பயனர்:Swami Prapanjanathan/மணல்தொட்டி

கொரோனா

COVID - 19

(சுவாமி பிரபஞ்சநாதன்)

படைக்கப்பட்ட உயிரினங்களிலேயே மனிதன் மட்டுமே மகத்தானவன் என்று பற்பல ஞானிகள் இந்த புவிக்கு வந்து, அவனது புனிதத்தன்மையை எடுத்துக் கூறியும், ஓரறறிவு ஜீவர்களை விட ஆறறிவு படைத்த மனிதனே அற்புதமானவன் என்று எத்தனையோ முறை எடுத்துக் கூறியும். அதன் மகத்துவத்தை ஏற்றுக் கொள்ள முடியாத, ஏமாளிகளாக நாம் இருப்பதை என்று அறிவோமோ, அன்றே நம் அனைவருக்கும் ஆறாவது அறிவின் அற்புதம் அறியப்பட்டுள்ளது என்று பொருள்.

மனிதன் தன் மனதினால் ஆட்டுவிக்கப்படுகின்ற அற்ப பொருள்களான பணம், பதவி, பட்டம், பரம்பரை, பந்தம் என பயனற்றவைகளின் மீது வைத்த பற்று, அந்த பரம்பொருளை பற்றுவதற்குத் தடையாக மாறி விட்டது.

‘இருப்பதெல்லாம் இறைவனே’ என்றும், அந்த ஏகன் ஒருவனே, இங்கு அனேகனாக இந்த மனதினால் ஏற்றி வைக்கப்பட்டுள்ளான் என்றும், எத்தனையோ மகான்கள் இந்த மனிதனுக்காக மனித உருவம் எடுத்து வந்து உபதேசம் செய்தும், இந்த எளிய உபதேசத்தைக் கூட ஏற்க முடியாத அளவிற்கு, அற்ப மனதின் ஆசைகளினால் மனிதன் மாட்டிக் கொண்டுள்ளான்.

இந்த மனதின் மயக்கத்தின் விளைவாக இவனது உயிரை மட்டும் உயர்வாகக் கருதி, இவனைச் சார்ந்த மற்ற உயிர்களை மிகவும் மட்டமாக மதித்ததினால், இன்று மனிதனுக்கு மரணத்தை உண்டாக்குகின்ற, மந்த மதி படைத்த உயிரினத்தைக் கண்டு மறுளுகின்றான்.

இவனுக்கு கொடுக்கப்பட்ட ஆறாவது அறிவு, எதற்காகக் கொடுக்கப்பட்டதோ, அதன் மகத்துவம் அறியாமல், அதைக் கொண்டு, எதை அறிந்துக் கொண்டால், வேறு எதையும் அறியத் தேவை இலையோ, அதை அறியாமல், மற்ற அனைத்தையும் அறிந்துக் கொண்டதின் விளைவாக, இன்று ஓரறிவு உயிரினம் ஒன்றிடம், அதன் பல்வேறு பெருக்கத்தின் காரணமாக, ஆறறிவு உயிரினமான அனேக மனிதர்கள் சிக்கிக் கொண்டு சீரழிகின்றார்கள்.

மனிதனால் பெயர் கொடுத்துக் கொள்ளப்பட்ட கொரோனா, கரோனா போன்ற நாம, ரூபங்கள் எல்லாமே, அவனது மனதில் மற்றவர்களால் ஏற்றி வைக்கப்பட்டவை என்று எப்பொழுது அறிகின்றானோ, அப்பொழுதே, அவன் ஆறாவது அறிவினால், தன் மனதைத் தானே  விசாரிக்கத் தொடங்குகின்றான்.

விசாரணையின் விரிவான விபரங்களாக, இவன் மனம் இவனுக்கு அணிவித்து வைத்துள்ள பச்சைக் கண்ணாடியை கொண்டு, இந்த உலகம் இவனுக்கு மட்டும் பச்சை நிறத்தில் காணப்படுவதைப் போன்று, அவரவர்கள் மனதினால், அவரவர்களுக்கு அணிவிக்கப்பட்ட கண்ணாடியின் நிறத்திற்கு ஏற்ப இந்த உலகம், அவரவர்களுக்கு அந்த, அந்த நிறத்தில் காணப்படுவதை கண்டு அறியாமையில் இருக்கின்றான்.

