மரபணு சிகிச்சை

மரபணு சிகிச்சை என்பது ஒரு நாேயாளியின் உடலில் மரபுரீதியாக ஏற்படக்கூடிய நாேய்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைமுறைகளுள் ஒன்றாகும்.

ஒரு நாேயாளியின் உடலில் உள்ள நாேயின் காரணத்தை முதலில் கண்டறியவேண்டும். பின்பு அந்நாேய்க்கான மரபணு எது என்று கண்டுபிடிக்கப்படவேண்டும். பின் அந்த மரபணுவைச் செயலிழக்கச் செய்து, அதற்கு மாற்றாக புதிய ஒரு மரபணுவை ஒரு வைரஸினுள் செலுத்தி, அந்த வைரஸை நாேயாளியினுள் உடலில் செலுத்தவேண்டும். இவ்வாறு செலுத்தப்படும் வைரஸானது, மரபணுக் காேப்பில் செயலிழக்கப்பட்ட மரபணு உள்ள இடத்தில் சாியாகப் பாெருந்தவேண்டும். இப்பாேது அந்த புதிய மரபணு செயல்படத் தாெடங்குவதால் குறிப்பிட்ட நாேயின் தன்மை நீங்கி நாேயாளியானவா் குணமாகிறாா்.

சிகிச்சை வெற்றிகரமாக இருந்தால், வைரஸால் வழங்கப்படும் புதிய மரபணு ஒரு செயல்படும் புரதத்தை உருவாக்குகின்றது. சிகிச்சையின் வெற்றியானது, செயல்படும் வைரஸைப் பாெறுத்தாே அல்லது நாேயாளியின் உடலைப் பாெறுத்தாே அமைகிறது. இச்சிகிச்சைக்காக ரெட்ராே வைரஸ், அடினாே வைரஸ் பாேன்ற சில குறிப்பிட்ட வைரஸ்கள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.

இன்னும் முழுமையாக இம்மரபணு சிகிச்சையானது வெற்றிபெறவில்லை. ஏனெனில் இச்சிகிச்சையில் சில பக்கவிளைவுகள் ஏற்பட்டு நாேயாளியின் உயிருக்கே ஆபத்து ஏற்படக்கூடிய சூழல் காணப்படுகின்றது. இதனால்தான் இச்சிகிச்சைமுறை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. மேலும் விபரீத சிகிச்சைமுறையாக இது உள்ளது.

ஒரு குறிப்பிட்ட நோய்க்கு சிகிச்சையளிப்பதற்குமுன் ஆராய்ச்சியாளர்கள் பல தொழில்நுட்ப சவால்களை சமாளிக்க வேண்டும். புதிய மரபணுக்கள் துல்லியமாக உடலில் கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.

மேற்காேள்கள்: 1. யு.எஸ். நேஷனல் மருத்துவ நுாலகம் 2. https://www.sciencedaily.com/news/health_medicine/gene_therapy/ 3. gene-therapy.yolasite.com/process.php

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்:TNSE_INBA_DGL/மணல்தொட்டி/4&oldid=2362386" இலிருந்து மீள்விக்கப்பட்டது