பயனர்:TNSE AGRI M MADHAVAN PBLR/மணல்தொட்டி
"சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை".
- உலகப் பொதுமறை-
பாரம்பரியமிக்க நெல் ரகங்கள் :
பசுமை புரட்சி என்ற பெயரில், குறுகிய கால ரகங்களை பயிரிட்டு, பூச்சி கொல்லிகளையும், ரசாயன உரங்களையும் தெளித்து, மண்ணை மலடாக்கியது மட்டுமல்லாமல், எண்ணற்ற பறவை இனங்கள் அழிவுக்கும் நாம் காரணமாகி விட்டோம். பாரம்பரிய நெல் ரகம் அழிந்து வருகிறது. தூயமல்லி, மிளகி, கருங்குருவை ரகங்களை விவசாயிகள் பயிரிட்டு, பயனடைய வேண்டும், பஞ்சகவ்யா, மீன் அமினோ, மண்புழு, மக்கிய இலைகள் தான் உரம். ஒன்றரை மீட்டர் உயரம் வரை இதன் நாற்று வளரும்.நெல்லைப் போல், இதன் வைக்கோலும் சுவையாக இருக்கும். மாடுகள் விரும்பி உண்ணும். பாரம்பரிய நெல் ரகங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல அனைத்து விவசாயிகளும் உறுதி எடுக்க வேண்டும். ஒட்டு ரக நெல்களை வாங்கி விதைக்கும்போது, பூச்சி மருந்து, உரம் என மாற்றி மாற்றி தெளித்து, உரக் கடைக்கு பணத்தை வாரி இறைக்க வேண்டியுள்ளது. பாரம்பரிய நெல் ரகங்களை இயற்கை முறையில் விவசாயம் செய்யும் போது, இதற்கு அவசியம் கிடையாது. இயற்கை முறையில் உள்ள பயிர்களுக்கு விலை அதிகம் என, இடைத்தரகர்கள் சிலர் தவறான பிரசாரத்தை மக்களிடம் கொண்டு செல்கின்றனர். ஆனால், அப்படி எதுவும் கிடையாது. அதிகமாக பயிரிடும்போது, விலை குறைவாக வழங்கலாம்.
மண்புழு உரம்
உழவனின் நண்பன் மண்புழு என்பர். விளை நிலங்களில் ஓர் அரிய உயிரினமாக மாறி விட்டதால் மண்வளம் குறைந்து, மகசூல், விளை பொருள் தரம் குறைய வழிவகுத்து விட்டது.இதைத் தவிர்க்க ‘மண்புழு உரம்’ புதிய தொழில்நுட்பமாக உருவெடுத்துள்ளது. வேளாண் விளை பொருட்களில் மனிதன், கால்நடைகளுக்கு தேவைப்படும் விதை, காய், கனி, கிழங்குகள் ஆகியவை தவிர மிஞ்சும் அனைத்து விவசாய கழிவுகளால் மண்புழு உரம் தயாரிக்க இயலும். இவற்றில் உள்ள கல், கண்ணாடி துகள், பாலிதீன் கவர்களை பிரித்து எடுத்து விட்டு மிஞ்சும் அனைத்தையும் மண்புழு உரம் தயாரிக்கப் பயன்படுத்தலாம்.
மண்புழு உரப்பண்ணை தேவையான நீள, அகலத்துடன் கொண்ட தொட்டிகளை அமைக்க வேண்டும். அதன் அடிப்பாகத்தில் செங்கல், ஜல்லி, வண்டல் மண் ஆகியவற்றை பரப்பி, அதன் மேல் இரண்டே கால் அடி உயரத்திற்கு வேளாண் கழிவுகள் மற்றும் சாணத்தை மாறி, மாறி நிரப்ப வேண்டும்.
தொட்டியில் கழிவுகளை போடும் முன் ஓரிடத்தில் குவியலாக குவித்து அதன் மேல் மாட்டுச்சாணியை கரைத்து தெளித்து 15 நாட்கள் வைத்தால் மொத்த கொள்ளளவு மூன்றில் ஒரு பங்காக குறைந்து விடும்.