உண்மையில், இந்த உலகம் ஓரறிவு உயிரினமான கொரோனா முதற்கொண்டு, ஆறறிவு உயிரினமான மனிதன் வரை, பல்வேறு நிறங்களால் நிறைக்கப்பட்டிருந்தாலும், இவனுக்கு மட்டுமே இவன் போட்டுக் கொண்டுள்ள கண்ணாடியின் நிறத்தில் இந்த உலகம் காட்சி ஆவது போன்று காணப்படுகின்றது.

அதாவது, இவன் மனதில், இவன் ஏற்றி வைத்துக் கொண்டுள்ள ஏகப்பட்ட எண்ணங்களுக்கு ஏற்றாற் போல, இந்த உலகம் இவனுக்கு மட்டும் இவ்வாறு காணப்படுகின்றது.

அதாவது, அவரவர்கள் மனதிற்கு தகுந்தாற் போல, இந்த உலகம் அவரவர்களுக்கு காட்சியாகின்றது என்ற உண்மையை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

படைக்கப்பட்ட உயிரினங்கள் இயற்கையின் நியதியின்படி, ஒன்றைச் சார்ந்து ஒன்று வாழ வேண்டுமே ஒழிய, ஒன்றை அழித்து ஒன்று வாழ முயற்சிப்பது என்பது, இவைகளுக்குள் உள்ள அறியாமையினால் இது நிகழ்கின்றது என்பதை, எந்த அறிவு உள்ள உயிரினம் அறிய முடியுமோ, அதுவே அறிவால் உயர்ந்த உயிரினம் எனப்படும்.

அப்படிப்பட்ட உயிரினமே தன்னிடம் உள்ள அறியாமையை அறிந்து, அதற்கான ஒரு தீர்வினை எளிதாக உண்டாக்க முடியும்.

அந்த வகையில், மனிதன் மட்டுமே ஆறு அறிவு படைத்தவன் என்பதினால், அவன் நினைத்தால் மட்டுமே, இந்த உயிரினங்களின் அழிவை தடுத்து, அவைகளுக்குள் ஒரு ஒற்றுமையை எளிதில் உண்டாக்க முடியும். அந்த ஒற்றுமையினால் அவன் ஆனந்தப்பட முடியும்.

அந்த ஆனந்தமும் நிலையாக நிலைத்து நிற்பதற்கு மனிதன் மட்டுமே, தனக்கு கொடுக்கப்பட்ட ஆறாவது அறிவைக் கொண்டு, நான் யார்? என்று தனக்குள் விசாரித்து விடை அறிய முடியும்.

இது, மற்ற அறிவு குறைவான உயிரினங்களுக்கு உண்மையில் சாத்தியமில்லை.

இவ்வாறு, நான் யார்? என்று தன்னைத் தானே இவன் விசாரிக்க முற்படும் பொழுது, இவனது மனதில் இதுவரை இவன் ஏற்றி வைத்துக் கொண்டுள்ள, ஏகப்பட்ட விசயங்கள் இவனிடமிருந்து வெளிப் படுவதை இவன் எளிதாக அறிய முடியும்.

இவ்வாறு, இவன் ஏற்றி வைத்துக் கொண்டுள்ள விசயங்கள், இவனுக்கு எந்த அளவிற்கு நன்மை பயக்கும்படி உள்ளன?, அதில் எத்தனை சுய நலமான விசயங்கள், எத்தனை உதவாக்கரை விசயங்கள் என்பதை இவன் அறிந்து, இவனுக்கு இவனே வெட்கப்பட வைத்து, அவைகளில் எதில், எதில் இவன் ஆழமாக சிக்கிக் கொண்டுள்ளான் என்பதை இவனுக்கு சுட்டிக் காண்பிக்கும்.

