பயனர்:TNSE GUNA66 DPI/மணல்தொட்டி

காட்டுக்காநல்லுார், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி தாலுகாவில் உள்ள ஒரு கிராமம் ஆகும். அமைவிடம்[மூலத்தைத் தொகு] இக்கிராமம் கடல்மட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 168மீட்டர் உயரத்தில் இருக்கிறது. இவ்வூரின் அமைவிடம் 12.753514, 79.126840 ஆகும். இக்கிராமத்தின் பரப்பளவு 616.14 ஹெக்டேர் ஆகும். இங்கு 2074 குடும்பங்களும் 8458 மக்களும் வசிக்கின்றனர். இதில் 4200 ஆண்களும் 4258 பெண்களும் அடங்குவர். 6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் 832. இதில் ஆண் குழந்தைகள் 422, பெண் குழந்தைகள் 410. இக்கிராமம் ஆரணி சட்டமன்றத் தொகுதியிலும, ஆரணி பாராளுமன்றத் தொகுதியிலும் வருகிறது. அஞ்சல் குறியீட்டு எண் 632 312. STD CODE 04173

மேற்கோள்[மூலத்தைத் தொகு]


மிதவை உயிரியல்(பிளான்க்டாலஜி) தொகு

மிதவை உயிரியல் என்ற தாவரவியல் பிரிவானது நீர்நிைலகளில் வாழும் பலவித சிறிய நகரும் தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகள் பற்றி விளக்குகிறது. மிதவை உயிரியல் பிரிவானது முதன்மை உற்பத்தி, ஆற்றல் ஓட்டம் மற்றும் கார்பன் சுழற்சி ஆகிய தலைப்புகளை உள்ளடக்கியது. மிதவை உயிரிகள் உயிரியல் பம்ப் எனப்படும் அற்புதமான வேலையைச் செய்கிறது, அதாவது கடல் சுற்றுச்சூழல் மண்டலத்தில் உள்ள மிதவை உயிரிகள் கார்பனை கடலின் மேல் பகுதியில் உள்ள யுபோடிக் அடுக்கிலிருந்து கடலின் ஆழத்திற்கு கொண்டு செல்கிறது. இச்செயலின் மூலம் கரியமிலவாயு கடலின் ஆழத்திற்குச் செல்வதால் புவி வெப்பமயமாதல் குறைக்கப்பட ஒரு காரணியாகிறது. நவீன மிதவை உயிரியலானது சறுக்கி நகரும் உயிரிகளின் நடத்தை அம்சங்களை விளக்குகிறது. மிதவை உயிரியலின் சில பிரிவுகள் நீண்டகால சுற்றுச்சூழல் ஆய்வுமையங்களில் ஆன்லைன் மூலம் பொதுமக்கள் பங்களிப்பை அனுமதிக்கிறது.


ஹெர்பல் டானிக் தொகு

மூலிகை மருத்துவத்தில் ஹெர்பல் டானிக் எனப்படுவது ஊட்டச்சத்து, ஊட்டமருந்து, சத்துக்கரைசல், பலவிருத்தி பல பெயர்களால் தமிழில் அழைக்கப்படுகிறது. இது இழந்த பலத்தை திரும்ப பெறவும், உறுப்பு மண்டலங்களை ஊக்கப்படுத்தவும் அல்லது உடல் நலம் நன்கு சீராக இருக்கவும்(சர்வரோக நிவாரணி) உதவுகிறது. Kerry Bone (2007). The Ultimate Herbal Compendium. Phyotherapy Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-646-47602-5. சிறப்பான முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஒத்த மூலிகைத் தாவரங்களின் தொகுப்பிலிருந்து தயாரிக்கப்பட்ட கரைசலே மூலிகை டானிக் எனப்படும்.

