பயனர்:TNSEKATTAPPANKL/மணல்தொட்டி
லினோலியம்
தொகுலினோலியம் (Linoleum): கயிறு, நூல், உரோமம் முதலியவற்றால் நெய்யப்பட்ட அழகான கம்பளங்களை வீட்டுத் தரைகளில் விரிக்கிறோம். இன்று லினோலியம் என்னும் ஒருவகை மெருகிட்ட மெழுகுத் துணியும் இதற்குப் பயன்படுகிறது. 1860 ஆம் ஆண்டில் பிரடரிக் வால்ட்டன் இதைக் கண்டுபிடித்தார். லினோலியத்தை எப்படித் தயாரிக்கிறார்கள் தெரியுமா? ஆளிவிதை எண்ணெய் நன்கு கொதிக்கவைத்துப் பல ரசாயன மாறுதல்களுக்கு உட்படுத்துவார்கள்.இது உருகிய ரப்பர்போலக் குழம்பாகிப் பின்னர் கெட்டியாகும். இவ்வாறு கெட்டியாகும் பொருளை ஒரு பாத்திரத்திலிட்டு மரப்பிசினும், கோந்தும் சேர்த்துச் சூடுபடுத்தினால் அது பசைபோலாகிறது. பசைபோன்ற இந்தப் பொருளை ஒரு கலக்கும் எந்திரத்திலிட்டுத் தக்கைத் தூள், மரத்தூள், நிறமூட்டும் பொருள் முதலியவற்றைச் சேர்ப்பார்கள். இக்கலவை பின்னர் கெட்டியாகும். இதைத் தூளாக்கி, சணலால் நெய்யப்பட்ட பாய்த்துணியின் மீது ஒரே சீராகத் தூவுவார்கள். இத்துணியைச் சூடேற்றிய இரு உருளைகளுக்கிடையே செலுத்தும்போது "லினோலியம் கலவை' இத்துணியில் அழுத்தமாகப் படிந்து மெருகு பெறுகின்றது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட லினோலியத்தை வெப்பக் காற்றுள்ள அறைகளில் உலரவைத்து மேலும் பக்குவப்படுத்துவார்கள். இதனால் லினோலியம் இறுகி உறுதிபெறுகின்றது. லினோலியம் சுமார் இரண்டு மீட்டர் அகலமுள்ள நீண்ட விரிப்புகளாக விற்கப்படுகிறது. சதுர வடிவில் சிறிய துண்டுகளாகவும் கிடைக்கிறது. இவற்றைப் பசையிட்டுத் தரையுடன் ஒட்டிக்கொள்ளும்படி செய்கிறார்கள். லினோலியத் தரையைச் சுத்தம் செய்வது எளிது.