பயனர்:TNSE AGRI VPAGUTHARIVU SVG/மணல்தொட்டி

தாவர ஊட்டச்சத்துக்கள் தொகு

உலகில் உள்ள அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு உணவு தேவை. தாவரங்கள் தமக்கு வேண்டிய உணவை தாமே தயாரித்துக்கொள்கின்றன. மண்ணிலிருந்து நீரையும் ஊட்டச்சத்துக்களையும், காற்றிலிருந்து கரியமிலவாயுவையும் எடுத்துக்கொண்டு, சூரிய ஒளியின் உதவியாலும், தம்மிடம் உள்ள பச்சையத்தைக்கொண்டும் தங்களுக்குத் தேவையான உணவை தாமே தயாரித்துக்கொள்கின்றன.

தாவரங்களின் வளர்ச்சிக்கு 16 ஊட்டச்சத்துக்கள் தேவை. இவ்வூட்டச்சத்துக்களை தனிமங்கள் என்றும் கூறலாம். கரி, நீரியம்(ஹைட்ரஜன்), உயிரியம்(ஆக்ஸிஜன்), தழைமம்(நைட்ரஜன்), மணிமம்(பாஸ்பரஸ்), சாம்பரம்(பொட்டாசியம்) போன்றவை பேரூட்டச்சத்துக்களாகும். இவற்றில் கரி, நீரியம், உயிரியம் ஆகியவை மிக அதிக அளவு தேவைப்பட்டாலும், இவை வளிமண்டலத்திலிருந்தும் நீரிலிருந்தும் போதுமான அளவு கிடைக்கின்றன. சுண்ணம்(கால்சியம்), வெளிமம்(மெக்னீசியம்), கந்தகம் போன்றவை சற்று குறைவாகத் தேவைப்படுவதால் இவை இரண்டாம் நிலை பேரூட்டச்சத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன. இரும்பு, துத்தநாகம், மங்கனம் (மாங்கனீசு), தாமிரம், கார்மம்(போரான்), பன்றீயம்(மாலிப்டினம்), பாசிகம்(குளோரின்) போன்றவை மிக நுண்ணிய அளவில் தேவைப்படுவதால் இவை நுண்ணூட்டச்சத்துக்கள் என்று அழைக்கப்படுகின்றன.

இவை பெரும்பாலும் மண்ணிலிருந்தே