பயனர்:TNSE ARIF CHN/மணல்தொட்டி
யாதும் ஊரே யாவரும் கேளிர்
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் நாகரீகத்திலும் பண்பாட்டிலும் சிறந்து விளங்கினர் என்பதற்கு இத்தொடர் ஒன்றே சாட்சி பகரும். கணியன் பூங்குன்றனார் என்ற மாபெரும் புலவரே இவ்வடிகளின் சொந்தக்காரர். இவ்வுலகில் உள்ள அனைத்து ஊர்களும் எமது ஊரே இவ்வுலகில் உள்ள அனைவரும் எமது உறவினர்களே என்று கூற எவ்வளவு பெரிய மனம் வேண்டும். மேலும் நல்லது செய்தல் ஆற்றீராயினும் அல்லது செய்தல் ஓம்புமின் என்று கூறி இருப்பதன் மூலம் இவ்வுலகில் வாழும் அனைவரும் நல்லோராய் வாழ வழி செய்துள்ளார். ஆம் நல்லோராக வாழ்வதற்கு நன்மைகள் செய்ய வேண்டும் என்றில்லை. தீமைகள் செய்யாமல் வாழ்ந்தாலே போதும்.