பயனர்:TNSC SIVAKUMAR VLR/மணல்தொட்டி
அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் என்றென்றைக்கும் இளையராஜா இளையராஜாதான்..! இளையராஜாவை திரைக்கு அறிமுகம் செய்த பஞ்சு அருணாசலம் அவர்கள்தான் எனக்கு இளையராஜாவை அறிமுகம் செய்தார்கள். அன்னக்கிளி தொடங்கி நான் அவரைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். யாருக்கும் கிடைக்காதப் பெருமை எனக்கு உண்டு. நான் எழுபது படங்கள் இயக்கியிருக்கிறேன். அதில் நாற்பத்தைந்து படங்களுக்கு இசை இளையராஜா. அந்தப் பெருமையை எனக்குத் தந்ததற்காக அவருக்கு என் நன்றி. இங்கு எல்லோரும் அவருடன் பணியாற்றிய விஷயங்களைச் சொன்னார்கள். நான் பிஸியாக இருந்த காலத்தில் படத்தை எடுத்து ரீ ரெக்கார்டிங்கிற்காக ராஜா சாரிடம் கொடுத்துவிட்டு ஷூட்டிங் சென்று விடுவேன். திரும்பி வந்து பார்த்தால், ‘என்னுடைய படம்தானா இது?’ என்று எனக்கே ஆச்சரியமாக இருக்கும். அவருடைய வெற்றிக்குக் காரணம் அவரின் காலம் தவறாமையும் உழைப்பும். ஏழு மணிக்கு ரெக்கார்டிங் என்றால் ஆறரை மணிக்கு ஸ்டுடியோவில் உட்கார்ந்து நோட்ஸ் எழுதிக்கொண்டிருப்பார். இசைஞானி இளையராஜா தமிழகத்திற்குக் கிடைத்த சொத்து..! இந்தியாவிற்குக் கிடைத்த சொத்து..! உலகத்திற்கே கிடைத்த சொத்து..! - இயக்குனர் திரு எஸ்.பி.முத்துராமன்