பயனர்:TNSE A.SARALA DIET SVG/மணல்தொட்டி

பிளாஸ்மோடியம் மலேரியா

தொகு

அறிமுகம்

தொகு

பிளாஸ்மோடியம் ஒரு புரோட்டோசோவா ஒட்டுண்ணியாகும். இது மனிதனில் மலேரியா காய்ச்சலை ஏற்படுத்துகிறது. இது ஆனோபீலஸ் என்ற பெண் கொசு மூலம் பரவுகிறது. மனிதனுள் பாலிலி முறை இனப்பெருக்கம் மூலமாகவும், பெண் ஆனோபீலஸ் கொசுவால் பால் இனப்பெருக்கம் செய்கிறது. பெண் ஆனோபீலஸ் கொசு இவ்வொட்டுண்ணியின் நிரந்தர விருந்தோம்பி ஆகும்.

பிளாஸ்மோடியம்

தொகு

இவ்வுயிரி ஓர் அகச்செல் இரத்த ஒட்டுண்ணியாகும். இதன் வாழ்க்கை சுழற்சிக்கென ஓர் முதுகெலும்பியும், இரத்தம் உறிஞ்சும் கொசுக்களும் விருந்தோம்பிகளாகத் தேவைப்படுகின்றன. மனிதனின் உடலினுள் இவை ஸ்போரோசோயிட்டு எனும் நிலையில் நுழைகின்றன. அனபிலஸ் கொசுக்கள் இவற்றை மனிதர்களிடையே பரப்புகின்றன. பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கை சுழற்சியில் மனிதர்கள் இடைநிலை விருந்தோம்பிகளாவர். கொசுக்கள் நிலையான விருந்தோம்பிகள் . இந்த இரண்டு இடங்களிலும் பிளாஸ்மோடியத்தின் வகையில் வேறுபாடுகள் உண்டு.

கண்டுபிடிப்பு

தொகு

பிரான்சு நாட்டின் சார்ல்ஸ் லாவெரன் மலேரியா நோயுடையவர்களின் இரத்தத்தில் பிளாஸ்மோடியம் உயிர்களை முதலில் 1880 கண்டார். பிளாஸ்மோடியத்தின் நோயுண்டாக்கும் தன்மை பரவல்முறை ஆகியவற்றை சர்.ரோனால்டுராஸ் 1898-ல் விளக்கினார். இதற்கென 1902-ல் நோபல் பரிசினையும் இவர் பெற்றார். பிளாஸ்மோடியங்களுக்கும் அனாபிலஸ் கொசுக்களுக்கும் இடையே உள்ள தொடர்புகளை கிராசி என்பார் மிகத்துல்லியமாக விளக்கினார்.(1890)

பிளாஸ்மோடியத்தின் வகைகள்

தொகு

பிளாஸ்மோடியம் நான்கு வகை மலேரியா காய்ச்சலை கால வேறுபாட்டுக்கேற்ப கண்டறியப்படுகிறது. 1)பிளாஸ்மோடியம் வைவாக்ஸ்: இதனால் தோன்றும் காய்ச்சல் மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஏற்படும். இது வீரியம் குறைந்த மலேரியா காய்ச்சல் எனலாம். இதற்கு டெர்சியன் (அ) பினைன் , டெர்சியன் (அ) வைவாக்ஸ் மலேரியா என்று பெயர். 2)பிளாஸ்மோடியம் பால்சிபரம்: இவை பூமத்திய ரேகை நாடுகளில் அதிகம் உள்ளன. இவற்றின் காய்ச்சல் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தலாம். இம்மலேரியாவினால் இறப்பு நேரிடலாம். இவை தங்கும் இரத்தச் சிவப்பணுக்கள் சிறிய இரத்தக் குழாய்களில் அடைப்பினை ஏற்படுத்தும். இதனால் உள்ளுறுப்புகள் பாதிப்படைகின்றன. இது உயிர்க்கொல்லும் வகையாகும். இதற்கு மாலிக்ன்ன்ட் டெர்சியன் (அ) பெர்னிசியஸ் மலேரியா எனப்படும். 3)பிளாஸ்மோடியம் மலேரியா : இவை உடலில் நுழைவதால் நான்கு நாட்களுக்கு ஒருமுறை காய்ச்சல் தோன்றும். இதற்கு குவார்டன் மலேரியா என்று பெயர். 4)பிளாஸ்மோடியம் ஓவேலே : ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா நாடுகளில் உள்ள இவ்வகையில் தொடர்ந்து மூன்றாவது நாட்களில் காய்ச்சல் தோன்றும். இதற்கு மைல்டு டெர்சியன் (அ) ஓவேல் மலேரியா என்று பெயர். மேற்கூறப்பட்ட பிளாஸ்மோடியங்களின் அமைப்பு வாழ்க்கை சுழற்சிக்கான காலஅளவு ஆகியவற்றில் மாறுபட்டிருக்கும்.

பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கை சுழற்சி

தொகு

மனிதரின் உடலினுள் பிளாஸ்மோடியத்தின் வாழ்க்கையில் புறச்சிவப்பணுச் சுழற்சி, அகச்சிவப்பணுச் சுழற்சி என இரு நிலைகளுண்டு. புறச்சிவப்பணுச் சுழற்சி கல்லீரலிலும் அகச்சிவப்பணுச் சுழற்சி இரத்த சிவப்பணுக்களிலுமாக நிகழும்.

புறச்சிவப்பணுச் சுழற்சி

தொகு

இச்சுழற்சி நமது கல்லீரல் செல்களினுள் பாலில்லா இனப்பெருக்க முறையால் நிகழும். ஆயிரக்கணக்கான கதிர்வடிவ ஸ்போரோசோயிட்டுகள் அனபிலஸ் கொசுக்கடியினால் நமது உடலினுள் நுழைகின்றன. நுழைந்தபின் நமது இரத்த ஓட்டத்தில் சற்றே ஏறக்குறைய 30 நிமிடங்கள் சுற்றுகின்றன. பின்னவை கல்லீரலின் உட்புறமாக ரெட்டிகுலோ எண்டோதீலியல் செல்களில் ஓங்குகின்றன. கல்லீரலில் இவை கிரிப்டோசோயிட்டுகளாக உருப்பெருகின்றன. இந்நிலையில் கெட்டியான உட்கருவுடன் உடலில் நிறமிகள், குமிழ்கள் இல்லாமல் இவை தென்படும். அதிக அளவில் உணவுண்ணும் கிரிப்டோசோயிட்டுகள் தங்கியுள்ள செல்களை நிரப்பும் அளவிற்கு பெரிதாகின்றன. இந்நிலையில் கிரிப்டோ சைசான்டு எனப்படும். இச்செல்கள் பலவாகப் பிரிந்து (சைகோனி) நுண்ணிய கிரிப்டோ மீரோசோயிட்டுகளாக இரத்தத்தில் கலக்குகின்றன. இவற்றில் ஒரு சில மீண்டும் புதிய கல்லீரல் செல்களினுள் நுழையலாம். மற்றவை இரத்த்திலுள்ள சிவப்பு அணுக்களினுள் நுழையும். இவ்விதம் கல்லீரலில் தங்கும்காலம் 7-17 நாட்களாகும்.

அகச்சிவப்பணுச் சுழற்சி

தொகு

சிவப்பணுக்களுக்குள் நுழையும் கிரிப்டோ மீரோசோயிட்டுகள் அங்குள்ள பொருட்களை உணவாக்கிக் கொள்கின்றன. பின் இவை அமீபாநிலையினைப் பெறுகின்றன. இந்நிலையில் இவை டிரோபோசோயிட்டுகள் எனப்படுகின்றன.இதன் மையத்தில் தோன்றும் நுண்குழி உட்கருவை ஓரத்திற்குத் தள்ளிவிடும். மோதிர அமைப்புடைய இந்நிலைக்கு முத்திர மோதிரநிலை என்றுபெயர். இதன்பின் இவை நுண்குமிழியை இழந்து அளவில் பெரிதாகி சைசாண்டு நிலையை பெறுகின்றன. சைசாண்டுகள் பலவாகப் பிளந்து மீரோசோயிட்டுகளாகின்றன. இவை முதிர்ச்சியுற்று சிவப்பணுச் சுவரைக் கிழித்து பிளாஸ்மாவில் வெளிப்படுகின்றன. இவற்றுடன் வெளிப்படும் கழிவுப்பொருட்கள் (ஹீமோசோசின்) காய்ச்சலுக்குக் காரணமாகின்றன. மீரோசோயிட்டுகள் மீண்டும் சிவப்பணுக்களைத் தாக்கலாம். இதற்கு உள்நோய்ப்பரவல் என்று பெயர்.இவ்விதம் இரத்தத்தில் நிகழும் சுழற்சிக்கு கோல்கையின் சுழற்சி (அ) சைசோகனி என்று பெயர். தொடரும் இச்சுழற்சிகளால் ஒட்டுண்ணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். பல சுழற்சிகளுக்குப்பின் சில மீரோசோயிட்டுகள் மேமிட்டோசைட்டுகளாக உருப்பெருகின்றன. மாக்ரோ மைக்கேரா என இருவகை மேமிட்டோசைட்டுகள் தோன்றும். மாக்ரோ கேமிட்டோசைட்டுகளின் உட்கரு சிறியது. சைட்டோபிளாசத்தில் அடர்ந்த உணவுண்டு. மைக்ரோ கேமிட்டோசோயிட்டுகளின் உட்கருக்கள் பெரியவை . சைட்டோபிளாசம் தெளிவானது. இவை ஓர் கொசுவினுள் நுழைதல் வேண்டும்.