உயர்வான மனிதப் பிறவி கிடைத்தும், அதன் அத்தியாவசியம் புரியாமல், கொடுக்கப்பட்ட உயர் அறிவை சரியாகப் பயன் படுத்தத் தெரியாமல், மனிதன் தன் சுயநலத்தின் காரணமாக, பல்வேறு உயிரினங்களுக்கு பலதரப்பட்ட துன்பத்தை உண்டாக்கிக் கொண்டிருப்பதை அறிந்து, அதிலிருந்து விடுபடுவதற்கான ஒரு வாய்ப்பாக, இந்த மனதின் தீவிரமான விசாரணை தீர்வாக அமையும்.

கொரோனாவை ஒழிப்பதைக் காட்டிலும், அதனை அரவணைப்பது என்பது மட்டுமே, மனிதன் மற்ற உயிரனங்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய உபகாரமாகும்.

எப்படி?

கொல்லப்பட்ட மனித உயிர்களுக்குக் காரணம் கொரோனா என்றால், இந்த கொரோனாவினால் கொல்லப்படாத மற்ற மிருகம், பறவை போன்ற உயிர்களுக்குக் காரணம் கரோனாவா என்றால், அப்படி இல்லை.

இங்கு கவனிக்கப்பட வேண்டிய விசயம் என்னவெனில், உயிர்கள் அனைத்தும் இயற்கையின் நியதிப்படி, ஒன்றை ஒன்று உணவாக உட்கொண்டு வாழ்கின்ற வாழ்வாதாரமான உணவுச் சக்கரத்தை, மனிதன் தன் சுய நலத்தினால் உடைக்க முற்பட்டதின் முட்டாள்தனத்தை உணர்த்த வந்த, இயற்கையின் உன்னதப் பாடமாகும், இந்த கொரோனாவின் வருகை எனலாம்.

அதாவது, இந்த கொரோனா மற்ற ஜீவராசிகளின் உயிர்களை விடுத்து, மனித உயிர்களை மட்டும் மரணத்திற்கு அழைத்துச் செல்வதின் மாபெரும் இரகசியம் என்ன?

இதைச் சற்று ஆழ்ந்து யோசித்தால், அனைவருக்கும் விபரம் புரியும்.

அதாவது, மற்ற உயிர்களுக்கு அதிகம் தீங்கிழைப்பவன் மனிதன் மட்டுமே. இவன் தனக்கு கொடுக்கப்பட்ட ஆறாவது அறிவின் அவசியத்தை அறியாமல், ‘அறிவு’ என்று இவனாக திணித்துக் கொண்ட அஹங்காரத்தின் காரணமாக, அனைத்தையும் அனுபவிக்க விரும்பி, அதற்காக இவன் இயற்கைக்கு எதிராக பல்வேறு கேடுகளை ஏற்படுத்தி விட்டான்.

இயற்கையுடன் இயைந்து வாழாமல், இவனது இயல்பையும் இவன் அறியாமல், ஏற்றி வைக்கப்பட்ட ஏகப்பட்ட விசய சுகங்களில், சுகம் இருப்பதாகக் கருதி, தனக்குத்தானே சூன்யம் வைத்துக் கொண்டான்.

அதில், மிகவும் அவசியமாகக் கருதப்படுகின்ற, அனைத்து உயிரினங்களுக்கும் அத்தியாவசிய உணவு உற்பத்தியான விவசாயத்தில், வேண்டாதப் பல வெறிச் செயல்களாக, வெளி நாட்டு வணிக நிறுவனங்களின் வியாபார தந்திரத்தை அறியாமல், இராசயண உரங்களையும், பூச்சி கொல்லி மருந்துகளையும் அதிகம் உபயோகித்து, அளவற்ற உயிர்களுக்கு வேண்டிய உபயோகமான உணவுகளை, இவனை அறியாமலேயே இவன் அழிக்கின்றான்.

