாக பொம்மை தயாரிப்பாளர், முடிதிருத்துபவர், பூ மாலை தயாரிப்பாளர், வண்ணார், தையல்காரர் மற்றும் மீன்பிடி வலை தயாரிப்பாளர் போன்ற 18 வகையான கைவினைஞர்களை ஊக்குவிப்பதற்காக விஸ்வகர்மா' திட்டத்தை 17 செப்டம்பர் 2023 அன்று அறிவித்தது.[1]
திட்டத்தின் நோக்கம்
தொகு- திறன் மேம்பாடு : 5 முதல் 7 வரை நாட்கள் வரை அடிப்படைப் பயிற்சி வழங்குதல் மற்றும் 15 நாட்கள் மற்றும் அதற்கு மேற்பட்ட மேம்பட்ட பயிற்சிக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் 500 உதவித்தொகை வழங்குதல்.
- அங்கீகாரம் :பயிற்சி முடித்தவர்களுக்கு பிரதம அமைச்சரின் விஸ்வகர்மா சான்றிதழ் மற்றும் அடையாள அட்டை வழங்குவதன் மூலம் கைவினைஞர்களுக்கு அங்கீகாரம் வழங்குதல்.
- கருவித் தொகுப்பு ஊக்கத்தொகை : கருவித் தொகுப்புகள் வாங்குவதற்கு வாங்க ஊக்கத்தொகை ரூபாய் 15,000 வழங்குதல் .
- கடன் உதவி: அடிப்படைப் பயிற்சி முடித்தவர்களுக்கு தொழில் வளர்ச்சி கடனாக 5% வட்டியில், முதல் தவணையாக 1 இலடசம் (திருப்பி செலுத்தும் காலம் 18 மாதங்கள்) இரண்டாவது தவணையாக 2 இரண்டு இலட்சம் (திருப்பி செலுத்து காலம் 30 மாதங்கள்) வழங்கப்படும். வழங்கப்படும் கடன்களுக்கு வெந்நிலை கடன் ஒப்பந்த பத்திரம் மட்டுமே போதுமானது. ஜாமீன்தாரர் கையொப்பம் மற்றும் பழைய கடன் விவரம் தேவையில்லை.
- சந்தைப்படுத்துவதற்கு ஆதவளித்தல்: கைவினைஞர்களுக்கு தரச் சான்றிதழ் வழங்குதல், மின்னணு-வணிக தளங்களில் விளம்பரம் மற்றும் பிற சந்தைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கப்படும்.
இத்திட்டதிற்கு தகுதியானவர்கள்
தொகு- விண்ணப்பதாரர் மேற்குறித்த 18 வகையான குடும்பத்தைச் சேர்ந்தவராகவும், சொந்தமாக தொழில் செய்யும் கலைஞராகவோ அல்லது கைவினைஞராக இருத்தல் வேண்டும்.
- 18 வயது நிரம்பியராக இருத்தல் வேண்டும்.
- கடந்த 5 ஆண்டுகளில் தொழில் கலைஞர்கள் அல்லது கைவினைஞர்கள் அடிப்படையில் மாநில அல்லது மத்திய அரசுத் திட்டங்களில் கடன் பெற்றிருத்தல் கூடாது. இருப்பினும் வாங்கிய கடனை அடைத்தவர்கள் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம்.
- மாநில/மத்திய அரசில் பணிபுரியும் ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்ப உறுப்பினர்கள் இத்திட்டத்தில் சேர இயலாது.
- இத்திட்டத்தில் ஒரு குடும்பத்தில் ஒருவர்மட்டுமே சேரமுடியும்.
இத்திட்டத்தில் சேர்க்கப்படும் தொழிற்கலைஞர்கள் & கைவினைஞர்கள்
தொகு- தச்சர்
- படகு செய்பவர்
- இரும்பு/ கல் தொடர்பாக கலைஞர்கள்
- கவசங்கள் செய்பவர்.
• கொல்லர் Blacksmith
- சுத்தி மற்றும் கருவிகள் செய்பவர்
- பூட்டு செய்பவர்
- சிற்பி, கற்சிலை வடிப்பவர்
- கல் உடைப்பவர்
- தங்கம்/வெள்ளி சார்ந்த நகை பொற்கொல்லர்
- களிமண் சார்ந்து பானை/பொம்மை செய்பவர்
- விலங்குத் தோல் சார்ந்த காலணி கலைஞர்
- கட்டிடக் கொத்தனார்
- கூடை, பாய், துடைப்பம்/ கயிறு செய்யும் கைவினைஞர்கள்
- பாரம்பரிய பொம்மை செய்யும் கைவினைஞர்கள்
- நாவிதர் Barber (Naai)
- பூமாலை தொடுப்பவர்கள்
- சலவைத் தொழிலாளர்கள்
- தையல் கலைஞர்கள்
• மீன்பிடி வலை கைவினைஞர்கள்