பயனர்:TNSE AGRI JAYAKUMAR KPM/மணல்தொட்டி

நீண்ட கால பொருட்கள்

                        நீடித்து உழைக்கும் பொருட்கள் அல்லது நீண்டகால பொருட்கள் என்பது மிக வேகமாக தேய்மானம் அடைவதில்லை.  குறிப்பாக அப்பொருள்களின் பயன்பாடுகள் மிக நீண்ட காலத்திற்கு வாடிக்கையாளர்கள் நுகரும்வண்ணம் உள்ளது.  செங்கற்கள் இதற்கு மிக பொருத்தமான உதாரணமாகும்.  ஏனெனில் கட்டிடங்களில் உள்ள செங்கற்களின் தேய்மானம் என்பது அனேகமாக இல்லையென்றே கூறமுடியும்.  குளிர்சாதன பெட்டி அல்லது மகிழுந்து போன்ற நீண்டகால பொருட்கள் தொடர்ந்து 3 அல்லது 3 ஆண்டுகளுக்கு மேல் வாடிக்கையாளர்களின் பயன்பாட்டிற்கு பயன்படுகிறது.  மோட்டார் வாகனங்கள், புத்தகங்கள், வீட்டு உபயோகப்பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள், தங்க ஆபரணங்கள், மருத்துவ கருவிகள், விளையாட்டு பொம்மைகள் போன்றவைகள் நீண்டகால பொருட்கள் என அழைக்கலாம்.

மென்மையான பொருட்கள்

                        இவை குறைந்தகால பயன்பாட்டு பொருள்கள் அல்லது மென்பொருள்கள் என அழைக்கப்படுகிறது.  இவை நீண்டகால பொருட்களின் பயன்பாட்டிற்கு எதிர்மறையானது.  மென்மையான பொருட்கள் என்பது 3 ஆண்டுகளுக்கும் குறைவான காலத்திலேயே மொத்த பயன்பாடு வாடிக்கையாளர் அல்லது நுகர்வோரால் பயன்படுத்தப்பட்டுவிடும்.  உதாரணம் அழகு சாதன பொருட்கள், துப்புறவு பொருட்கள், உணவு, எரிபொருள், பீர், சிகரெட்டுகள், மருந்துகள், புகையிலை, அலுவலக பொருட்கள், ரப்பர், பிளாஸ்டிக்குகள், துணி, ஆடை, காலணி.
                நீண்ட கால பொருட்கள் வாடகைக்கும் விற்பனைக்கும் கிடைக்கும்.  ஆனால் மென்மையான பொருட்கள் விற்பனைக்கு மட்டுமே கிடைக்கும், வாடகைக்கு கிடைக்காது.  நீண்டகால பொருட்களை வாங்குவது ஒரு முதலீடாக கருதப்படுகிறது.