அதாவது, இவனுக்கு மட்டுமே உணவு உற்பத்தி செய்யப்பட வேண்டும் என்ற சுய நலத்தின் காரணமாக, மற்ற உயிகளுக்கு கிடைக்க வேண்டிய புழு, பூச்சி போன்ற உணவுகளை, மற்ற உயிரினங்கள் உண்ண முடியாமல் களைக் கொல்லி மருந்துகளை அடித்து அவைகளைத் தடுக்கின்றான்.

அதன் தலையாய பிரச்சனையாக கடந்த சில வருடங்களாகத் தென்னையைத் தாக்கி வருகின்ற வெள்ளைப் பூச்சிகளை சமாளிக்க முடியாமல், தென்னை விவசாயத்தில் மிகப்பெரிய சரிவை தற்பொழுது சந்தித்து வருகின்றான்.

இவன் மட்டுமே சுகமாக வாழ வேண்டும் என்ற சுய நல எண்ணத்தினால், சுகாதாரக் கேடுகளை உண்டாக்கி, சுற்றுபுறச் சூழலுக்கு கேடு விளை விக்கின்றான்.

இவைகளைப் பட்டியல் போட்டுக் காட்டிக் கொண்டிருந்தால், இங்கு கூற வருகின்ற சுவாரஸ்யமான விசயம் என்ன என்பது, புரியாமல் போய்விடும் என்பதினால், நீங்களாகவே அவைகளை சற்று, நிதானமாக யோசித்து, பட்டியலில் இருந்து அகற்ற வேண்டிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள்.

அதாவது, இயற்கையைச் சார்ந்த ஏகப்பட்ட உயிரினங்களின் வாழ்வாதாரத்தை, இவனது சுய நலத்திற்காக இவன் மட்டுமே அழிக்கின்றான்.

உதாரணமாக, மண்ணில் வாழ்கின்ற மற்ற உயிர்களை வாழ விடாமல், களைக் கொல்லி போன்ற இராசயண மருந்துகளை தெளித்தும், மேலும் பல இரசாயண உரங்களை மண்ணில் புதைத்தும், அந்த மண்ணிற்குள் இருந்து, விவசாயத்திற்கு நன்மை பயக்கின்ற பல்வேறு பூச்சி, புழுக்களை அவசியம் இல்லை எனக் கருதி, இராசயண மருந்துகளினால் முழுமையாக அழிக்க முற்படுகின்றான்.

அந்த பூச்சி, புழுக்களை உணவாக உட்கொண்டு, உயிர் வாழ்கின்ற, மற்ற பறவை இனங்களை தன் கவனத்தில் கொள்ளாமல், இவனது சுய நலத்திற்காக அவைகளுக்கு கேடு விளைவிக்கின்றான்.

அதுமட்டுமின்றி, அனேக பறவை இனங்கள், மிருகங்கள் என மனிதனுக்கு நன்மை பயக்கும் உயிரினங்களை இவனது உணவுக்காக மட்டுமே அழிக்கின்றான்.

அதில், இன்று மரபணு மாற்றம் செய்து, புரட்சி உண்டாக்குகின்றேன் எனக் கூறிக்கொண்டு, ஒரு உயிரினத்தை மற்ற ஒரு உயிரினத்துடன் இணைத்து, அவைகளின் இயல்புக்கு மாறாகவும், இயற்கைக்கு விரோதமாகவும், இவன் செய்கின்ற செயல்களினால், அனேக உயிரினங்களின் இயல்பு வாழ்க்கைக்கு இடையூறு செய்கின்றான்.

இதில், இவனது சுய நல எண்ணத்தினால், இவனுக்கு மட்டுமே தேவையான உணவு, உறைவிடம், போன்றவைகளில் அதிக அக்கரை எடுத்துக் கொண்டு, மற்ற உயிரினங்களின் உணவு, உறைவிடத்தை அவைகளிடமிருந்து அபகரித்துக் கொள்கின்றான்.