மேற்கோள் தொகு


ஆசிரியர் பெயர் குறித்தல் தொகு

ஆசிரியர் பெயர் குறித்தல் என்ற அமைப்பானது முதன்முதலில் 1992-ல் ரிச்சர்ட் கென்னத் புருமித் மற்றும் C.E.போவெல் என்ற அறிஞர்களால் உருவாக்கப்பட்டது. தாவரவியல் அறிஞர்களால் நல்ல முறையில் விளக்கப்பட்ட தாவரச்சிற்றினத்திற்கு அவருடைய பெயர்ச்சுருக்கம் தாவரப்பெயரின் இறுதியில் கொடுக்கப்படும். அப்படிப்பட்ட பெயா்ச்சுருக்கங்களை கொண்ட பதிப்பிக்கப்பட்ட தகவல்தளமாக இந்த அமைப்பு விளங்குகிறது. இத்தளமானது தற்பொழுது அகில உலக தாவரப்பெயர்கள் அட்டவணை என்ற பெயரில் ஆன்லைனில் பராமரிக்கப்படுகிறது. ஒரு சிற்றினத்தின் முழுப்பெயரைக் கொடுக்கும்போது ஒரே குடும்பப் பெயர்களைக் கொண்ட ஆசிரியர்களின் பெயரக் குழப்பத்தை தவிர்ப்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட பெயர்ச்சுருக்கத்தை இத்தளம் அளிக்கிறது. பூக்கும் தாவரங்களான ஆஞ்சியோஸ்பெர்ம்கள், ஜிம்னோஸ்பெர்ம்கள், பெரணிகள், பிரையோபைட்டுகள், பாசிகள், பூஞ்சைகள், மற்றும் தொல்லுயிர் தாவரங்களை சிறந்த முறையில் விவரித்த தாவரவியல் ஆசிரியர்கள் பற்றிய தகவல்களை இத்தளம் அளிக்கிறது.1992-க்கு முன்பு வரை வகைப்பாட்டியல் இலக்கியத்தில் ஒவ்வொரு ஆசிரியருக்கும் பல பெயர் சுருக்கங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. தாவரவியல் பெயரிடலுக்கான அனைத்துலக நெறிமுறைகள்(ICN ) என்ற அமைப்பு பாசிகள், பூஞ்சைகள், மற்றும் தாவரங்களுக்கான பெயரையும் அதன் ஆசிரியர் பெயர் சுருக்கத்தையும் கொண்டுள்ளது. ஆனால் தாவரங்களுக்கான பெயர்களைப் பயன்படுத்தும்போது ஆசிரியருக்கான பெயர்ச்சுருக்கம் தேவையில்லை. தவறான முறையில்(நாமென் ஆம்பிகுவம்) உள்ள ஆசிரியர் பெயர் சுருக்கங்களை கண்டறிய ICN என்ற அமைப்பு Brummitt & Powell’s Authors of plant names (1992) என்ற புத்தகத்தையும், வலைதளங்களான International Plant Names Index(www.ipni.org), Index Fungorum (www.indexfungorum.org)பரிந்துரைக்கிறது. புருமித் மற்றும் போவெல் போன்ற ஆசிரியா்கள் அகில உலக அளவில் பிரபலமாகாவிட்டாலும் ஆசிரியர் பெயர்ச் சுருக்கம் அளிக்கப்படாத காலத்தில் தாவரங்களை விவரித்துள்ளார்கள். ஆனால் ஒரு தாவரத்தின் உண்மையான தகவல்களை தெரிந்துகொள்ள ஆசிரியர் பெயர்ச்சுருக்கத்தை விட முழுப்பெயரே சிறந்தது.

மேற்கோள் தொகு

Jones, Stanley D.; Wipff, Joseph K.; Montgomery, Paul M. (1997). Vascular Plants of Texas: A Comprehensive Checklist Including Synonymy, Bibliography, and Index. University of Texas Press. pp. 5–6. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-292-72962-9. Retrieved 7 July 2013. Davis, Elisabeth B.; Schmidt, Diane (1996). Guide to information sources in the botanical sciences (2. ed.). Englewood, Colo.: Libraries Unlimited. p. 188. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1563080753. Authors of Plant Names Where is the Brummitt & Powell "Authors of Plant Names" database?". Royal Botanic Gardens, Kew. Retrieved 7 July 2013. Biodiversity Research in the Horn of Africa Region: Proceedings of the Third International Symposium on the Flora of Ethiopia and Eritrea. Copenhagen: Carlsberg Academy. 1999. McNeill, J.; Barrie, F. R.; Buck, W. R.; Demoulin, V., eds. (2012), International Code of Nomenclature for algae, fungi, and plants (Melbourne Code), Article 46 (electronic ed.), Bratislava: International Association for Plant Taxonomy, retrieved 2012-12-20



லைனர்ஸ்(Liners) என்ற வார்த்தையானது தோட்டக்கலை அடிப்படையில் உருவாக்கப்பட்டது. தோட்டக்கலையில் மிக இளம் தாவரங்கள் டிரே எனப்படும் தட்டுகளில் வளர்க்கப்படும் முறைக்கு லைனர்(ஸ்)கள் என்று பெயர். அத்தாவரங்கள் மொத்த வியாபாரிகள் அல்லது சிறு வியாபாரிகளுக்கு விற்கப்படும். பின்னர் அவை பெரிதாக வளர்க்கப்பட்டு மக்களுக்கு விற்கப்படும். லைனர்கள் பொதுவாக விதைகளில் இருந்து தயாரிக்கப்பட்டாலும் தண்டு அல்லது கிளைகளின் வெட்டிய துண்டுகளிலிருந்தும் திசு வளர்ப்பிலிருந்தும் தயாரிக்கப்படலாம். லைனர்கள் சிறு சிறு அறைகள் கொண்ட பிளாஸ்டிக் டிரேக்களில் வளர்க்கப்படும். ஒவ்வொரு அறையிலும் ஒரு தாவரம் மட்டுமே வளர்க்கப்படும்.