அதன் பின் தொட்டியில் போட வேண்டும்.பின் 1 கிலோ (சுமார் 1000 எண்கள்) மண் புழுக்களை தொட்டியில் விட வேண்டும். தொட்டியில் தகுந்த அளவு ஈரப்பதம் உள்ளவாறு நீரினை தெளிக்க வேண்டும். தொட்டிக்கு 250 கிலோ உரம் தொட்டியை நிழல் வலை, மேற்கூரை அமைத்து நேரடி சூரிய வெளிச்சத்தில் இருந்து பாதுகாக்க வேண்டும். புழு விட்ட 15 – 20 நாட்களில் இருந்து உரம் கிடைக்கும். 30 – 50 நாட்களில் அனைத்து கழிவுகளும் மட்கி உரமாகிவிடும். புழு விட்ட மூன்று மாதங்களில் புழுக்கள் தங்களுக்குள் பெருக்கமடைந்து பல்கிப் பெருகிவிடும். எலி, எறும்பு, பறவைகளிடம் இருந்து தொட்டியில் உள்ள புழுக்களை பாதுகாக்க வேண்டும்.ஒரு தொட்டியில் இருந்து 250 கிலோ மண் புழு உரம் கிடைக்கும். இதனை இருட்டான அறையில் 40 சதவிகித ஈரப்பதத்தில் சேமித்து வைக்கலாம்.விற்கும் சமயத்தில் மட்டும் பாக்கெட் செய்ய வேண்டும். தொட்டியின் அளவுகளை வசதிக்கு ஏற்ப மாற்றி
அமைக்கலாம்.
மண்புழு தயாரிப்பிற்கு வெவ்வேறு விதமான கழிவுகளை பயன்படுத்தினால் கிடைக்கும் மண்புழு உரம் பலதரப்பட்ட பயிர்ச் சத்துக்களை உள்ளடக்கியதாக இருக்கும்.மண்புழு உரத்தில் கரிமம், தழைச்சத்து, மணிச்சத்து, சாம்பல்சத்து, சோடியம், கால்சியம் – மெக்னீசியம், தாமிரசத்து, இரும்புச்சத்து, துத்தநாகச்சத்து, கந்தகச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் நிரம்பியுள்ளன. தொட்டியில் ஊற்றப்படும் நீரில், உபரி நீர் கீழே திரவ வடிவமாக வெளிவரும்.இதுவே ‘வெர்மி வாஷ்’ எனப்படும். இதில் அமில காரத்தன்மை, கரைந்துள்ள ஆக்ஸிஜன், குளோரைடு, சல்பேட் உப்புகள், பாஸ்பேட்டுகள், பொட்டாசியம், சோடியம் உள்ளிட்டவை நிரம்பியுள்ளன. மகசூல் பெருக ஒரே வழி
மண்புழு செறிவூட்டப்பட்ட நீரில் தழை, மணி, சாம்பல் மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் திரவ நிலையில் உள்ளதால், இதனை தெளித்தல் முறையில் பயிர்களுக்கு அளிக்கலாம். வேளாண் கழிவுகளை கொண்டு மண்புழு உரத்தை உற்பத்தி செய்து பயன்படுத்துவதால் சிறு, குறு விவசாயிகளின் நிலம் மேம்படுகிறது. உற்பத்தி திறன் அதிகரிப்பதன் மூலம் வருவாய் உயர்கிறது.
@ அக்ரி மு.மாதவன் @ அக்ரி மு.மாதவன் , வேளாண்மை ஆசிரியர்
கோழிகளால் கொட்டும் வருமானம்
தொகுகோழிகளுக்கு ஒரு கோழிக்கு ஒரு சதுர அடி என்ற விகிதத்தில் இடம் கொடுத்து… நாம் வளர்க்க இருக்கும் கோழிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கொட்டகை அமைத்துக் கொள்ளலாம். நாங்கள் 30 அடி நீளம், 18 அடி அகலம் அளவில் கொட்டகை அமைத்திருக்கிறோம். இந்தக் கொட்டகை 540 சதுர அடி அளவு என்பதால், 500 கோழிகளுக்கும் மேல் வளர்க்கலாம். இப்போது 250 நாட்டுக் கோழிகள், 150 கிரிராஜா கோழிகள் என 400 கோழிகளுடன் 15 வாத்துகள் மற்றும் 20 கின்னிக்கோழிகள் இருக்கின்றன. கோழி, வாத்து, கின்னிக்கோழிகள் ஆகியவற்றுக்கு வளர்ப்பு முறை ஓன்றுதான். இவற்றுக்கு காலை, மாலையில் பிண்ணாக்குக் கலந்த தவிட்டுக் கலவையை உணவாகக் கொடுக் கிறோம். 1 கிலோ தவிட்டுக்கு, 50 கிராம் கடலைப்பிண்ணாக்கு என்கிற விகிதத்தில் எடுத்துக் கொண்டு தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து கொட்டகைக்குள் ஆறு இடங்களில் வைத்து விடுவோம். முட்டைகோஸ் இலை, காலிஃபிளவர் இலை, என மிச்சமாகும் காய்கறிக் கழிவுகளையும் கொடுக்கலாம். இதைத் தவிர புழு, பூச்சிகள், பல்லிகள், வண்டுகளை எல்லாம் கோழிகளே பிடித்துச் சாப்பிட்டுக் கொள்ளும். இதனால், கொட்டகைக்குள் பூச்சிகளுக்கு மருந்து அடிக்கும் செலவு மிச்சம். கோழி மற்றும் வாத்து ஆகியவற்றின் எச்சங்கள்… தோட்டத்துக்கு உரம்தான். கோடை முடிந்து மழைக்காலம் தொடங்கும் சமயத்தில், 15 நாட்களுக்கு ஒரு முறை சின்ன வெங்காயம் கொடுக்கலாம். இதனால் கோழிகளுக்கு சளி பிடிக்காது.