இதனால், ஓரறிவு உயிரினத்தில் தொடங்கி, ஐந்தறிவு பறவைகள், மிருகங்கள் போன்ற பல்வேறு உயிரினங்கள், தங்களின் வாழ்வாதாரத்திற்கு வேண்டிய உணவு, உறைவிடத்தை இழந்து நிற்பதைப் பற்றி, சிறிதும் சிந்திக்காமல், இவனது சிறப்பான வாழ்வுக்கு மட்டுமே, இதுப்போன்ற செயல்களைச் செய்துக் கொண்டிருக்கின்றான்.

இதனால், இவன் இதுவரை ஒழுங்காகச் சுற்றிக் கொண்டிருந்த உயிரினங்களின் உணவுச் சக்கரத்தை, இயற்கைக்கு விரோதமாக, அவை சுற்றுகின்ற சுழற்சியில், மாற்றத்தை ஏற்படுத்த நினைத்து, உணவு உற்பத்தியில், உயிர்களுக்கு எதிராக செயல்படுகின்றான்.

நம்முடைய முன்னோர்கள் செய்து வந்த விவசாயத்தில் மாடுகள் மிக முக்கிய பங்கு வகித்தன. அன்றைய கால கட்டங்களில் இதுப்போன்ற பூச்சிகளின் தொந்தரவு இருக்கத்தான் செய்தது. இருப்பினும், அவர்கள் மாடுகளின் சாணத்தையும், சிறு நீரையும் மட்டுமே பூச்சி கொல்லிகளாக பயன் படுத்தினர். அதனால், அதில் சாகக் கூடிய பூச்சிகள் மட்டுமே செத்து மடிந்தன. மற்றபடி விவசாயத்திற்கு நன்மை பயக்கும் பூச்சி, புழுக்கள் இறக்காமல் காப்பாற்றப் பட்டன. அன்று உணவுச் சக்கரம் முறையாக இருந்தது.

இந்த அரிய உண்மையை அன்றைய நம் முன்னோர்கள் அறிந்திருந்தனர். ஆனால், இன்றைய படித்த நம் இளைஞர்கள் இதை அறிந்து கொள்ள தயாராக இல்லை.

அதி நவீன இயந்திரங்கள் விவசாயத்திற்கு வந்தது வரப்பிரசாதமாக இருப்பினும், மாடுகள் அழிக்கப்பட்டது, அதைவிட மிகவும் துரதிர்ஷ்டமானது.

இதில் நிலம், நீர், காற்று என இயற்கையின் பஞ்ச பூதங்களில், முக்கியமாக இந்த மூன்று பூதங்களில் மனிதன் மாற்றத்தை உண்டாக்கி, மற்ற இரண்டு பூதங்களான நெருப்பு, மற்றும் ஆகாயத்தின் சம நிலைகளில் சங்கடத்தை உண்டாக்கினான். அதன் விளைவாக, பஞ்ச பூதங்களினால் படைக்கப்பட்டு, வாழ்ந்து கொண்டிருக்கின்ற பல்வேறு உயிரினங்களின் உன்னதமான உயிருக்கு உலை வைத்து விட்டான் இன்றைய மனிதன்.

இதன் காரணமாக இவனை அச்சுறுத்த வந்துள்ள இந்த கொரோனா நோய்க்கிருமி தொற்று, உயிர்களிடம் உள்ள உண்மைத் தன்மையை இவனுக்கு உணர்த்துகின்றது.

இவனது உயிர் மட்டும் உயர்ந்தது, மற்ற உயிர்கள் தாழ்ந்தது என்ற இவனது மன நிலைக்கு மாற்றத்தை கற்பிக்க வந்துள்ளது.

மனிதன் மகத்தானவன் என்பதை மறந்து, மிகவும் மட்டமானவன் என்று இந்த இயற்கைக்கு எடுத்துக் காட்டுகின்றான்.

இவனது, இதுப்போன்ற தவறுகளை இவன் அறியாமல், இயற்கையை அழித்து, இன்பமுடன் வாழலாம் என்று கருதிக் கொண்டிருந்ததின் கனவு தற்பொழுது, கலைக்கப்பட்டுள்ளது.

