பயனர்:TNSECUDAGRIKANNU/மணல்தொட்டி

ஒபன்சியா மேக்ரோரைசா


ஒபன்சியா மேக்ரோரைசா என்பது பொதுவாக மற்றும் பரவலாக காணப்படும் சப்பாத்தி கள்ளியின் ஒரு சிற்றினம் என தாவரக்கூற்றுக்களிலிருந்து அறியப்படுகிறது. இது சமவெளி சப்பாத்திக்கள்ளி அல்லது திருகுக்கள்ளி அல்லது மேற்கத்திய சப்பாத்திக்கள்ளி என்றும் தாவர வல்லுனர்களால் அழைக்கப்படுகிறது. ஐக்கிய மாநிலங்களில் டெக்சாஸ் முதல் மின்னோசோட்டா வரை உள்ள பெரிய சமவெளி மற்றும் பாலைவனப்பகுதிகளில் பொதுவாக காணப்படுகிறது. மலைப்பாறைகள் நிறைந்த மாநிலமான அரிசோனா முதல் இடாஹோ வரையிலும், மிசிசிப்பி மற்றும் ஒஹாயோ பள்ளத்தாக்குகளிலும் ஆங்காங்கே காணப்படுகிறது. இது வடமெக்சிகோ பகுதிகளிலும் காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இது மற்ற பகுதிகளில் அலங்காரத்தாவரமாக வளர்க்கப்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

உலர்ந்த மணற்பாங்கான மற்றும் சரளை நிலங்களில் இத்தாவரமானது நன்கு வளரும் தன்மையுடையது.சப்பாத்திக்கள்ளி பேரினத்தில் இச்சிற்றினமானது மிகவும் குட்டையான படரும் தண்மை உடையது. பூக்கள் பகட்டான மஞ்சள் நிறத்தில் இருக்கும். சில சமயங்களில் பூவிதழ்களின் பின்புறத்தில் செந்நிறக்கோடுகள் காணப்படுவதாக தாவரவல்லுநர்கள் கூறுகிறர்கள். செந்நிற கூம்பிய வடிவில் சதைப்பற்றுடன் இருக்கும் இதன் பழங்கள் உண்ணத்தகுந்தவை.

தொகுப்புகள் : 1.^ The Plant List, Opuntia macrorhiza Engelm. 2.^ United States Department of Agriculture Plants Profile 3.^ Encyclopedia of Life 4.^ Biota of North America Program, 2014 county distribution map 5.^ SEINet, Southwestern Biodiversity, Arizona chapter photos, description, distribution map 6.^ Flora of North America, Opuntia macrorhiza Engelmann, 1850. Western pricklypear

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSECUDAGRIKANNU/மணல்தொட்டி&oldid=2314226" இலிருந்து மீள்விக்கப்பட்டது