பயனர்:TNSE AGRI R MALARVIZHI CBE/மணல்தொட்டி
மர விதைகளை கையாளும் நுட்பங்கள்
மர விதைகளை[1] கையாளும் நுட்பங்களை தெரிந்து கொள்வதன் மூலம் அதிகரிக்கும் மர விதை தேவைகளை சந்திக்க முடியும். வளர்ந்து வரும் பல்வேறு வன மேம்பாட்டுத் திட்டங்களான வேளாண் காடுகள், பண்ணைக் காடுகள், சமூக வனக் காடுகள் மற்றும் தரிசு நில மேம்பாடு போன்றவையால் மர விதைகளின் தேவை அதிகரித்துள்ளன.
விதை சேகரிப்பு
தொகுவிதை சேகரிப்பு சிறப்பாக அமைய சேகரிக்கப்படும் விதை பற்றிய தகவல்கள் அறிந்திருப்பது அவசியம். 1.மரத்தின் வகை அல்லது இனம் 2.தரமான விதைகளை சேகரிக்கும் முறை 3.இனத்தின் பங்கீடு 4.இனத்தின் சீரான தன்மை 5.பூக்கும் மற்றும் பழுக்கும் காலம்
பழங்கள் முழுமையாக பழுத்த பிறகு, ஆனால் சிதறுதலுக்கு முன்பு சேகரித்தல் வேண்டும். மரங்களின் கிளைகளை கயிறு அல்லது நீளத்தடி கொண்டு அசைத்தும் பறிக்கலாம். பெரிய மரங்களாக இருப்பின் அவற்றில் ஏறி விதைகளைப் பறிக்கலாம்.
விதை சேகரித்த உடனேயே, விதைகளை உரிய முறையில் உலர்த்துதல் வேண்டும்.பழ விதைகளை தண்ணீரில் கையினால் கசக்கி சுத்தமான விதைகளை தனியாக்குதல் அவசியம்.
விதைகளின் முளைப்புத்திறனை அதிகப்படியான நாட்களுக்கு நீடிப்பதே விதை சேமிப்பின் நோக்கமாகும். விதைகள் சாதரணமாக மூன்று வித வெப்பநிலைகளில் சேமிக்கப்படுகின்றன. அவை 15– 18 டிகிரி செல்சியஸ் 0 – 5 டிகிரி செல்சியஸ் அறை சூழலில்
விதை சேமிப்பிற்கு பயன்படும் கொள்கலன்கள்
தொகுவிதை சேமிப்புக்கு பலவிதமான கொள்கலன்கள் உபயோகப் படுத்தப்படுகின்றன. 1.தகர கொள்கலன் துணிப்பை 2.பிளாஸ்டிக் கொள்கலன் துணிப்பை 3,தகர கொள்கலன் காகித உறை 4.காற்று புகாத கொள்கலன்
தரமான மரக்கன்று உற்பத்திக்கு முதல் தேவை தரமான விதைகளே! தரத்தை தீர்மானிப்பது அதன் சேகரிக்கும் முறை, பதனிடும் முறை, மற்றும் சேமிக்கும் முறைகளே ஆகும். ஆகையால் தரமான மரக்கன்று உற்பத்தி செய்ய விருப்புவோர் , தாம் விரும்பும் மரத்தின்விதை சேகரிப்பு, பதனிடும் முறை மற்றும் சேமிப்பு முறைகளை அறிந்திருப்பது அவசியம். மேற்கோள்கள்