பயனர்:TNSE Agri Elango DGL/மணல்தொட்டி

காய்கறிப்  பயிரில் உயிரியல் முறை பயிர்பாதுகாப்பு 

தொகு

உயிரியல் முறை பயிர்பாதுகாப்பு என்பது எந்த வித இரசாயனப் பூச்சி மற்றும் பூசணக் கொல்லிகள் பயன்படுத்தாமல் இயற்கை உயிர் எதிர்க் கொல்லிகளை பயன்படுத்தி பூச்சி மற்றும் நோய்களை கட்டுப்படுத்துவதாகும். இம்முறை பயிர்பாதுகாப்பில் சுற்றுச்சூழல் மாசுபடாமல் காய்கறிப்பயிர்களில் பூச்சி கொல்லி மருந்தின் நச்சுத் தன்மை ஏற்படாமல் உயிரினங்களுக்கு நன்மை செய்து பாதுகாக்கப்படுகின்றன .

உயிரியல் முறை பூச்சிகள் மற்றும் நோய்கள் கட்டுப்பாட்டின் முக்கியத்துவம் :

தொகு

இன்றய வேளாண்மையில் இரசாயனப் பூச்சி மற்றும் பூசணக் கொல்லிகளை பயன்படுத்துவதால் சுற்றுச் சூழல் மாசுபடுவதோடு மட்டுமின்றி பூச்சிகள் மற்றும் நோய்க்காரணிகளின் எதிப்புசக்தி தோன்ற வழிவகுக்கின்றன.அத்துடன் உணவுப்பொருள்களில் குறிப்பாக காய்கறிப்பயிர்களில் எஞ்சிய நச்சுத்தன்மை தங்கி உயிரினங்களுக்கும் நன்மை செய்யும் காரணிகளுக்கும் தீங்கு விளைவிக்கின்றது. இவற்றை தவிர்க்கும் பொருட்டு உயிரியல் முறை பயிர்பாதுகாப்பில் ஒட்டுண்ணிகள்,இறைவிழுங்கிகள்,நச்சுயிரிகள்,பூஞ்சாணம் மற்றும் பாக்டீரியா ஆகியவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.இந்த உயிரியல் காரணிகள் பூச்சிகள்,நோய்க்காரணிகளை சிறப்பாகக் கட்டுப்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நன்மை செய்யும் மற்ற உயிரினங்களுக்கு தீங்கு விளைவிக்காமல் சுற்றுப்புறச் சூழ்நிலையை பாதுகாக்கின்றது.

உயிரியல் முறை பூச்சிக் கட்டுப்பாடு:

தொகு

ஒட்டுண்ணிகள்:

தொகு

குளவி மற்றும் ஈ இனத்தைச் சேர்ந்த சில பூச்சிகள்,பிற பூச்சிகளின் முட்டை,புழுக்கள் மற்றும் கூட்டுப்புழுக்களில் ஒட்டுண்ணியாக வாழ்கின்றன.இவ்வகை பூச்சிகள் தீமை செய்யும் பூச்சிகளைச் சார்ந்து வாழ்ந்து அவற்றை அழிக்கின்றன.சில வகை முட்டை ஒட்டுண்ணிகள் பூச்சியின் முட்டையைத் தேடிப்பிடித்து அதன் அதன்மீது தன சிறிய முட்டையை இட்டு பூச்சிகளின் முட்டையை அழிக்கிறது. (ஏ.கா) டிரைக்கோகிரம்மா எனும் முட்டைஒட்டுண்ணிகள் தக்காளி,மிளகாய்,கத்தரியில் தோன்றும் காய்புழுக்கள் மற்றும் புகையிலை வெட்டுப்புழு ஆகிய பூச்சிகளின் முட்டைகள் மீது தமது சிறிய முட்டையை இட்டு அழிக்கின்றன.

கிடைக்குமிடம் :

 இந்த ஒட்டுண்ணிகள் ஒரு சிறிய அட்டையில் மட்டைகள் ஒட்டப்பட்ட நிலையில் ஒட்டுண்ணி வளர்ப்பு நிலையங்களில் கிடக்கின்றன.

பரிந்துரை:

 ஒரு ஏக்கருக்கு 2.5 மி.லி.வீதம் 2 அல்லது 3 முறை பூச்சிகளின் செத்த நிலைக்கு ஏற்ப வயலில் ஏவி விட்டு பயன்படுத்தலாம் , பப்பாளி மாவுப்பூச்சியை கட்டுப்படுத்த அசிரோபாக்ஸ் என்ற ஒட்டுண்ணிகளை ஏக்கருக்கு 100 என்ற எண்ணிக்கையில் விட்டு பயன்படுத்தலாம்.