ஆடு வளர்ப்பு
தொகுகொட்டில் முறையில் ஆடுகளை வளர்ப்பதுதான் நல்லது. கொட்டகை அமைக்கும்போது… பெரிய ஆடுகளுக்கு ஒரு ஆட்டுக்கு பத்து சதுர அடி, குட்டி ஆடுகளுக்கு ஒரு ஆட்டுக்கு 5 சதுர அடி என்ற அளவில் இடம் கொடுக்க வேண்டும். அதனால், நாம் வளர்க்க இருக்கும் ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப கொட்டகை அமைத்துக் கொள்ளலாம். தரையிலிருந்து 8 அடி உயரத்தில் கொட்டகை இருக்க வேண்டும். நாங்கள், 80 அடி நீளம் 20 அடி அகலம் என்ற அளவில், 8 அடி உயரத்தில் கொட்டில் அமைத்து பத்து பிரிவுகளாகப் பிரித்துள்ளோம். இதற்கு இரண்டரை லட்ச ரூபாய் செலவு ஆனது. ஒரு பிரிவில் பெரிய ஆடு என்றால் 10 முதல் 15 ஆடுகளையும், குட்டி என்றால் 25 முதல் 30 வரையிலும் அடைக்கலாம். இப்போது தலைச்சேரி-47, ஜமுனாபாரி-20, நாட்டு ஆடுகள்-60, பீட்டல் கிடா-1, பீட்டல் ஆடு-1, கோபார் கிடா-1, சேலம் கருப்பு-20, செம்மறி-15 என மொத்தம் 165 ஆடுகள் இருக்கின்றன. ஆடுகளின் எச்சம் கீழே விழுந்துவிடுவதால், சுத்தம் செய்வது எளிது. சாதாரண முறை ஆடு வளர்ப்பு என்றால், பராமரிப்புக்குக் குறைந்தது மூன்று முதல் ஐந்து நபர்கள் தேவைப்படும். ஆனால், கொட்டில் முறை என்பதால், 165 ஆடுகளை ஒரே ஆள் பராமரிக்க முடியும்.
தினமும் காலையில் பசுந்தீவனமாக அகத்தி, சோளத்தட்டை, வேலிமசால் ஆகியவற்றைக் கொடுக்கலாம் (இதற்காகவே அரை ஏக்கரில் அகத்தி போட்டிருக்கிறார் தண்டபாணி). மதியத்தில் அடர்தீவனமாக கருக்கா தவிடு, மக்காச்சோளம், சோளம், உளுந்தம்குருணை, துவரைக்குருணை, தாது உப்பு, அயோடின் உப்பு ஆகியவற்றைக் கலந்து, மெஷினில் திரித்து, ஒரு பெரியஆட்டுக்கு 300 கிராம், பெரிய குட்டிக்கு 200 கிராம், சின்ன குட்டிக்கு 150 கிராம் என்கிற அளவில் தினமும் கொடுக்கலாம். கொட்டில் முறையில் ஆடுகளை வளர்க்கும்போது ஆடுகளுக்கு சரியாகச் செரிமானம் ஆகாமல் கழிச்சல் ஏற்படக்கூடிய வாய்ப்புகள் உண்டு. எனவே, கொட்டிலுக்கு முன்பாக 100 அடி நீளம் 50 அடி அகலத்தில் வேலி அமைத்து, ஆடுகளைக் காலாற நடக்க வைக்கலாம். கொட்டிலை விட்டு இறங்கி, இந்த வேலிகளுக்குள் மட்டும் ஆடுகள் மேயும். ஆறு மாதத்துக்கு ஒரு முறை கால்நடை மருத்துவர் மூலமாக, ஆடுகளுக்குத் தடுப்பூசி போட வேண்டும். குட்டிகள், செம்மறி ஆடுகள், சினையாடுகளை தனித்தனிக் கொட்டகையில் வளர்ப்பது நல்லது