பணம் மட்டுமே பிரதானமென்று, பல தவறான வழிகளில் வாழ்க்கையை வாழ நினைத்தவனுக்கு, வாழ்வியல் ஆதாரமான உயிரை விட வேண்டிய கட்டாயத்தை இன்று இயற்கை நமக்குப் பல வழிகளில் பயிற்றுவித்துக் கொண்டிருக்கின்றது.

இனியும் இவன் விழிப்படையாமல், வீணானக் காரியங்களை, இதுப் போன்று செய்துக் கொண்டு வந்தான் என்றால், எதனாலும் இவனைக் காப்பாற்ற முடியாது. இவனால், இதிலிருந்து எழுந்திருக்கவே முடியாத இயலாமை நிலைக்கு தள்ளப்படுவான் என்பதை உணர்ந்து எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.

இனி, இந்த கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து மனிதன் தப்பிக்க வேண்டும் எனில், மற்ற உயிரினங்களுக்கு ஊறு விளைவிக்கின்ற காரியங்களை உடனடியாக நிறுத்திக் கொண்டு, உயிர் வதை செய்பவர்களை, நாம் ஒவ்வொருவரும் தடுத்து, அனைத்து உயிர்களையும், தன் உயிர் போன்று காக்க வேண்டிய, காரியங்களை கட்டாயம் நடைமுறைப் படுத்த வேண்டும்.

இதற்காகச் செய்யப்பட வேண்டிய எளிமையான வழிமுறை என்னவெனில், உயர்வான பசு மாட்டின் சாணத்தைக் கொண்டு வந்து, பலரும் வாழுகின்ற பகுதிகளில் நீரினால் கரைத்து தெளித்து, வீட்டிற்கு முன்பாக பசுஞ்சாணத்தில் பல சாணி உருண்டைகளைப் பிடித்து வைத்து, அதில் அருகம் புல்லை ஆழமாகச் செருகி, ‘இருப்பதெல்லாம் இறைவனே’ என்ற உயர் ஞானத்திற்கு மனிதன் உயர வேண்டும்.

இது என்ன முட்டாள்தனமான உபதேசமாக இருக்கின்றதே எனக் கருதாமல், இறுமாப்பில் இருந்துவிட்டு, இயற்கையின் அழிவை ஏற்றுக்கொள்ள விரும்பினால், இனி மனித இனத்தை, மனிதனாலேயே கூட காப்பாற்ற முடியாத சூழல் உண்டாகிவிடும் என்பதை அறியவும்.

இதை ஏளனமாக ஒதுக்கி விடாமல், உன்னதமான நம் முன்னோர்கள் ஒருங்கே கடைப் பிடித்து வாழ்ந்த, உயர்வான வாழ்வியல் முறை என்பதையும் ஒவ்வொருவரும் அவசியம் ஏற்க வேண்டும்.

கல்யாண வீடுகளிலும், கடவுள்களுக்காக கொண்டாடப்படுகின்ற பண்டிகை காலங்களிலும், மக்கள் அதிகமாக கூடும் எல்லா விஷேசங்களிலும், மஞ்சள் நீர் தெளித்து விளையாடுவதையும், மஞ்சளினாலும், சாணத்தினாலும் பிள்ளையார் பிடித்து வழிபடுவதையும், சாணத்தினால் வீட்டை மெழுகி, வாசலில் மாக்கோலம் போட்டு, மற்ற எறும்பு, பறவை போன்ற உயிர்களுக்கு உணவு அளித்து, வழிபட்டு வந்த மூடர்கள் அல்ல நம் முன்னோர்கள்.

இந்த வாழ்வியல் முறையினால் எப்படிப்பட்ட நோய் தொற்றுக்களும் நம்மை தொற்றாது அழியும் என்பதையும், இதற்காக வளர்க்கப்பட்ட மாடுகள் அழிந்து வருவதையும் அறிந்து, அவைகளை காப்பாற்ற வேண்டிய கடமைகள் மனிதர்களாகிய நமக்கு மட்டுமே இருக்கின்றது என்பதையும் புரிந்துக் கொண்டு, அத்துடன் அந்த மிருகங்களுக்குத் தேவையான உணவு உற்பத்தியும் செய்யப்பட வேண்டும் என்ற சமூக அக்கரை, நம் தற்போதைய சமுதாயத்திற்கு அவசியம் வர வேண்டும்.