தாவரங்களில் உள்ள மலர்களில் இணையொத்த உறுப்புகள்(Connation ) உருவாகும்போதே இணைந்து காணப்படுவதற்கு கொன்னேஷன் என்று பெயர். உதாரணமாக அல்லி இதழ்கள் ஒன்றிணைந்து குழல் வடிவ அல்லிவட்டம் உருவாகும். இவ்வாறு இணைந்த உறுப்புகளுக்கு கொன்னேட் என்று பெயர். இதற்கு நேர்மாறாக வெவ்வேறான உறுப்புகள் இணைந்து காணப்படுவதற்கு அட்னேஷன் என்று பெயர். இவ்வாறு இணைந்த உறுப்புகளுக்கு அட்னேட் என்று பெயர். இணையொத்த உறுப்புகள் மிக அருகாைமயில் நெருங்கி இருந்தாலும் அவை இணையாமல் இருப்பதற்கு கொன்னிவென்ட் என்று பெயா். இது போன்ற அமைப்பு சொலானம் போன்ற பல பேரினங்களில் காணப்படுகிறது.[1][2]

மலரின் பாகங்களில் காணப்படும் கொன்னேஷன் வகைகள் சின்செபாலஸ் : மலரில் உள்ள அனைத்து புல்லி இதழ்களும் இணைந்து கோப்பை அல்லது குழல் வடிவில் காணப்படும். இணைந்த புல்லி இதழ்களின் அடிப்பகுதி குழல் வடிவிலும் இணையாத புல்லி இதழ்களின் நுனிப்பகுதிகள் தனி மடல்களாகவும் காணப்படும். சின்பெடாலஸ் : மலரில் உள்ள அனைத்து அல்லி இதழ்களும் இணைந்து கோப்பை,குழல் அல்லது வேறு வடிவில் காணப்படும். மகரந்தத்தாள்கள்: சினான்ட்ரஸ் : மகரந்தத்தாள்கள் அனைத்தும் குறிப்பிட்ட முறையின்றி இணைந்திருக்கும். சின்பிளமென்டஸ் : மகரந்தத்தாள்கள் அனைத்தும் மகரந்தக்கம்பிகளில் மட்டுமே இணைந்திருக்கும். சினான்த்ரஸ் : மகரந்தத்தாள்கள் அனைத்தும் மகரந்தப்பைகளில் மட்டுமே இணைந்திருக்கும். சின்கார்பஸ் : சூலிலைகள் அனைத்தும் இணைந்து கூட்டு சூற்பையாக காணப்படும்.

   மலரின் இணையாத(இணைப்பில்லாத) பாகங்கள் அனைத்திற்கும் சின் என்ற முன்வாா்த்தைக்குப் பதில் அபோ அல்லது டையலி என்ற முன்வார்த்தை வரும். உதாரணமாக அல்லி இதழ்கள் இணையாமல் காணப்பட்டால் அதற்கு அபோபெடாலஸ் டையலிபெடலஸ்  என்று பெயர்

மேற்கோள் தொகு

  1. Little, R. John; Jones, C. Eugene, eds. (1980). A Dictionary of Botany. New York: Van Nostrand Reinhold Company. p. 91. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-442-24169-0.
  2. Jackson, Benjamin Daydon (1928). A Glossary of Botanic Terms with their Derivation and Accent (fourth ed.). London: Gerald Duckworth & Co. Ltd. p. 89.




பிரேசிலியா(Brazilea) என்பது ஒரு அழிந்துபோன பேரினப் பாசியாகும் பிரேசிலியா சிற்றினங்களான பிரேசிலியா ஹெல்பி மற்றும் பிரேசிலியா சிஸ்ஸா ஆகியவை பேலியோரோட்டா என்னும் இடத்தில் உள்ள ஜியோ பார்க் பகுதியில் மரியானா நகரில் மொரோ டோ பாபாலியோ பாறைப்பகுதியில் வாழ்ந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரேசிலியா வாழ்ந்த காலம் பேர்மியன் புவியியல் காலகாட்டத்தில் சக்மாரியன் என்ற காலம் ஆகும்.[1]

மேற்கோள் தொகு

  1. PALINOLOGIA DO MORRO DO PAPALÉO, MARIANA PIMENTEL (PERMIANO INFERIOR, BACIA DO PARANÁ), RIO GRANDE DO SUL, BRASIL
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_GUNA66_DPI/மணல்தொட்டி&oldid=2698830" இலிருந்து மீள்விக்கப்பட்டது