கொசுவினுள் சுழற்சி ஸ்போரோகனி

தொகு

இரத்தத்தை உறிஞ்சுபவை பெண்கொசுக்களாகும். பெண் அனாபிலஸ் கொசுக்கள் பிளாஸ்மோடியங்களை பரப்புகின்றன. மலேரியா நோயுற்ற ஒருவரின் இரத்தத்தை உறிஞ்சும் கொசுக்களுனுள் பிளாஸ்மோடியத்தின் அனைத்து நிலைகளும் செல்லும். இருப்பினும் கேமிட்டோசைட்டுகள் மட்டுமே கொசுவினுள் பிழைக்கும். சுற்றளவை அழிந்து விடும் கேமிட்டோசைட்டுகள் மாறுதல்களை அடைந்து கேமிட்டுகள் எனும் இனப்பெருக்கச் செல்களாகின்றன. இதற்கு கேமிட்டோகனி என்று பெயர்.

கேமிட்டோகனி

தொகு

இந்நிகழ்ச்சி கொசுவின் உணவுப்பாதையில் நிகழும் மைக்ரோ கேமிட்டோசைட்டுகளின் உட்கரு பலவாகப் பிளந்து சைட்டோபிளாசமும் பிரிவடைகிறது. இதனால் கதிர்வடிவில் பல மைக்ரோகேமிட்டுகள் தோன்றும். இந்நிகழ்ச்சிக்கு எக்ஸ்பிளாஜிளேசன் என்று பெயர்.மாக்ரோகேமிட்டோசைட்டு முதிர்ச்சியடைந்து பெண் இனப்பெருக்கச் செல்லாகிறது. இனப்பெருக்கச் செல்களின் ஒருங்கிணைவும் ஸ்போரோகனியும் கொசுவின் இவை பையினுள் மைக்ரோகேமீட்டும், மாக்ரோகேமீட்டும் இணைகின்றன. இவ்வேளையில் அவற்றின் உட்கருக்கள் ஒன்றுடன் ஒன்றாக கலந்துவிடுகின்றன.இந்நிகழ்ச்சிக்கு சிங்கமி அல்லது இனப்பெருக்கச் செல்களின் ஒருங்கிணைவு என்று பெயர். இந்நிகழ்ச்சியில் தோன்றும் இணைவுச் செல்லிற்கு கருமுட்டை (அ) சைகோட் என்று பெயர். கருமுட்டை நகரும் தன்மையுடையது. எனவே இதனை நகரும் கருமுட்டை எனலாம். இரைப்பையின் சுவரைத் துளைத்து வெளிவரும் கருமுட்டையானது இச்சுவரின் வெளிப்புறத்தில் ஒட்டிக்கொண்டு தன்னைச்சுற்றி ஒரு சிஸ்டு உறையைஅமைக்கும். இந்நிலையில் கருமுட்டையை ஊசிஸ்டு எனலாம். ஊசிஸ்டின் உட்கரு தொடர்ந்து பிரிவடையும். இதனால் பலநுண்ணிய கதிர்வடிவ ஸ்போரோசோயிட்டுகள் தோன்றும். இறுதியில் சிஸ்டு உறை அழிவதால் ஸ்போராசோயிட்டுகள் கொசுவின் உடற்குழியில் வெளியிடப்படுகின்றன. இவை உடலினுள் நகர்ந்து கொசுவின் உமிழ்நீர்ச் சுரப்பியினுள் சென்று தங்கிவிடுகின்றன. இக்கொசு வேறொருவரைக் கடித்ததால் இச்செல்கள் அவரது இரத்தத்தினுள் நுழைந்துவிடலாம். இவ்வகைப் பரவலுக்கு உட்செலுத்துதல்முறை என்று பெயர்.

மேற்கோள்கள்

தொகு
  1. Coatney GR, Collins WE, Warren M, Contacos PG (1971). "18 Plasmodium malariae (Grassi and Feletti, 1890)". The primate malarias. Division of Parasitic Disease, CDC. p. 209.
  2. W. E.; Jeffery, G. M. (2007). "Plasmodium malariae: Parasite and Disease". Clinical Microbiology Reviews. 20 (4): 579–592. PMC 2176047 Freely accessible. PubMed. doi:10.1128/CMR.00027-07.
  3. Yowell, C. A.; Majer, P.; Erickson, J. W.; Dame, J. B.; Dunn, B. M. (1997). "Plasmodium falciparum, P. Vivax,andP. Malariae:A Comparison of the Active Site Properties of Plasmepsins Cloned and Expressed from Three Different Species of the Malaria Parasite". Experimental Parasitology. 87 (3): 185–193. PubMed. doi:10.1006/expr.1997.4225.
  4. Dunn, Ben."RE:Current research on Plasmodium malariae." Email to Chibuzo Eke. 18 February 2009.