பயனர்:TNSE JAYAGANDHI DIET MDU/மணல்தொட்டி

அச்சில் தீவு

மலைப்பாங்கான அச்சில் தீவு (achill island) அயர்லாந்து நாட்டின் மேற்கு கடற்கரையோரம் 54 00” வடக்கு 10 00” மேற்கில் அமைந்துள்ளது. இத்தீவு அயர்லாந்தின் நிலப்பரப்பிலிருந்து அச்சில் ஆழ்கடலினால் பிரிக்கப்பட்டுள்ளது. இதன் பரப்பு 145 சதுர கி.மீ. சிலீன் குரோக்கான் சிலிவ் மோர் என்ற இரு உயரமான மலைமுகடுகள் இத்தீவிலுள்ள பகுதிகளாகும. இவை முறையே 668 மீட்டர் 672 மீட்டர் உயரமுடையவை. அதிக அளவு சதுப்பு நிலப்பரப்பையும் அழகிய கடலோரப் பகுதிகளையும் இத்தீவு கொண்டுள்ளது. மீன் பிடித்தலும் விவசாயமும் இத்தீவின் முக்கிய தொழில்களாகும். சுற்றுலாத் துறையின் மூலமும் கோடைக் காலத்தில் இங்கிருந்து இங்கிலாந்து, ஸ்காட்லாந்து நாடுகளுக்கு சென்று உழைக்கும் விவசாயிகள் மூலமும் இத்தீவிற்கு ஓரளவு வருவாய் கிடைக்கிறது. [1]

  1. Thanjavur University, Arivial kalanjiyam, volume -1