பயனர்:TNSE AGRI VISALAKSHI CBE/மணல்தொட்டி

பருத்தியில் ஊடுபயிராக தட்டப்பயறு, சூரியகாந்தி[1], மக்காச்சோளம்[2],வெண்டை மற்றும் ஆமணக்கு[3] போன்ற பயிர்களை பயிரிடுவதன் மூலம் பருத்தியை தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தலாம் ஒவ்வொரு 6 வரிசைக்கும் ஒரு வரிசை தட்டைபயிறு[4] அடுத்த 6வது வரிசையில் பருத்தி விதைத்த 15தினங்களில் சூரியகாந்தி விதைத்தல்,அதற்கு அடுத்த 6வது வரிசையில் மக்காச்சோளம் விதைத்தல்,ஊடுபயிராக வரப்பு ஓரங்களில் வெண்டை பயிரிடுதல்.

தட்டப்பயறு ஊடுபயிர்

தொகு

தட்டப்பயறு ஊடுபயிராக பருத்தியில் இடும்பொழுது பொறிவண்டு இனப்பெருக்கம் அதிகமாகி பருத்தி பயிரில் வாழும் அசுவினியைப் பிடித்து உண்ணும்.

சூரியகாந்தி ஊடுபயிர்

தொகு

சூரியகாந்தி ஊடுபயிராக பருத்தியில் இடும்பொழுது பருத்தியைத் தாக்கும் காய்ப்புழு முதலில் சூரியகாந்தி பயிரையே தாக்குவதால்கட்டுபடுத்துதல் இலகுவாகிறது

மக்காச்சோளம் ஊடுபயிர்

தொகு

மக்காச்சோளம் ஊடுபயிராக விதைப்பதால் அதன் மகரந்தத்தினை உண்டு பொறிவண்டு இனப்பெருக்கம் அதிகமாகி பருத்தியை தாக்கும் அசுவினியை கட்டுப்படுத்துகிறது. மேலும் வெள்ளை ஈ தாக்குதல் அதிகம் வராமல் தடுக்கிறது

வெண்டை ஊடுபயிர்

தொகு

வெண்டை[5] ஊடுபயிராக பயிரிடுவதால், பருத்தியினை தாக்கும் காய்ப்புழுக்கள் அதிகமாக வெண்டைப் பயிரையே விரும்பி உண்பதால்,அதன் தாக்குதல் வெண்டைப்பயிரில் அதிகமாக இருக்கும்.இதனை கட்டுபடுத்துதல் இலகுவாகும்.

ஆமணக்கு ஊடுபயிர்

தொகு

ஆமணக்கு பயிரை வரப்பு ஓரங்களில் பயிரிடுவதால் பருத்தியினை தாக்கும் புகையிலைப்புழு(புரொடினியா) தாக்குதல் பருத்தி பயிருக்கு குறைகிறது.

  • மேலே குறிப்பிட்டுள்ள ஊடுபயிர்களை தினமும் கண்காணித்து முட்டைக்குவியல்,புழுக்களை கையால் பொறுக்கி அழிக்கவும்.
  • வெள்ளை ஈ தாக்குதலை கட்டுப்படுத்த மஞ்சள் பொறி ஒரு எக்டருக்கு 25 பொறிகள் வைக்கவும்.
  • குண்டுக்குறியிட்ட வரிசையின் உறுப்பினர்
  1. https://en.wikipedia.org/wiki/Helianthus
  2. https://ta.wikipedia.org/s/33e
  3. https://en.wikipedia.org/wiki/Castor
  4. https://ta.wikipedia.org/s/1ow3
  5. https://ta.wikipedia.org/s/iiz