மற்ற உயிரினங்களை மனிதன் மதிக்கத் தொடங்கிய உடனேயே, இயற்கையானது இவனையும் சேர்த்து, இயல்பாக காப்பாற்றிவிடும் என்ற எளிய உண்மையை உணர்ந்துக் கொண்டு, இனி வருகின்ற சமுதாயத்திற்கும், நம் எதிர்கால சந்ததிகளுக்கும், சரிவை உண்டாக்கக்கூடிய காரியங்களை விடுத்து, ஒவ்வொருவரும் சமூக அக்கரையை கையில் எடுக்க வேண்டும்.

இதில் ஒரே ஒரு விவசாயத் துறையில் மட்டுமே, நடக்கின்ற அனேக முறைக் கேடுகளை, முழுவதுமாக சுட்டிக் காட்ட முடியாத அளவிற்கு மறைக்கப்பட்டதின் நோக்கம், இந்த புத்தகம் மற்றவர்களை குறை கூறுவதற்காக எழுதப்பட்டதாக மாறிவிடும் எனக் கருதி விடப்பட்டுள்ளது.

இதுப்போன்று, மற்ற பல உற்பத்தி துறைகளில் உண்டாக்கப்படுகின்ற, முறையற்ற முறை கேடுகளை கண்டறிந்து, அவைகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டியது நம் அனைவரின் தலையாய கடமையாகும்.

மனிதன் பணத்திற்காக வாழாமல், பாரதப் பண்பாடுகளை பயின்று, பழக்கவழக்கங்களை மாற்றிக் கொண்டு, பண்பட்ட மனிதனாக வாழ முற்பட வேண்டும்.

வெளி நாட்டு மோகத்தால், கலாச்சார சீர்கேட்டினைக் கண்டும் காணாமல், அவைகளை அங்கீகரித்து வாழ்ந்து வந்ததின், தற்போதைய இந்தப் பாடம் மிகப்பெரிய படிப்பினையை நமக்குக் கற்றுக் கொடுத்து இருப்பதையும், நாம் உடனடியாக உணர வேண்டும்.

ஆகவே, நம் முன்னோர்கள் நமக்கு அளித்துச் சென்றுள்ள அற்புதமான, அரிய பொக்கிசங்களை மீண்டும் நம் நடைமுறை வாழ்க்கையில் கொண்டு வந்து, அவைகளுடன் இயைந்து, இன்பமுடன் வாழ முற்பட  வேண்டும்.

எதையுமே, ஏளனமாகப் பார்க்கின்ற பாடத் திட்டங்கள், மிகவும் பலவந்தமாக நம்மிடையே புகுத்தப்பட்டுள்ளதால், நம் மனம் இதுப் போன்ற எளிய முறை வாழ்வியல் விசயங்களை அவ்வளவு எளிதாக ஏற்காது.

இதை ஏற்று நடைமுறைப் படுத்துவதால், நாம் ஒன்றும் இளைத்து விட மாட்டோம். அதைவிட மோசமான உடல் இறப்பை வென்றவர்களாவோம்.

எனவே, எளிமையான மக்கள் சமூகமே, மகத்தான மக்கள் சமூகத்திற்கு முன் மாதிரியானது, என்பதை எல்லா ஞானிகளுமே தங்கள் நடைமுறையில் வாழ்ந்து காட்டியுள்ளதால், நாமும் அவர்கள் வழி நடந்து, வையகத்தில் வாழ்வாங்கு வாழ்வோம் என்பதை, உறுதியுடன் ஏற்று, நாம் அனைவரும் ஒன்று பட்ட மனதுடன் உயிர்களை காக்க உறுதி ஏற்போம்.

எல்லா உயிர்களும் இன்புற்றிருப்பதுவேயன்றி, வேறொன்றும் அறியேன் பராபரமே!


***********************************