பயனர்:TNSE G KANDAVEL KPM/மணல்தொட்டி
சிறுபொழுதும் பெரும்பொழுதும்
தொகுவிளக்கம்
தொகுதமிழ் இலக்கணமானது ஐவகைப் பெரும் பிரிவுகளைக் கொண்டது, அதில் ஒரு பிரிவிவானது பொருள் இலக்கணமாகும்,பொருள் இலக்கணமானது இரண்டு வகையாகப் பிரிக்கப்படும்.அவை 1.அகப்பொருள், 2.புறப்பொருள்
அகப்பொருள்
தொகுஅகப்பொருள் மூன்று வகைப்படும், அன்புடையக் காமம், பொருந்தாக் காமம்,ஒருதலைக்காமம் ஆகும்.
இம்மூன்றுக்கும் பொதுவாக அமைந்த அகத்திணை, புறத்திணை என்ற இரு பிரிவுகளை பொருள் என்ற பிரிவில் முப்பிரிவுகள் உள்ளன.
பொருள் வகை
தொகுமுதற்பொருள்
கருப்பொருள்
உரிப்பொருள் ஆகும்.
முதற்பொருள்
தொகுமுதற்பொருளானது நிலமும்,பொழுதும் ஆகும்.
இதில் நிலம் ஐவகை பகுப்பை உடையது
பொழுதின் வகை
தொகுபொழுதானது இரண்டு வகையாக பிரிக்கப்படும்
சிறு பொழுது ,பெரும்பொழுது
சிறுபொழுது
தொகுசிறுபொழுது என்பது ஒரு நாளின் ஆறு கூறுகளாகும்.
வரிசை
எண் |
பொழுதின் பெயர் | விளக்கம் | கால நேரம் | எத்தினைக்குரியது |
---|---|---|---|---|
௧ | யாமம் | நள்ளிரவு | பின்னிரவு 12 மணிமுதல் முன்னிரவு 2 மணி வரை | குறிஞ்சி |
௨ | வைகறை | சூரிய உதயம் | முன்னிரவு 2 மணி முதல் பின்னிரவு 6 மணி வரை | மருதம் |
௩ | காலை | வெயிலின் துவக்கம் | முற்பகல் 6 மணி முதல் முற்பகல் 10 மணி வரை | பொருத்தப்படவில்லை |
௪ | நண்பகல் | வெயிலின் உச்சம் | நண்பகல் 10 மணி முதல் நண்பகல் 2 மணி வரை | பாலை |
௫ | எற்பாடு | சூரியனின் மறைவு | பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 6 மணி வரை | நெய்தல் |
௬ | மாலை | இரவின் துவக்கம் | பிற்பகல் 6 மணி முதல் முன்னிரவு 10 மணி வரை | முல்லை |
காலை என்னும் சிறுபொழுதை சில வேலைகளில் மருதத் திணைக்கு பொருத்துவர்.
சங்கக் காலத் தமிழர்கள் சிறுபொழுதை கணக்கிட்டு
பெரும்பொழுது
தொகுபெரும்பொழுது என்பது ஓர் ஆண்டின் ஆறு கூறுகளாகும்.
வரிசை எண் | பொழுதின் பெயர் | விளக்கம் | மாதங்கள் | எத்தினைக்களுக்கு உரியவை |
---|---|---|---|---|
௧ | கார்காலம் | மழையின் துவக்கம் | ஆவணி , புரட்டாசி | முல்லை,மருதம்,நெய்தல் |
௨ | கூதிர்காலம் | மழையின் உச்சம் | ஐப்பசி,கார்த்திகை | குறிஞ்சி,மருதம்,நெய்தல் |
௩ | முன்பனிக்காலம் | காலைநேரப் பனி | மார்கழி,தை | குறிஞ்சி,மருதம்,நெய்தல் |
௪ | பின்பனிக்காலம் | மாலைநேரப் பனி | மாசி, பங்குனி | பாலை,மருதம்,நெய்தல் |
௫ | இளவேனிற்காலம் | வெயிலின் துவக்கம் | சித்திரை, வைகாசி | பாலை ,மருதம்,நெய்தல் |
௬ | முதுவேனிற்காலம் | வெயிலின் உச்சம் | ஆனி,ஆடி | பாலை,மருதம்,நெய்தல் |
சங்கக் காலத் தமிழர்கள் பெரும்போழுதை கணக்கிட்டு வேளாண் பயிர்களை பயிர் செய்து வந்தனர்.
மேற்கோள்
தொகுநம்பியகப்பொருள் - தேவிரா உரை
வகைமை நோக்கில்தமிழ் இலக்கிய வரலாறு - பாக்யமேரி